லக்னோ: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு அடையாள அட்டை வழங்கும் முன்னர், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் தன் மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகளை துவங்கி விட்டது.
தேசிய அடையாள அட்டை வழங்கும் கமிஷன் நந்தன் நிலேகனி தலைமையில் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அடையாள அட் டை வழங்க கடும் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் உ.பி.,யில் உள்ள ஒரு முஸ்லிம் கிராமம் தன் மக்கள் அனைவருக்கும் முன்னோடியாக அடை யாள அட் டை வழங்கும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. உ.பி.,யில் அம்பேத்கர் நகர் மாவட்டத் தில் உள்ளது அஸ்ரப்பூர் கிராமம். இது லக்னோவில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு 13 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இவர் களில் பெரும்பாலானவர் முஸ்லிம்கள். இங்கு புகழ் மிக்க ஹஸ்ரத் மக்தூம் ஷா என்ற தர்க்கா உள்ளது. இந்த தர்காவும் அங் குள்ள முஸ்லிம் கல்லூரியும் சேர்ந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இத்திட்டம் குறித்து அதன் செயல் அதிகாரி அலோக் குமார் சிங் கூறுகையில், "அடையாள அட்டை ஒவ்வொரு குடும் பத்துக்கும் ஒன்று வழங்கப்படும். அட்டையில் குடும்ப தலைவரின் போட் டோ ஒட்டி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அதில் குறிப்பிடப்படும்'என்றார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக எண் வழங்கப்படும்.
அதன்படி வசிக்கும் வாழ்விட தகுதி, பாலினம், மற்ற குடும்ப விவரங்கள் இன்டர் நெட் டில் பதிவு செய்யப் படும். விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் அட்டை வழங்கப்படும். யார் வேண்டுமானலும் விண்ணப்பித்து அட்டை வாங்கிக் கொள்ளலாம். "தர்காவை பார்க்க ஏராளமான யாத்திரிகர்களும், மாணவர்களும் வருகின்றனர். அவர்களிடம் இருந்து கிராம மக்களை அடையாளம் காண இந்த அட்டைகள் பயன் உள்ளதாக இருக்கும். அட்டை வழங்கும் பணிகள் இன்னும் ஓரிரு நாட் களில் ஆரம்பிக்கப்படும் என்றும் சிங் கூறினார்.
| வாசகர் கருத்து |