காரைக்கால் : குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, பன்றிக் காய்ச்சல் நோயிலிருந்து குணமடைய வேண்டி, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், பா.ஜ., சார்பில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன், பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் கணேசன், இதய அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் உள்ளார். இருவரும் பூரண குணமடைய வேண்டி, காரைக்கால் மாவட்ட பா.ஜ., சார்பில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடந்தது.இதற்கு, பா.ஜ., மாநில துணைத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
| வாசகர் கருத்து |
நடத்துங்க! நடத்துங்க! நல்லவங்களுக்காக பூஜை நடத்துங்க!. கணேசனும் மோடியும் நல்ல தலைவர்கள். பிரம்மசாரிகள். நாட்டை காக்க தன்னையே அற்பணித்தவர்கள் .அவர்கள் நீடூழி வாழ நாமும் பிரார்த்திப்போம். <ணீ>எஸ்.ஆர.சேகர்-கோவை
|
by S.R.s எஸ்.ஆர.சேகர்-கோவை ,coimbatore-tamilnaadu-,India 11/3/2009 7:08:47 PM IST |