தாம்பரம் பட்டதாரி பெண் கொலையா, தற்கொலையா?: விடை தெரியாத வினாக்கள்
ஜூலை 19,2009,00:00 IST
சென்னை புறநகரில் பட்டதாரி பெண் ஒருவர், மர்மமான முறையில் இறந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார், அது தற்கொலை தான் என அடித்துச் சொல்ல, பிரேதப் பரிசோதனை அறிக்கையும் அதையே சொல்ல, மனோதத்துவ நிபுணர்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.
திருச்சி, லால்குடி, நன்னிலம் கிராமத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து மகன் அன்புச்செழியன் (24). அரியலூர், அரசு நகரை சேர்ந்த நாகரத்தினம் மகள் ஆஷா பிரியதர்ஷினி (23). இவரும், அன்புச்செழியனும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் எம்.எஸ்சி., ஐ.டி., படித்து வந்தனர். பலரையும் போலவே அவர்களுக்குள்ளும் காதல் மலர்ந்தது. கல்லூரி படிப்பை முடித்த இருவருக்கும், சென்னையில் வேலை கிடைத்தது. அன்புச்செழியன் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தின் துரைப்பாக்கம் பிரிவில், ஆஷா பிரியதர்ஷினி வேலை பார்த்தார். இவர்கள் காதல் விவகாரம், வீட்டுக்குத் தெரியவந்தது. வழக்கம் போல, ஜாதி குறுக்கே வந்தது. யூகித்தது போலவே, பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின், திருமணத்திற்கு சம்மதித்தனர். கடந்த பிப்ரவரி 6ம் தேதி அன்புச்செழியன் - ஆஷா பிரியதர்ஷினிக்கு திருமணம் நடந்தது. பத்து நாட்களுக்கு முன் கீழ்கட்டளை, சவுந்தரராஜன் நான்காவது தெருவில் குடிவந்தனர். கடந்த 15ம் தேதி ஆஷா பிரியதர்ஷினிக்கு பிறந்த நாள் வந்தது. அன்புச்செழியன், வழக்கம் போல அன்று வேலைக்குச் சென்றுவிட்டார். பின், அலுவலகத்தில் இருந்து ஆஷாவுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் பதில் இல்லாததால், ஆஷாவின் அலுவலகத்தை தொடர்பு கொண்டார்.
ஆஷா, அலுவலகத்திற்கு வரவில்லை என்று தகவல் கிடைத்தது. சந்தேகமடைந்த அன்புச்செழியன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, நிர்வாண நிலையில் ஆஷா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்த போலீசார், ஆஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். "அன்புச்செழியனின் சகோதரர் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களும் தன்னுடன் வசிக்க வேண்டும் என அன்புச்செழியன் விரும்பினார். அதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்தார். "இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அன்புச்செழியன், "என் உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வரக் கூடாது என்கிறாய். எனவே, உனது வீட்டில் இருந்து யாரும் இங்கு வரக்கூடாது. அவர்களுடன் நீ பேசக்கூடாது' என்று கட்டளையிட்டார். "பிறந்த நாள் அன்றும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. குளித்துவிட்டு வந்த ஆஷாவுடன் போனில் அன்புச்செல்வன் தகராறு செய்ததால் மனமுடைந்து, நிர்வாண நிலையில் தற்கொலை செய்துகொண்டார்' என போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆஷா தற்கொலை செய்து கொண்டதை பிரேதப் பரிசோதனை அறிக்கையும் உறுதிபடுத்தியதாக அவர்கள் கூறினர். தற்கொலைக்கு தூண்டியது; உறவினர்களுடன் பேச தடை விதித்து தாக்கியதாக போலீசார் வழக்கு பதிந்து, அன்புச்செழியனை கைது செய்தனர். ஆனால், இதுவரை கேள்விப்பட்டிராத வகையில், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஆஷா பிரியதர்ஷினி, நிர்வாணமாக மரணமடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. குளித்துவிட்டு அப்படியே வந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதுகுறித்து, மனநல மருத்துவர் ருத்ரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: குழந்தைப் பருவத்தில் நம்மை மற்றவர்கள், "ஷேம் ஷேம்' என்று கேலி செய்வதை நாம் அவமானமாக கருதுவோம். வளர்ந்த பிறகு, அந்த உணர்வு இன்னும் அதிகமாகும்; அது அப்படியே மனதில் பதிந்து போய்விடும். ஆடை சற்று விலகும்போது கூட, உடனே அதை உணர்ந்து ஆடையை சரி செய்துகொள்ளும் அளவிற்கு மனிதர்களுடைய உணர்வு நிலை இருக்கும். தன்னை நிர்வாண நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் மனிதர்கள், மிகுந்த கவன உணர்வோடு இருப்பர். ஒருவன் தன்னை நிர்வாணமாக காட்டிக்கொள்வதற்கு பெருந்தைரியம் தேவைப்படும்.
மனிதர்களால் அது இயலாது. மற்றவர்கள் முன், தன் மானம் பறிபோகும் நிலையை தானாக ஒருபோதும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. மனிதர்களுக்குள் இருக்கும் அந்த விழிப்புணர்வு மற்றும் கூச்சம், அதற்கு இடம் கொடுக்காது. தன்னிலை மறந்து போதையில் தள்ளாடும் நிலையில் கூட இந்த விழிப்புணர்வு இருக்கும். எனவே, நிர்வாண நிலையிலேயே அந்தப் பெண் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு டாக்டர் ருத்ரன் கூறினார். அப்படியென்றால், ஆஷா பிரியதர்ஷினியின் மரணம் கொலையா, தற்கொலையா?
 From the news I strongly feel it is a brutal murder. Culprits must be punished. I do not think, the law will be allowed to do its duty...
|
by A.P. Ratha Krishnan,Dubai,India 21-07-2009 21:59:51 IST |
 What... anyone with little common sense would say this can not be a sucide and it requires a thorough investigation to find out the truth. Police department have any of that sense? I am sure they do.. but I am sure they have lot more pressure to cover it up. Where is justice?
|
by EK Elan,Virginia,United States 20-07-2009 20:53:24 IST |
Post Your Comments for the Article
மேலும் சம்பவம் செய்திகள்