Dinamalar - No 1 Tamil News Paper

பொது செய்திகள்
நெல்லை தாமிரசபையில் நடராஜர் முனிதாண்டவம்
ஜனவரி 02,2010,00:00  IST

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜரின் முனிதாண்டவம் நடந்தது.'கர்மாவே பெரிது, கடவுள் இல்லை'' என்று கூறிய முனிவர்
களின் அறியாமையை நீக்க வந்த ஈசன், தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை, தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழி திருவாதிரை. ஐந்து சபைகளில் நடராஜரின் களிநடனம் சிறப்பு பெற்றது. சிதம்பரம் பொன்னம்பலத்தில் ஆனந்ததாண்டவமும், மதுரை ரஜதசபையில் சந்தியா தாண்டவமும், திருநெல்வேலி தாமிரசபையில் முனிதாண்டவமும், குற்றாலம் சித்திரசபையில் திரிபுர தாண்டவமும், திருவாலங்காடு ரத்தினசபையில் காளிதாண்டவமும் நிகழ்த்துகிறார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் முழுக்க தாமிர தகடுகளால் வேயப்பட்ட தாமிரசபையில்
நடராஜரின் முனிதாண்டவ காட்சி நேற்று அதிகாலை 4.50 மணிக்கு நடந்தது.



முனிதாண்டவத்தில் நடராஜர், அக்னி சொரூபராக காட்சியளித்தார். தர்ப்பை புல்லில் இருந்து தயாரிக்கப் பட்ட திருச்சாத்து எனப்படும் கறுப்புமை, திருநீற்றுடன் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையோடு ஆங்கில புத்தாண்டும் சேர்ந்துகொண்டதால் அதிகாலை தரிசனத் திற்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர். 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மிக நல்ல விஷயங்களை வழங்குவதில் தினமலர் நாளிதழ் முந்தி இருக்கிறது. ஆருத்ரா தரிசனத்தைப்பற்றி , எழுதி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த எந்த ஸ்தலங்களில் என்ன என்ன நடனம் என்பதை இந்த கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன். உங்களுடைய இந்த ஆன்மீகப் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். 
by ve சுப்ரமணியன்,Lagos,Nigeria    02-01-2010 16:00:31 IST
 OM NAMASHIVAYA 
by S.N. chandra,Chennai ,India    02-01-2010 13:31:52 IST
 ஓம் நமசிவாய




செ. சங்கரநாராயணன் ராஜவல்லிபுரம்.  
by A.C Sankaranarayanan,Kuwait,India    02-01-2010 13:28:43 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்