Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
சிறை சீரமைப்பு திட்டத்துக்கு கைவிரிப்பு
நவம்பர் 07,2009,00:00  IST

General India news in detail

புதுடில்லி: சிறைச்சாலைகளை சீரமைக்க உள்துறை அமைச்சகம் கோரிய நிதியை ஒதுக்க நிதி அமைச்சகம் மறுத்து விட்டதால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆயிரத்து 276 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 கைதிகளை அடைக்க வேண்டும்.



ஆனால், தற்போது இந்த சிறைகளில் 3 லட்சத்து 76 ஆயிரம் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், பீகார், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சிறைகளை மேம்படுத்த மத்திய அரசின் உதவியை கோரியுள்ளன.எனவே, புதிதாக 500 நவீன சிறைகளை கட்ட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டது. சிறைச்சாலைகளில் கைதிகள் தங்கள் உறவினரோடு வாரத்தில் ஒரு நாள் தொலைபேசியில் பேசுவதற்கான வசதி, மருத்துவ வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை அமைக்க நான்காயிரம் கோடி ரூபாய் அளவில் திட்டம் தீட்டப்பட்டது.



ஆனால், இந்த திட்டத்துக்கு நிதியமைச்சகம் கைவிரித்து விட்டது. "நிதி தேவையென்றால் திட்ட கமிஷனை அணுகுங்கள்' என, நிதியமைச்சகம் கூறியுள்ளது. நிதியமைச்சகத்தின் இந்த பதிலால் சிறை சீரமைப்பு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்