ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசை யொட்டி நேற்று அதுகாலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. காலை ஏழு மணிககு உச்சி கால பூஜையுடன், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஒன்பது மணிக்கு ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினார்.
பக்தர்களும் அக்னி தீர்த்த கடலில் நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து வழிப்பட்டனர். பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.இதன் பின்,சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரதவீதியிலும் உலாவந்தனர்.
| வாசகர் கருத்து |