Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் இலங்கை அகதிகள் எதிர்பார்ப்பு
நவம்பர் 07,2009,00:00  IST

General India news in detail

மதுரை: இலங்கை அகதிகளுக்கு "இரட்டை குடியுரிமை' வழங்க வேண்டும் என முகாமில் ஆய்வு செய்த அமைச்சர் தமிழரசியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்யும் படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.



மற்ற மாவட்ட முகாம்களை அந்தந்த பகுதி அமைச்சர் கள் ஆய்வு செய்த நிலையில், மதுரை மாவட்ட முகாம்கள் ஆய்வு செய்யப் படாதது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. நேற்று அமைச்சர் தமிழரசி இம்முகாம்களை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் மதிவாணன், மூர்த்தி எம்.எல்.ஏ., பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் முகமதுயூசுப், தாசில்தார்கள் உதயகுமார், அழகுமீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ் வரி சென்றனர்.கூடல்நகர் ஆனையூர் முகாம் அகதிகள் புகார் தெரிவித்தனர்.



"சாக்கடை நிரம்பி வழிகிறது. மழையால் வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. வசதியான ரோடு இல்லை. இருநாட்டுக்கும் சென்று வர "இரட்டை குடியுரிமை' வழங்க வேண்டும்' என்றனர். அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 3 முகாம்களிலும் 1573 குடும்பங்களைச் சேர்ந்த 5232 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகள் பற்றி இன்று மாலையே முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்படும்' என்றார். பின் அவர் உச்சப்பட்டி, திருவாதவூர் முகாம்களுக்குச் சென்றார்.




அவசர ஆய்வு: ஆனையூர் அகதிகள் முகாம், தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. நல்ல ரோடு, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை. வீடுகள் மோசமான நிலையில் இருந் தன. ஆய்வு நடத்த சென்ற அமைச்சர் தமிழரசி முகாமுக்குள் சென்று பார்வையிடவில்லை. இரு இடங்களில் நின்றபடி குறைகளை கேட்டார். மனு பெற்றார். உச்சப்பட்டி, திருவாதவூர் முகாம்களில் மனுக்களை பெற் றதுடன், இடங்களை சுற்றிப் பார்க்கவில்லை. பத்தே நிமிடங்களில் திரும்பிவிட்டார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 தயவு செய்து அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவும்....எத்தனை வருட அகதி வாழ்க்கை அவர்களுக்கு.....எதிலும் ஒரு மனித நேயத்தில் சிந்தியுங்கள்...அகதியாக வாழ்பவர் களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.... 
by g moorthy,madurai,India    11/8/2009 12:00:31 AM IST
 Mr. Manohar,
U don''t have to worry about India turning into Refugee camp. Your politicians will take care of it even if we are not there. This is a free world, everyone has the right to live anywhere as long as they can live equally socially with the locals. You became Indian just because you are born there. Likewise, someone lived in india about 10 to 20 years and got used to the lifestyle and surroundings should be considered a citizen of India.
In America or Canada and other advanced countries, if a foreigner lived for 5 to 15 years continuously, they automatically become a citizen. And these countries are far more advanced than India. These countries didn''t become one big refugee camp!  
by VT Tamil Magan,America,United States    11/7/2009 10:38:15 PM IST
 please don''t give dual citizenship to Srilankan refugees.

For Example, Canada, France, Swiss and paris gave citizenship to refugees and they do all the dirty things and spoil their country.

Also they will spoil our Tamil nadu with our bad politicians and actors.

PLEASE PLEASE DONT GIVE INDIAN CITIZENSHIP TO SRILANKAN REFUGEES

 
by தினேஷ்,Chennai,India    11/7/2009 10:00:21 PM IST
 கனடா,ஜெர்மனி,இங்கிலாந்து,சுவிற்சர்லாந்து போன்ற வேற இனத்தை,மதத்தை,கண்டத்தை,மொழியைசேர்ந்த நாடுகள் எல்லாம் லட்சகணக்கான இலங்கை அகதிகளுக்கு தங்கள் நாட்டு குடிஉரிமை வழங்கி உள்ளது ஆனால் இந்தியா 
by jije,london,India    11/7/2009 8:56:21 PM IST
 என்னது இரட்டை குடியுரிமையா? இந்தியா என்ன அகதி முகாமா? இலங்கையில் போர் முடிந்துவிட்டது. இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை எவ்வளவு சீக்கிரம் இலங்கை அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பி அனுப்ப வேண்டும். ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், திபேத், இலங்கையிலிருந்து வந்து இந்தியாவில் தங்கி இருக்கும் ஒரு தம்படிக்கு பிரயோஜனமில்லாத எல்லா அகதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவே அகதி முகாமாக மாறிவிடும்.  
by R Manohar,chennai,India    11/7/2009 2:26:45 PM IST
 America will provide visa for those kind of people only.  
by v christopher,sanaa,Yemen    11/7/2009 11:10:02 AM IST
 விடுத்த கோரிக்கை மத்திய அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு பதிலாக, இலங்கை அரசு இலங்கை கடவு சீட்டு கொடுத்துவிட்டால் ''வெளிநாட்டு இந்திய குடிமகன்'' என்னும் (Overseas Citizen of India) சான்றிதழ் அட்டை இந்திய மத்திய அரசு கொடுக்க வேண்டும். அது இல்ங்கை தமிழர் கேட்கும் இரட்டை குடியுரிமை தான். அது சரி, இலங்கை தமிழர் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அதை உரிய முறையில் பரிசீலிப்பார்கள். நீங்கள் ஏன் அபசகுனமாக, எதிர்மறை பதில் சொல்ல வேண்டும்? கலைஞருக்கும் தமிழக அமைச்சருக்கும் அந்த அதிகாரம் இருப்பதாக யாரும் சொல்லவில்லையே.  
by R புதியவன் ராஜ்,New Delhi,India    11/7/2009 5:51:23 AM IST
 பொறுப்பில்லாம நடந்துட்ட இந்த அமைச்சர உடனே பதவிய விட்டு தூக்கணும்!இல்லாட்டி அதே முகாமில் பத்து நாள் தங்க சொல்லணும். இதே அலட்சியம்தான் அவரது எல்லா செயல்களிலும் இருக்கும்.பதவி வேணும்னு கைய கால புடிபாங்க அப்புறம் எல்லாரும் இவங்க கால புடிக்கனும்னு நினைகிறாங்க.
தி மு க நலம் விரும்பி.
பாலா,பத்தான் நண்பர்கள்
 
by TKB பாலா,பத்தான் ,இந்தியா,India    11/7/2009 3:36:16 AM IST
 அமைச்சர் தமிழரசி அல்லது முதல்வர் கருணாநிதி இரட்டை குடியுரிமை பற்றி முடிவு செய்ய முடியாது. அப்பாவி மக்களை எவ்வளவு நாள்தான் வஞ்சனை செய்வீர்கள்?

 
by MKM மன்னார்சாமி ,Chennai,India    11/7/2009 2:46:59 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்