Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பு ரூ. 32 ஆயிரம் கோடி
நவம்பர் 04,2009,00:00  IST

ஐதராபாத்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிலையான சொத்துக்களும், 52 கோடி ரூபாய்க்கு, தங்கம், வெள்ளி ஆபரணங்களும் இருப்பதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



 திருமலை திருப்பதி தேவஸ்தானம், அதன் சொத்து மதிப்பு பட்டியலை தாக்கல் செய்யும்படி, சில மாதங்களுக்கு முன், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தேவஸ்தான நிர்வாகம், நேற்றுமுன்தினம் (திங்கள் கிழமை), ஐகோர்ட்டில், சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் வரை, 72 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் உள்ளன. அதில், வெங்கடேச பெருமானின் ஆபரணங்கள் மட்டும் 52 கோடி ரூபாய் மதிப்புடையவை. ஆபரணங்களுக்கு, தற்போதைய மார்க்கெட் மதிப்பை கணக்கில் கொள்ளவில்லை.



பூர்வகால தேவஸ்தான ஆவணங்களின்படியே, கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில், தேவஸ்தானத்திற்கு காணிக்கை கிடைத்துள்ள தங்க ஆபரணங்களின் விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நிலையான சொத்துக்களின் மதிப்பு 32 ஆயிரம் கோடி ரூபாய். இதுவும், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, மதிப்பிடப்பவில்லை. இவ்வாறு பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 oh god! idhu ungaluke niyayama...namma oorla ethanai kudumbam varumaiyala vadditu irukuthu....pasangaluku nalla padipilla...konjam karunaiya kattapa.... appadiye ennaiyum konjam gavanipa.... 
by d thamizhachi,india,India    11/5/2009 1:20:53 AM IST
 இந்த சொத்துகளை அரசின் நல திட்டங்களுக்குகாக கோவில் நிர்வாகம் கொடுக்கலாம்...... மக்கள் சொத்து மக்களுக்கு பயன்படட்டும்  
by sk ராஜ்,coimbatore,India    11/4/2009 11:23:29 PM IST
 நீதிபதிகள் முழுசாக முதலில் சொத்துக் கணக்கைக் காட்டட்டும்..ஆண்டவன் சொத்து கணக்கை அப்புறம் கேக்கலாம் ..பிரகதீஸ்வரன்..சார். உழைத்து உயர்வோம் .... 
by Dr.S Ashokan,Chennai,India    11/4/2009 8:19:13 PM IST
 please divert some money to the poor people & disabled people.

Also spend money on green power generation like wind , solar & bio gas kind of thing.

Start new industries to give chance to the educated youngers to develop INDIA.

Best Regards,
SURESH ABBU.K
PONDICHERRY. 
by Mr சுரேஷ் babu,pondicherry,India    11/4/2009 7:39:07 PM IST
 ''ஆபரணங்களுக்கு, தற்போதைய மார்க்கெட் மதிப்பை கணக்கில் கொள்ளவில்லை. இந்த நிதி ஆண்டில், தேவஸ்தானத்திற்கு காணிக்கை கிடைத்துள்ள தங்க ஆபரணங்களின் விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை ,நிலையான சொத்துக்களின் மதிப்பு 32 ஆயிரம் கோடி ரூபாய். இதுவும், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி,மதிப்பிடப்பவில்லை.''அப்புறம் என்னத்துக்கு சொத்து விவரத்தை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யணும் ?
 
by R Romeo,kuwait,Kuwait    11/4/2009 6:29:16 PM IST
 கோவிந்தா !!! கோவிந்தா!!! இப்பவே கண்ணை கட்டுதே...
 
by velu jayaraj,Coimbatore,India    11/4/2009 4:57:27 PM IST
 வெங்கடேச பெருமாளே கொஞ்சம் கருணை காட்டப்பா
கோவிந்தா !!! கோவிந்தா !!!!!!!  
by s deenadayalan,chennai,India    11/4/2009 2:34:19 PM IST
 வறுமையில் வாடுபவருக்கு கொஞ்சம் தள்ளிவிடப்பா ... ஏழு கொண்டலவாடா....
இவ்வளவு சொத்தை வச்சுக்கிட்டு; கண்ணை வேற மூடிகிட்டு ... (என்ன இதெல்லாம்?)..... 
by M பிரகதீஸ்வரன்,Ahmedabad,India    11/4/2009 11:49:31 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்