புதுடில்லி: வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நடுத்தர மற்றும் இளம் பெண்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நடுத்தர மற்றும் இளம் வயதில் ஆண்கள் தான் அதிகம் மாரடைப்புக்கு ஆளாகின்றனர், என்ற நடைமுறை உள்ளது. ஆனால், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற காரணங்களால் 55 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்கள் மாரடைப் பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், என கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இளம் பெண்கள் மகப்பேறு காலத்தில் மட்டுமே சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போதுள்ள காலச்சூழல் காரணமாக மன அழுத்தம், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிப்புக்குட்பட்டு மாரடைப்பை சந்திக் கின்றனர். கிராமப்புறம், நகர்புறம் என்ற வேறுபாடு இல்லாமல் தற்போது நடுத்தர பெண்கள் இந்த மாரடைப்புக்கு இரையாகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சத்தான உணவு போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த மாரடைப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
| வாசகர் கருத்து |