புதுடில்லி: இந்தியாவில், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட் டிற்கு முற்றிலும் தடை விதிப்பதற்கு பதிலாக, அவற்றின் தயாரிப்பு தொடர்பாக கடும் விதிமுறைகள் விதிக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் கழிவுப் பொருள் மேலாண்மை விதிமுறைகள் குறித்து வரைவுக் குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட் டிற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது. புதிய விதிமுறையில், பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. அதில், 18து12 இன்ஞ் அளவு மற்றும் 40 மைக்ரான் தடிமனுக்கும் குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இறுதி திட்ட வரைவு இன்னும் பெறப்படவில்லை. பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தால், மக்கள் காகித பைகளுக்கு மாறும் சூழல் ஏற்பட்டு அதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளிலும், அது மறுசுழற்சி செய்யப்பட்டதா, முதல் முறை தயாரிக்கப்பட்டதா, அதன் அளவு, தடிமன், தயாரிப்பாளர் பெயர், முகவரி,மாநில மாசு கட்டுப் பாட்டு ஆணையம் வழங்கிய பதிவு ஆகியவற்றை இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் அச்சிடவும் அமைச்சகம் பரிந்துரைத்துள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.
| வாசகர் கருத்து |
It would be good to stop producing the Plastic Bags further...Instead produce Jute bags and made it available to everyone. It looks good and Nice. There wont be create any problem to environment also.
|
by P ஷங்கர்,chennai,India 11/4/2009 6:03:34 PM IST |
பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் ,,அதற்கு பதிலாக பேப்பர் பைகளை உபயோகிக்க வேண்டும் ,,இது மட்டும் தான் தீர்வாக இருக்க முடியும் ,,குடிக்க கடைகளை திறந்து விட்டு நான் குடிக்க சொன்னேனா என்று கேட்பது போலே இருக்கிறது,,பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்ய சொல்லி விட்டு ,,அதை உபயோகிக்காதே ,என சொல்வது ...ஒரு கண்டிப்பான உத்திரவு மூலம் தான் இதை கடை பிடிக்க முடியும் ,,செய்வார்களா ????
|
by k sathish,cbe,India 11/4/2009 9:01:07 AM IST |
it is good to know that the government creates such awareness .. But, it will be difficult to stop prodcution of such plastic bags. Instead create proper disposal system and made it available/accessible by every one.
|
by t raju,madurai ,India 11/4/2009 7:53:23 AM IST |