Dinamalar - No 1 Tamil News Paper

பொது செய்திகள்
'எவரெஸ்ட்' ஏற துடிக்கும் சென்னை வாலிபர்
பிப்ரவரி 01,2010,00:00  IST

General India news in detail

சென்னை:குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதல்முறையாக, "எவரெஸ்ட்' சிகரம் ஏறி சாதிக்க உள்ளார்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26). "இன்ஜினியரிங்' பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.



உலகின் உயரமான, "எவரெஸ்ட்' சிகரம் நோக்கிய தனது பயணம் குறித்து இவர் கூறியதாவது:சிறுவயதில் இருந்தே மலையேறுவதில் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் மற்றும் முயற்சியின் பலனாக கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரமான, "கிளிமன்ஜாரோ' முதல், திபெத்தில் உள்ள, உலகின் ஆறாவது உயர்ந்த சிகரமான, "சோ ஓயு' வரை நிறைய மலைகள் ஏறியுள்ளேன். வரும் 6ம் தேதி, நியூசிலாந்தில் உள்ள, "மவுன்ட் குக்' மலையிலும் ஏற உள்ளேன்.



இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் மார்ச் 29ம் தேதி, "எவரெஸ்ட்' சிகரம் நோக்கிய சாதனை பயணத்தை துவங்க உள்ளேன். சென்னையிலிருந்து முதல்முறையாக, "எவரெஸ்ட்'டில் ஏற உள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்."மவுன்ட்டைன் கைட்ஸ்' என்ற நிறுவனத்தின் உதவியுடன், 65 நாட்கள் மேற்கொள்ள உள்ள இந்த பயணத்திற்கு, நேபாள அரசின் அனுமதி, மலையேறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு 30 லட்சம் ரூபாய் தேவை.



பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளுக்கு மறுவாழ்வு தந்துவரும், "துளிர்' போன்ற அமைப்புகளுக்கும் உதவ எண்ணி உள்ளேன். என் முயற்சி வெற்றிபெற, "கார்ப்பரேட்' நிறுவனங்கள், தனிநபர்களிடம் நிதி உதவியை எதிர்பார்க்கிறேன்.நிதியுதவி அளிப்பவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களின் அஞ்சல்தலை அளவிலான புகைப்படம் பொருந்திய பதாகையை எனது பயணத்தின்போது, "எவரெஸ்ட்'டிற்கு எடுத்து செல்ல உள்ளேன். உதவ விரும்புவோர் www.climbeverestwithme.comஎன்றஇணையதளம், climbeverestwithme@gmail.comஎன்ற மின்னஞ்சல் மற்றும் 9176432897 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு சந்தோஷ் குமார் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நல்லதொரு முயற்சி. தொடர்ந்து செயல்படுவதற்கு எங்களின் வாழ்த்துக்கள்.  
by SNM அப்பாஸ்,Chennai,India    01-02-2010 14:55:31 IST
 ஹாய் மிஸ்டர் சந்தோஷ் குமார், உங்கள் பயணம் மிகவும் உற்சாகத்தோடு தொடங்கட்டும். என் வாழ்த்துக்கள். சவுதி அரேபியா இம்மானுவேல்  
by deva immanuel,saudi arabia riyadh,India    01-02-2010 14:04:40 IST
 கடவுள் துணை நிற்பார்  
by p raj,chennai,India    01-02-2010 13:02:13 IST
 உங்கள் சிந்தனை சமூக அக்கறை கொண்டது. அதை மதிக்கிறேன். சிதறிய எண்ணம் கொண்ட அழுகிய நெஞ்சங்கள் செய்யும் ஈன செயல்.
இருந்தாலும் 30 லட்சம் செலவு செய்து மலை ஏறுவதால் தங்கள் நோக்கம் வெற்றி பெரும் என நம்புவது கடினமே. அப்பணத்தை பாதித்த குழந்தைகளுக்கு உதவினால் மிக நன்றாக இருக்கும். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். 
by R சாமி ,Tirupur,India    01-02-2010 12:38:26 IST
 இவனோட முழி சரியில்லையே  
by s சங்கீதா,chennai,India    01-02-2010 07:12:28 IST
 உங்கள் முயற்ச்சி வெற்றியடைய நல்வாழ்த்துகள்!!!
 
by தமிழன்,Delhi,India    01-02-2010 00:38:47 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்