Dinamalar - No 1 Tamil News Paper

பொது செய்திகள்
சிதம்பரத்தில் உலக சைவப்பேரவை மாநாடு:பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது
பிப்ரவரி 06,2010,00:00  IST

சிதம்பரம்:சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு பிரம்மாண்ட பேரணியுடன் நேற்று துவங்கியது. ஆதினங்கள், சிவநெறியாளர்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள் என 2,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.தமிழர்கள் சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் உலக சைவப்பேரவை அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாநாடு நடத்தி வருகிறது. 12வது மாநாடு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.



மூன்று நாட்கள் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது. மாலை சிதம்பரம் கீழ வீதியில் இருந்து ஆதினங்கள், சிவநெறியாளர்கள், திருமுறை, சைவ சிந்தாந்த குழுக்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள், வெளி நாட்டு அறிஞர்கள் என 2000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி துவங்கியது.சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கினார். சுந்தரேசம்பிள்ளை திருமுறைகள் ஓதினார். அவரை தொடர்ந்து, 63 நாயன்மார்கள் உருவச் சிலைகள் மற்றும் நாயன்மார்கள் வேடமிட்ட சிறுவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.



இசை வாத்தியங்கள் முழங்க, மேள தாளத்துடன் பேரணி நடந்தது.பேரூர் இளைய மடாதிபதி மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான்,கோவை சின்னவளம்பட்டி சிரவை ஆதினம் குமருகுரு, தருமை ஆதினம் திருநாவுக்கரசு தம்பிரான், பழனி சாது சண்முக அடிகளார், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான், விழா ஒருங்கிணைப்பாளர் பத்மினி கபாலிமூர்த்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக, அண்ணாமலை பல்கலை மாநாட்டு திடலை அடைந்தது. பின்னர் சாஸ்திரி அரங்கில் மாநாடு துவங்கியது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 seminars should address social issues first. When saivaites aresuffering without food shelter clothes etcthere is no point in having lectures on God or glorifying them.In Srilanka thousands of saivaites are undergoing severe hardship. They need economical help first. Help them to stand on their own feet economicaly. This will stop releigious conversion by christians buddhists and muslims.Thousands of saivaites have been converted to christianity because christian priests are on the spot and giving material emotional help first. By this they create a strong sympathetic foothold in the heart of saivaites. After sometime they slowly convert them. Hundreds of rich hindu temples are there in south India. Has any one of them turned its eyes on these suffering saivaites. Malaysia is another country oppressing hindus.What have you Indian hindus/ saivaites done to the helpless people. Do not hold seminars and praise Gods or give a title ( paddam ) or put a shawl (ponnadai) to those who have no social concern. I hope next seminar will concentrate in the matters of social economical human rights aspects.
Rishi 
by M Rishi,London,United Kingdom    22-02-2010 17:26:21 IST
  கடவுல் இல்லை. இல்லவேயில்லை, கோவில் வேன்டாம்
 
by r vivek,rameswaram,India    07-02-2010 00:38:36 IST
 we need to support this kind of things
shivam is the best in world 
by s seemeyesme,rome,Italy    06-02-2010 23:21:29 IST
 Saivam Vazhga, Sivam Vazhga, Appar Vazhga, Sundarar Vazhga, Samaya Kuravar Nalvar Vazhga enru solli inda thondukku vazthu kooruvom. 
by P Sundaresan,Chennai,India    06-02-2010 21:57:30 IST
 என்றென்றும் நீடூழி வாழ்க நம் தமிழக சைவ கலாச்சாரம்! சைவம் என்பது ஜாதி மத இன சார்பற்றது என்பதை முதலில் நாம் அனைவரும் உணரவேண்டும்; பிற உயிர்களைக்கொன்று நம் உடல் வளர்க்க வேண்டிய நிலையில் நாம் இல்லை!! இதை எத்தனையோ சித்தர்களும், புத்தர்களும் காலம் காலமாய் கூறிவிட்டார்கள்!! ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனைக்கடைப்பிடிக்கிறோம்! அயல் நாட்டு கலாச்சரத்தையும் அவர்கள் உணவு முறைகளையும் நாம் விட்டொழிக்க வேண்டும்!! இத்தகைய மாநாடுகள் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்!! நம் நாட்டு அரசியல்வாதிகளை நம்பினால் நம் காலையே வாரி விடுவார்கள்!!!
மீண்டும் ஒரு முறை : வாழ்க நம் சைவ சித்தாந்த பண்பாடு! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!!!! 
by G மாதவன்,Chennai,India    06-02-2010 17:48:53 IST
 saivame thamizhai valarthadhu enbadharku saiva ilakkiyangal satchi!
Tamizhai paaraattuvor Saivathai mattum follow seivathillaiye! 
by V RAVI,Chennai,India    06-02-2010 17:24:28 IST
 Podunga podunga, ithuku pala kodi selavu pannunga illathavanuku 10 paisa kuduthuratheenga. ethavathu urupadiana work ah parungapa. nsk sonnathu pola pattaya pottalum naamatha potalum ethum varathu illatha anathaikaluku ehtavathu seinga athu than punniam kudukum.  
by P Raj,Coimbatore,India    06-02-2010 16:19:29 IST
 தமிழும் சைவமும் இரு கண்கள் இந்த இரண்டு மட்டுமே இரட்டை குழல் துப்பாக்கி வேறே எதுவும் ஆகாது

மொழியை மட்டுமே பார்க்கும் தமிழக ஆட்சியாளர்கள் தமிழும் சைவமும் ஒன்றேதான் என்பதை உணர்ந்தால் மட்டுமே நாடு கண்டிப்பாக சுபிட்சம் பெறும்.

சமயத்தை விடுத்து வெறும் தமிழை மட்டுமே பேசுவதால் எந்த பயனும் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் அதை சைவ சமய மக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்துள்ள இந்த மாநாட்டில் தீர்மானம் போட்டு அதை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்

வாழ்க தமிழ் வாழ்க சைவம்

வான் முகில் வழாது பெய்க! மலி வளம சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஒங்க! நற்றவம், வேள்வி மல்க! மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்!

வையநீடுக: மாமழை மண்ணுக: மெயவிரும்பிய அன்பர் விளங்குக: சைவ நன்னெறிதாம் தழைத்து ஓங்குக: தெய்வ வெண்திருநீறு சிறக்கவே:

சைவ சித்தாந்த சேவையில் அடியேன் குடும்பம்

ஜா. சி. முத்துக்குமார், எம்.மகாலட்சுமி எம்.எம்.மணிகண்டன் எம்.எம். சரவணன் வடபழனி சென்னை -26  
by J.S Muthukumar,Chennai-26,India    06-02-2010 15:45:31 IST
 சிவ சிவ. தென்நாடு
உடைய
சிவனே
போற்றி.சிவ
சிவ



 
by siva கமல்,berlin,Germany    06-02-2010 15:14:10 IST
  சிவாய நாம ! 
by k rajendran,aus,India    06-02-2010 15:11:01 IST
 வாழ்க சைவம் வளர்க அதன் தொண்டு சைவம் உள்ள வரை நம் தமிழும் திருகோயில்களில் தழைத்தோங்கும்  
by v danraj,singapore,Singapore    06-02-2010 14:49:41 IST
 மிக்க நன்றி கடப்பாடு யுடைவர்கல்

ஆகிறோம்

அடியேன் தருமைதாசன் ஹைதராபாத்

 
by DHARU DHARUMAIDASAN,near hyderabad,India    06-02-2010 13:05:23 IST
 வாழ்க சைவம் வளர்க சைவநெறி ஓம் நமசிவாய!!! சிவாயநம ஓம்!!!!!
நடராஜ பாண்டியன்  
by n பாண்டியன்,Bonny,Nigeria    06-02-2010 12:35:07 IST
 சைவம் எங்கும் பரவவேண்டும். நன்றி தினமலர்.  
by k somasundaram,coimbatore,India    06-02-2010 11:28:01 IST
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்று விரும்பினர் ஆன்றோர்; இத்தகைய மாநாடுகள் அந்த எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 
by AS GURUNATHEN,tirupur,India    06-02-2010 10:23:56 IST
 ''''ஓம் நமசிவாய'''' மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்  
by K சாரவணன் ,singapore,Singapore    06-02-2010 09:46:13 IST
 சிவம் வாழ்க. சிவா நெறி வளர்க.  
by அ கார்த்திகேயன்,தங்க தமிழகம் ,India    06-02-2010 08:19:26 IST
 சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்று விரும்பினர் ஆன்றோர்; இத்தகைய மாநாடுகள் அந்த எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.  
by P Balakrishnan,Chennai,India    06-02-2010 06:45:51 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்