Dinamalar - No 1 Tamil News Paper

பொது செய்திகள்
தகவல் சொல்லாத தகவல் ஆணையம் : போராட்டத்தில் குதிக்க சமூக ஆர்வலர்கள் திட்டம்
நவம்பர் 15,2009,00:00  IST

எந்த நோக்கத்திற்காக மாநில தகவல் ஆணையம் ஆரம்பிக்கப் பட்டதோ, அந்தப் பாதையில் இருந்து தற்போது விலகிச் செல்லும் போக்கில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் தராமல், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அதற்கேற்ப மக்களை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் ஆணையத்தின் போக்கை கண்டித்து, போராட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.



தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்டம் கொண்டுவரப்பட்ட புதிதில், பொதுமக்கள் கேட்ட தகவல்கள் உடனுக்குடன் கிடைத்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது. தகவல்களை கேட்டால், பதில் கொடுக்க கால தாமதம் செய்வது, அல்லது சம்பந்தம் இல்லாத பதில்களைக் கொடுப்பது, அப்படியும் தொந்தரவு செய்தால், சட்டத் தின் ஏதாவது ஒரு பிரிவைக் காட்டி, "பதில் தர இயலாது' என மறுப்பது போன்ற நிலைதான் தற்போது உள்ளது. மாநில தகவல் ஆணையத்தின் இழுத்தடிக்கும் போக்கால், தகவல் கேட்பவர்கள் எல்லாம், தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். 100 நாட்களுக்குப் பிறகும் எந்தத் தகவலும் கொடுக்காத அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்காததும், அபராதம் விதிக்காததும் தான் அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு காரணம் என்று, தகவல் கேட்பவர்கள் குமுறுகின்றனர்.



பல்வேறு தகவல்களைக் கேட்டு, மாநில தகவல் ஆணையத்திற்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளதாகவும், இதில் ஏராளமான மனுக்கள் பிரித்துக்கூட பார்க்கப்படாமல் இருப்பதாகவும், தகவல் கேட்பவர்கள் புலம்புகின்றனர். தகவல் ஆணையமும், அதிகாரிகளும் சட்டத்தை மீறுவதால், சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கமே சிதைந்து கொண்டிருக் கிறது. தகவல் கேட்டு நடையாய் நடக்கும் சிலர் கூறுகையில்,"நூறு நாட்களுக்கு மேலாகியும், எந்தவிதமான தகவலையும் கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தகவல் ஆணையத்தின் இணையதளம், சரியான தகவல், புள்ளி விவரங்களுடன் புதுப்பிக்கப் பட வேண்டும். தமிழிலும் தகவல்கள் இடம்பெற வேண்டும். மனுதாரர் உடனான கடிதப் போக்குவரத்து தமிழில் இருக்க வேண்டும்.



சமூக ஆர்வலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், தகவல் கமிஷனர்கள் பங்கு பெறும் கலந்தாலோசனை கூட்டம் மூன்று மாத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தினர். தகவல் கேட்ட மனுக்களுக்கு, உரிய காலத்தில் பதில் தராததை கண்டித்து, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், தகவல் உரிமை விழிப்புணர்வு அமைப்புகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் சார்பில், வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும், டிசம்பர் 21ம் தேதி, மாநில தகவல் ஆணையம் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.



                                                                                                   - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 தகவல் சரி. சமூக ஆர்வலர்/ இயக்கத்தின் பெயர் சொல்லி இருக்கலாமே, சொல்லாதது ஏனோ? 
by R ஆனந்த்,chennai,India    15-11-2009 22:52:26 IST
  The Commissioners of State Information Commission are functioning as capriciously,arbitrarily and the representative if criminal mind PIOs and public authoriyies.Hence there is mountain of arears of cases. Given immunity as Election Commissioners is missusing by them to save the criminal mind PIOs and public authorities. They bring the Act expressly to put into cold storage as done in other laws.Time as come to however must be prevented their crimes. 
by R Ramachandran,Sundivakkam,India    15-11-2009 09:58:40 IST
 திருந்த மாட்டார்கள் ... அடி உதவற மாதிரி ... வேற யாரும் உதவ மாட்டர்கள்... இந்த மாதிரி அதிகாரிகள நைய புடையுங்கள் ... எல்லாம் சரி ஆகிவிடும்.  
by M மது,Singapore,Singapore    15-11-2009 08:13:34 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்