Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
நிரந்தர பணி கேட்கிறார் ருக்சானா
நவம்பர் 04,2009,00:00  IST

புதுடில்லி: தன் வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதியைக் கொன்று, குடும்பத்தினரை காப்பாற்றி வீரச் செயல் புரிந்த ருக்சானா, தனக்கு நிரந்தர அரசுப் பணி, குறிப்பாக துணை ராணுவப் படையில் பணி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்சானா(20).



இவர், தன் வீட்டிற்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியைக் கொன்று, குடும்பத்தினரை காப்பாற்றினார். ருக்சானாவின் வீரச்செயலை பாராட்டி, அவருக்கும், அவர் சகோதரர் மற்றும் மாமாவுக்கும், காஷ்மீர் மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பதவி வழங்கப்பட்டது. டில்லியில், பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ருக்சானா கூறியதாவது: பள்ளிக் குழந்தைகளுக்கும் ராணுவ பயிற்சி வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் அச்சத்தை ஒழித்து பயங்கரவாதத்தை ஒழிக்க தயாராவர்.



நான் நாட்டிற்காக என்னை அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். நாட்டிற்காக எந்த வேலையை செய்யவும் தயார். ஆனால், அது நிரந்தர மத்திய அரசு பணியாக இருக்க வேண்டும். குறிப்பாக, மத் திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்ற விரும்புகிறேன். சிறப்பு போலீஸ் அதிகாரி பணி தற்காலிகமானது. நான் டில்லியில் வசிக்கப் போவதாக, வெளியான செய்தி உண்மையல்ல. ஆனால், ரஜோரியில் வசிப்பது, என் குடும்பத்திற்கு பாதுகாப்பானது அல்ல. எனவே, ரஜோரியை தவிர பிற மாவட்டங்களில் பணி வழங்கினால் நல்லது. கடந்த வாரம் கூட பயங்கரவாதிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக, எங்கள் வீட்டை தாக்கினர். இவ்வாறு ருக்சானா கூறினார்.



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 இது ரொம்ப அதிகம்  
by kumar senthilkumar,kl,Malaysia    11/4/2009 10:38:40 PM IST
 ruksana deserves much more. w/out proper training if she can show such guts, imagine if she is trained properly.

Central Government should act immediately. 
by S Gopal,chennai,India    11/4/2009 7:28:43 PM IST
 Ruksana fully deserve and the Goverment should fulfil her request. Logically speaking without enough training when she showed such a gut to kill those terrorists, imagine if she has been encouraged with proper training how well she would well be able to perform and surely like ruksana there will be many to join. 
by Gopal,Chennai,India    11/4/2009 7:23:56 PM IST
 She''s looking for the central govt post not a state govt, 
by P MOHAN KUMAR,BANGALORE,India    11/4/2009 3:17:27 PM IST
 உண்மையான நியூஸ், அந்த பொண்ணுக்கு எந்த கிராஜூவடியும் இல்லாமல் வேலை உத்தரவாதம் இல்லாமல் வெறும் RS.3000
sambalam endral eppadi eattrukkolval ?
Jahufer -jeddah.K.S.A

Pls.Print this. 
by S.S Jahufer,JEDDAH,India    11/4/2009 1:01:17 PM IST
 மத்திய அரசு வேலை தான் வேண்டுமாம்...மாநில அரசு வேலை வேண்டாமாம்..... அப்படியா?? 
by H Makudum,Abu Dhabi,United Arab Emirates    11/4/2009 12:38:35 PM IST
 கால்வாயை தாண்டவே கால் இல்லியாம். கடலைத் தாண்டுறதுக்கு ஆசைப்படுறியேம்மா!. நம்ம கவர்மெண்ட்டே உன்னை வெச்சி பாலிடிக்ஸ் பண்றதுக்குத்தான் சிறப்பு அதிகாரி பொறுப்பு, துப்பாக்கியெல்லாம் கொடுத்திருப்பாங்க. அரசாங்கத்த பத்தி தப்புத் தப்பா புரிஞ்சிருக்கியேம்மா! அவுங்களுக்கு ஊழல் பண்றதுக்கும், அத மறைக்கிறதுக்குமே நேரம் சரியா இருக்கும். 
by s. அப்துல்லா கான்,UAE,United Arab Emirates    11/4/2009 8:44:22 AM IST
 Her request may be fulfilled as an encouragement and to induce courage and curtile cowardness. Best of luck. 
by M.S. Chandramouli,Chitlapakkam, Tamil Nadu,India    11/4/2009 7:22:07 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்