Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
பன்றிக் காய்ச்சலை தடுக்க கைகொடுக்குது பசுவின் சீம்பால்
அக்டோபர் 02,2009,00:00  IST

ஆனந்த்(குஜராத்): பசுவின் சீம்பாலைக் கொண்டு பன்றிக் காயச்சலை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி மூலம் தெரிந்துள்ளது. மெக்சிகோவில் தோன்றிய பன்றிக் காய்ச்சல் நோய் இன்று உலகம் முழுவதும் பரவி, மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

 இந்தியாவில் மட்டும் இந்நோய்க்கு இதுவரை 290 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இருந்து 2,000க்கும் அதிகமானவர் பலியாகி உள்ளனர். அரசு இந்நோயைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் தயார் செய்து அளித்த போதிலும், இன்னும் கட்டுப் படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் 50 வருடகாலமாக பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஆனந்த் நகரில் நடந்த ஆய்வில், பசுவின் சீம்பால் மூலம் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.

ஆனந்த் நகர் அமுல் நிறுவனமும், மும்பையைச் சேர்ந்த பையோமிக்ஸ் நெட்ஒர்க் நிறுவனமும் சீம்பாலை வைத்து ஆய்வு மேற்கொண்டது. சீம்பாலில் உள்ள கொழுப்புச் சத்தை நீக்கி விட்டு, நோய் பாதித்த நபருக்கு அளிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல் குணமாகிறது என்று, இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு குறித்து, பையோமிக்ஸ் நிறுவன தலைவர் பவன் சர்மா கூறுகையில், "கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில் இருந்து, நானோ முறைப்படி கொழுப்பை பில்டர் செய்து எடுத்து விடுகிறோம். "நானோ பெப்டைடு என்ற இந்த கலவைக்கு, ராதா-108 என்று பெயரிட்டு இருக்கிறோம். இந்த திரவத்தை நோய் பாதித்தவரின் வாயில் ஊற்றும் போது, அது இதயத்திற்கு சென்று உடலின் மற்ற பாகங்களுக்கும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணுகிறது' என்கிறார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 This news seems to be very superficial. Let them understand how the H1N1 virus spreads. Don''t fall a prey to these kind of bogus claims unless proven.
Will they come out clean with a report on if they cured someone with the virus?
Let the government come up with a solid plan to release vaccination shots to the public.
Cow is sacred to India, but it doesn''t mean its milk will cure every thing. 
by Kanthappan,Chennai,India    02-10-2009 23:10:10 IST
 thanks your inf, we need very depth information about all 
by p raghupathi,erode,India    02-10-2009 10:06:50 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்