Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
குருவாயூர் கோவிலில் ஜோதிமயம்
நவம்பர் 04,2009,00:00  IST

General India news in detail

குருவாயூர்: குருவாயூர் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி, தபால் துறை ஊழியர்கள் சார்பில், கோவிலில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. கேரளாவில், பிரசித்திப் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், இம்மாதம் 28ம்தேதி, குருவாயூர் ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது.



இதையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி இரவு, தீபங்கள் ஏற்றப்பட்டு, விழா துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, தபால் துறை ஊழியர்கள் சார்பில், ஏகாதசி விளக்கு உற்சவம் நடந்தது. இந்த உற்சவ காலங்களில் உதயாஸ்தமன பூஜைகள் நடைபெறாது. இரவு அத்தாழ பூஜை (ராக்கால பூஜை)க்கு பிறகு, ஏகாதசி விளக்குகள் ஏற்றப்படும். ஆனால், நேற்று முன்தினம், தபால்துறை ஊழியர்கள் சார்பாக நடந்த தீபமேற்றும் நிகழ்ச்சியில், அன்றைய தினம் மாலை தீபாராதனை நிகழ்ச்சிக்கு பின், கோவில் சுற்றுப் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. இதனால், கோவில் பிரகாரம் முழுவதும் தங்கம் ஜொலிப்பது போல் ஜோதிப் பிழம்பாக ஜொலித்தது. பின், இரவு அத்தாழ பூஜை முடிந்ததும், மீண்டும் வழக்கம்போல் தீபங்கள் ஏற்றப்பட்டன. குருவாயூர் ஏகாதசி உற்சவம் 29 நாட்கள் நடக்கும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 என்ர குருவாயுரப்பா என்மீதும் கொஞ்சம் கருணை காட்டப்பா: உன் தரிசனம் எனக்கு வேண்டும் ஐயா: 
by RAM YOGASUN,n.r.w,Germany    11/5/2009 12:57:02 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்