Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
'டிவி' முதல் 'ஏசி' வரை தட்சணை வாங்கும் புரோகிதர்கள்
நவம்பர் 07,2009,00:00  IST

General India news in detail

புதுடில்லி: டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் வரை, எல்.சி.டி., "டிவி' முதல் "ஏசி' வரை ஏராளமான பரிசு பொருட்கள் பெறுகின்றனர்.



இதுகுறித்து, லட்சுமி நகரை சேர்ந்த கிரிஷன் காந்த் சர்மா என்பவர் கூறுகையில், "நாங்கள் பரிசு பொருட்கள் எதுவும் கேட்பதில்லை. அவரவர் அந்தஸ்திற்கேற்ப அவர்களாகவே கொடுக்கின்றனர். "யாராவது கொடுக்கும் போது நாங்கள் அதை வாங்க மறுப்பதில்லை' என்றார்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி வைத்த திருமணம் ஒன்றிற்காக, "டிவி' ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில், அவர் மியூசிக் சிஸ்டம், "சிடி' பிளேயர், நான்கு வாட்சுகள், மூன்று போன்கள் ஆகியவை பரிசாக பெற்றுள்ளார்.



புரோகிதர் ஒரு திருமணத்தை நடத்தி வைத்து, 51 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக, மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இஷாங்க் சபர்வால் என்பவர் தெரிவித்தார்.இதுகுறித்து திருமண ஏற்பாடு செய்யும் கரிமா குமார் என்பவர் கூறுகையில், "வெளிநாடு வாழ் இந்தியர்கள், குஜராத்திகள் ஆகியோர் தான் திருமணங்களுக்கு அதிகளவில் செலவு செய்கின்றனர்.



"புரோகிதர்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு "ஏசி' பிரிட்ஜ் போன்றவற்றை பரிசாக பெறுவதாக, என் நண்பர்கள் மூலம் கேள்விபட்டுள்ளேன். மூன்றாண்டு காலமாக என் பணி மூலமும் இதை நேரில் பார்த்துள்ளேன்' என்றார்.இதுகுறித்து சமூகஆர்வலரான யோகேந்திர சிங் என்பவர் கூறுகையில், "அந்த காலத்தில் கால்நடைகள் பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது, பணம் மற்றும் பொருள் என வளர்ச்சியடைந் துள்ளது.
"தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குவது இந்திய பாரம்பரியத்தின் விரிவடைந்த நிலை' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 Lion dr.Sekar is perfectly analysed. I agree with him. the Purohits are like our gurujis and giving dakshinai to them is not immoral. we have to give due rspect to them.
Jayaram from chennai 
by s. Jayaram,Chennai,India    11/7/2009 6:43:40 PM IST
 நவீன புரோகிதர்கள்... அப்படி தான் இருப்பார்கள் .... கலி காலம்... 
by m மது,singapore,Singapore    11/7/2009 11:55:55 AM IST
 டிவி'' முதல் ''ஏசி'' வரை தட்சணை வாங்கும் புரோகிதர்கள்:
ப்ரோகிதர்கள் திருமணத்தின்போது மட்டும்தான் வரதட்சினை வாங்குகிறார்கள்.ஆனால் தினம் தினம் வரதட்சினை வாங்குகிறார்கள். அவர்கள் விபரமும் வெளியிட்டால் நான்றாக இருந்திருக்கும்.
சொந்த வீடு உள்ளவர்களிடம் தட்சிணை வாங்குபவர்கள் குடிநீர்வாரிய ஊழியர்கள். கர்ப்பரஷன் ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், வாகனம் வைத்து இருந்தால் காவல் துறையினர், போக்குவரத்து துறையினர், வியாபாரம் செய்பவராக இருந்தால் வணிக வரியினர், தொழிலார்கள் நல ஆயுள் காப்பீட்டு துறையினர், வைப்பு நிதி துறையினர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வசதி உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு தானாகவே கொடுத்தால் அது தானம் அல்லது அவர்கள் மன நிறைவிற்காக தரும் ஒரு நினைவுச் சின்னம்,. ஆனால் இதுவே அரசு ஊழியர்களுக்குத் தந்தால் அது ?
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொண்டு வரும் விலை கூடிய பொருட்க்களை நம்மவர்கள் தான் காசு கொடுத்து வாங்கியது போன்று அவர்கள் கண் முன்னாலேயே எடுத்துத் தன பையில் போட்டுக்கொள்வது ?
இந்திய கலாச்சாரம் ஆசான்களுக்கு மதிப்புத் தருவது என்பது மரபு. மேலும் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடும் ஒரு குருவிற்கு அவர்கள் தரும் ஒரு பரிசுப்போருட்க்கள் காணிக்கையே தவிர லஞ்சம் இல்லை. இதே ப்ரோகிதர்கள் கேட்டு வாங்கினால் அது குற்றம். மன்னிக்க முடியாதது.
Lion Dr S Sekar
India 
by Ln Dr S Sekar,Chennai,India    11/7/2009 7:13:47 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்