காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று தொழிலதிபர் விஜய் மல்லையா சுவாமி தரிசனம் செய்தார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று காலை 11.3 0 மணியளவில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் வந்தார். அவரை கோவில் நிர்வாகி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் வரவேற்றனர். சொர்ண கணபதி, முருகர், மகாலட்சுமி, துர்கை, தர்பாரண்யேஸ்வரர் சுவாமிகளை விஜய் மல்லையா குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். அங்கு விஷேச பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
| வாசகர் கருத்து |
சாராய வியாபாரிக்கு தொழில் நட்டமா?
|
by M N,Tirunelveli,India 11/7/2009 11:01:17 AM IST |