Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
மேற்கு வங்கம் எப்போது 'பங்க்ளா' ஆகப்போகிறது? பத்தாண்டாக காத்திருப்பு
நவம்பர் 04,2009,00:00  IST

புதுடில்லி: ஒரிசா இனி ஒதிஷா என்று அழைக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது; ஆனால், மேற்குவங்கம், "பங்க்ளா' என்று அழைக்கப்பட வேண்டும் என்று சட்டசபை ஒப்புதல் அளித்தும், மத்திய அமைச்சரவை முடிவெடுக்கவில்லை.



மேற்கு வங்க அரசு இது தொடர்பாக முடிவெடுத்து, "மேற்கு வங்கம் என்ற பெயரை, "பங்க்ளா' என்று மாற்றலாம் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. 1999ல் இதற்கு சட்டசபை ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட இந்த பரிந்துரை மீது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த தகவல், தகவல் கமிஷன் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.



 உள்துறையில் உள்ள தகவல் கமிஷன் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட ஒரு மனுவுக்கு, தகவல் கமிஷனர் பிரவீன் குமாரி சிங் பதில் அனுப்பியுள்ளார். "மாநிலத்தின் பெயரை மேற்கு வங்கம் என்பதை, "பங்க்ளா' என்று மாற்ற வேண்டும் என்று சட்டசபையில் மேற்குவங்க அரசு, 1999ல் தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் கோரியது' என்று பதிலில் கூறியுள்ளார். எனினும், மத்திய அரசு இது குறித்து பரிசீலித்ததா என்பது பற்றி, எதுவும் குறிப்பிடவில்லை.




 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்