Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
நவம்பர் 09,2009,00:00  IST

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திருச்சி, தஞ்சை உட்பட 11 டெல்டா மாவட்டங்களில் 13.5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 23,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.



 நீர் வரத்து குறைந்து, நீர் வெளியேற்றம் அதிகரித்ததால் அணை நீர்மட்டம் கடந்த 30ம் தேதி 72.900 அடியாகக் குறைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது. டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால், சம்பா பாசனத்திற்கான நீர் தேவை குறைந்தது. அதனால், மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, கடந்த 28ம் தேதி வினாடிக்கு 12,000 கன அடியாகவும், 29ம் தேதி 8,000 கன அடியாகவும், 30ம் தேதி 3,000 கன அடியாகவும், கடந்த 5ம் தேதி 1,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.




பருவ மழை தீவிரம் காரணமாக கடந்த 6ம் தேதி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால், நீர் வரத்து முழுவதும் இருப்பு வைக்கப்பட்டதால், கடந்த 30ம் தேதி 72.900 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக அதிகரித்து நேற்று 77 அடியை எட்டியது. கடந்த ஒரு வாரத்தில் நீர்மட்டம் 5 அடியும், நீர் இருப்பு 4 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது. மேட்டூர் கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் அதிகபட்சமாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும்.



பருவ மழை தீவிரம் காரணமாக நேற்று காலை முதல் மேட்டூர் கால்வாய் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவிற்கு திறக்கும் நீரின் மூலம் மேட்டூர் அணை, சுரங்க மின் உற்பத்தி நிலையங்களில் 250 மெகா வாட், காவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு கதவணை தடுப்பு மின் உற்பத்தி நிலையங்களில் 150 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும். டெல்டா நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், மேட்டூரில் நீர் மின் உற்பத்தி முழுமையாக பாதித்துள்ளது.




பவானிசாகர் நீர்மட்டம் உயர்வு: ஈரோடு: பவானிசாகர் அணைப் பகுதியில் தொடர் மழையால், ஒரே நாளில் இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த மழையால், நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 69.53 அடியாக இருந்தது. அணைக்கு 2,394 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று அணைப் பகுதியில் 27.20 மி.மீ., வரை மழை பெய்தது. நீலகிரியில் பெய்த மழையால், நேற்று அணைக்கு 24,190 கன அடி தண்ணீர் வந்தது. அணைக்கு இரண்டு நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் 71.50 அடியாகவும், நீர் வரத்து 24,190 கன அடியாகவும் இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 If you see news channels in Tamil, you can find lot people cursing rain for spoiling their day to day activities.
Rain is a gift from god everyone should welcome it.
Water logging and flood is not the problem of rain it was created by people and politicians.
People occupied rain draing channels and lakes and now blaming rain .
Iam from chennai and tried in vain trying to get water after put bore for 200ft and spending money for it.
Rain , rain come again after a small gap. I love you and welcome you . 
by g joy,chennai,India    11/9/2009 9:15:57 PM IST
 Let the dam fill to reach 100ft capacity, for our T.N farmers due to this rain. Thanks varuna bagavane! for this much rainfall. 
by G S சுந்தர்,noida,India    11/9/2009 2:35:18 PM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்