Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
அரசு மவுனம் ஏன்? பா.ஜ., கேள்வி
ஜனவரி 07,2009,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி : பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் கொண்டு வந்த சட்டம் குறித்து, மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? இது தொடர்பாக தங்களின் நிலையை பிரதமரும், உள்துறை அமைச்சரும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என, அக் கட்சியின் தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.



அவர் மேலும் கூறியதாவது:பொடா சட்டத்தை ரத்து செய்தபின், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம் தேவை என்பதன் முக்கியத்துவத்தை தற்போது தான் மத்திய அரசு உணர்ந்துள்ளது.அதே நேரத்தில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பவில்லை. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தங்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தங்களின் மவுனத்தை கலைக்க வேண்டும்.இவ்வாறு பிரதாப் ரூடி கூறினார்.

Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்