360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி?
*ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.
கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.
கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.