Dinamalar - No 1 Tamil News Paper

பொது செய்திகள்
மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனம் :உத்திரகோசமங்கையில் பக்தர்கள் தரிசனம்
ஜனவரி 02,2010,00:00  IST

General India news in detail

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, உத்திரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்ட நிலையில் , மீண்டும் சந்தனம் பூசப்பட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில், மரகத நடராஜருக்கு ஆரூத்ரா தரிசனம் நேற்று முன் தினம் தொடங்கியது. சந்திரகிரகணம் காரணமாக தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு , சந்தனக்காப்பு களையப்பட்டது.



தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சந்தனக்காப்பு சாற்றப்பட, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இரவில் சந்திர கிரகணம் முடிந்தபின் , நேற்று அதிகாலை 4.15 மணிக்கு நடை திறந்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதன் பின் காலை 5 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், பஞ்ச பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. இதை தொடர்ந்து 6 மணிக்கு மேல் பொதுமக்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 We visited Uttarakosamangai on 19th Jan 2010 (about 15 days after Arudra Darshan). The sandal wood paste applied on the maragada Natarajar statue had fallen off in many parts and the lower part of the statue was covered with cloth. On enquiry we were told that the sandal paste was insufficient. Will the concerned authorities take necessary action? 
by M Rajagopalan,Bangalore,India    01-02-2010 18:01:48 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்