Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
எஜமானர்களின் குழந்தையை வாடகைக்கு பிச்சையெடுக்க வைத்த கொடூர வேலைக்காரி
நவம்பர் 10,2009,00:00  IST

General India news in detail

பெங்களூரு: எஜமானர்கள் வேலைக்கு சென்றதும், அவர்களின் குழந்தையை பிச்சையெடுப்பதற்காக வாடகைக்கு தந்த வீட்டு வேலைக்காரி வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.



 பெங்களூரில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இளம் தம்பதியர் தங்கள் குழந்தைகளை வீட்டுவேலைக்காரியிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நகரைச் சேர்ந்தவர் ஜோஷி. இவரது மனைவி அனாமிகா. இருவரும் பன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிக்கின்றனர். ஏழு மாத குழந்தையை பார்த்து கொள்வதற்காக ஒரு வேலைக்காரியை நியமித்தனர்.



ஒரு நாள் அனாமிகா, தலைவலிக்காக அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு வந்துவிட்டார். வீட்டுக்குள் அனாமிகா நுழைந்த போது குழந்தையை காணவில்லை. குழந்தையை பார்த்து கொள்ள நியமிக்கப்பட்ட வேலைக்காரி"டிவி' பார்த்து கொண்டிருந்தார். குழந்தை எங்கே? என்று அனாமிகா கேட்டதும் ஆடி போய்விட்டார் அந்த பெண். மிரட்டி கேட்டதும், குழந்தையை பிச்சையெடுப்பதற்காக அனுப்பியுள்ளதாக உண்மையை ஒப்புக் கொண்டார்.



இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அனாமிகா, குழந்தையை உடனே அழைத்து வரச் சொல்லி சத்தம் போட் டார். உடனடியாக அந்த வேலைக்காரியை பணியிலிருந்து நிறுத்தி விட்டார். அனாமிகாவும், ஜோஷியும் வேலைக்கு சென்ற பின் குழந்தையை பிச்சைக் காரர்களிடம் ஒப்படைத்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் வாடகை பெற்று வந்துள் ளார் அந்த வேலைக்காரி. பெற்றோர்கள் வருவதற்குள் குழந்தை வேலைக் காரியிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.



இடைப்பட்ட நேரத்தில் குழந்தை அழாமல் இருப்பதற்காக பிச்சைக்காரர்கள் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து விடுவார்களாம். இந்த விஷயம் ஜோஷி தம்பதிக்கு நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது. இந்த தம்பதியர் வீடு திரும்பிய பின்பும் குழந்தை தூங்கி கொண்டிருப்பானாம். இது குறித்து டாக்டரிடம் கேட்ட போது, குழந் தைக்கு நோய் ஏதும் இல்லை என தெரிவித் தார். பிச்சைக்காரர்கள் கொடுத்த மயக்க மருந்தால் தான் குழந்தை நீண்ட நேரம் தூங்கி கொண்டிருந் தது தற்போது தெரிய வந் துள்ளது.



தற்போது, அனாமிகா தம்பதியர் தங்கள் பெற்றோரிடம் குழந்தை யை விட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர். பிச்சை எடுக்க வைத்த வேலைக்காரி மீது போலீசில் புகார் செய்யவில்லை. இதுபோன்ற குற்றம் செய் வோரை தண்டிக்க உரிய சட்டம் இல்லை, என்கின்றனர் குழந்தைகளுக்கான உரிமை கோரும் நலச் சங்கத்தினர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 காசு தேடி அலையும் வீட்டில் பிசாசு தான் இருக்கும்... கூட்டு குடும்பம் தான் நல்லது ... இனியாவது திருந்துங்கள்... 
by m மது,singapore,Singapore    10-11-2009 12:03:13 IST
 மாமியாரோட சண்ட போட்டு தொரத்திவிட்டா, இப்படித்தான் குழந்தை பிச்சை எடுக்க வேன்டிவரும்.  
by Mr குமார் ,doha,Qatar    10-11-2009 11:36:49 IST
 சட்டம் இல்லாமல் இருக்கலாம். ஏன் புதுசா சட்டம் போடக்கூடாது. ஏன் தூக்கு தண்டனை கூட கொண்டுவரலாம்..ஒரு குழந்தைகளின் எதிர்காலத்தையே பாழக்க
நினைத்த ஒரு கும்பலுக்கு தக்க தண்டனை தருவதில் ஏன் சுணக்கம்....திவிரவாதிகள் , போதை கடத்தல்காரர்கள் ,இதுபோல ஒன்றும் அறியா குழந்தைகளை பிச்சை எடுக்க பயன் படுத்தல் எல்லாம் ஒன்றுதான்.உடனே கடுமையான சட்டம் தேவை. அத்துடன் பிச்சை எடுபவர்களிடம் விசாரணையும் அடிக்கடி தேவை. பிச்சை எடுக்கவன்னம் அவர்களை தொண்டு நிறுவனங்களில் சேர்த்துவிடும் .அப்பதான் இதுபோல கொடுமை ஒழியும்..மத்திய மாநில அரசுகள் உடனே ஆவன செய்து இதுபோல நடக்காமல் இருக்க வகை செயனும் 
by கலை ராஜா ,trichy,India    10-11-2009 09:20:50 IST
 கூட்டு குடும்பம் ஆக இருந்து இருந்தால் இந்த நிலைமை வருமா? பெரியவர்களை மதித்து போற்ற வேண்டும். 
by T திலகர்,CHENNAI,India    10-11-2009 09:13:31 IST
 பெற்றோரின் பணசம்பாரிக்கும் பேராசையே இதற்கு காரணம். பாசம்னா என்னான்னு தெரியாமலே குழந்தை வளருது. விளைவு கடைசியில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் 
by க பஞ்சாட்சரம்,DELHI,India    10-11-2009 09:12:15 IST
 ஒண்ணு, பெற்ற குழந்தையை வளர்க்கனும், இல்லைன்னா பெத்தவங்களை கூடவச்சு பாதுகாக்கணும். வசதி இல்லைன்னா பெத்துக்கவே கூடாது. உங்களுக்கெல்லாம் துட்டு தான் முக்கியம். அதனல்தான் இப்படி  
by n sundar,chennai,India    10-11-2009 08:27:43 IST
 வேலைக்காரிகள் மேல நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியாது... அந்த ஒட்டு போய்டுமே. அதனால அரசாங்கமாகிய நாங்கள் பொது மக்களுக்கு தெரிவித்து கொள்வதென்றால் சட்டத்தில் இந்த தப்புக்கு இடம் இல்லை என்பதாகும். 
by வெங்கடேசன்,Chennai,India    10-11-2009 03:23:20 IST
 parents are chasing money and this housemaid is also chasing money......Good Job and good way to earn.....parents pls feel proud....u were the best parents of the year for looking after the child in great manner......knowing this ....u will be going to job again.....there will be new housemaid with new idea ........why u guys want a child...u can spend the days in office to have fun rite.....
 
by s surya,chennai,India    10-11-2009 00:38:39 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்