Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
திருமலையில் பவுர்ணமி கருட சேவை: ரூ. 2 கோடியே 45 லட்சம் உண்டியல் வசூல்
நவம்பர் 04,2009,00:00  IST

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி, கருட சேவை வெகு சிறப்பாக நடந்தது. திருமலை மாடவீதிகளில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி காட்சியளித்தார்.



 பக்தர்கள், கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், ஒரே நாளில், இரண்டு கோடியே 45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, செகந்திராபாத் நகரைச் சேர்ந்த ராகவன், களிங்கத்து பச்சை, சிகப்பு கற்கள் பதித்த, தங்கத்தினால் செய்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஒன்றை, நேற்று முன்தினம் காணிக்கையாக வழங்கினார். திருமலை அடிவாரத்தில், கலியுகதெய்வம் சீனிவாச பெருமாள், திருமலைக்கு பாதயாத்திரையாக செல்ல முதல் அடி வைத்த ஸ்ரீவாரி பாதம் அருகில், படி உற்சவம் சிறப்பாக நடந்தது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்