Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |
dinamalar, Guru peyarchi, gurupeyarchi, Guru peyarchi palankal

Guru peyarchi palankal

Guru Peyarchi

 

குரு வணக்கப் பாடல்


பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி
வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்தினந்தான்
பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக் கொள்வோமே.







சக்தி தட்சிணாமூர்த்தி


சீடர்களான சனகாதி முனிவர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரர் கோயிலில் மடியில் அம்பிகையை அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் சிவபக்தரான பிருங்கி முனிவர் வணங்கியபடி இருக்கிறார். பிருங்கி, சிவனை மட்டுமே வணங்கும் வழக்க முடையவர். அவர் தன்னையும் வழிபட வேண்டுமென அம்பிகை சிவனிடம் வேண்டினாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவன், அவளுக்கு தனது ஒரு பாகத்தைக் கொடுத்து, தன்னில் ஒருத்தியாக ஏற்று"அர்த்தநாரீஸ்வரராக' காட்சி தந்தார். "சிவமும் சக்தியும் ஒன்றே!' என பிருங்கிக்கு உபதேசித்தார். உண்மையை உணர்ந்த பிருங்கி, இருவரையும் வழிபட்டார். இவ்வாறு பிருங்கிக்கு உபதேசித்த அமைப்பில் இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவரது இடது கையில் அமுத கலசம் இருப்பது மற்றொரு சிறப்பு.


நான்கு அம்ச தட்சிணாமூர்த்தி

 

ஞானத்தைத் தரும் குரு என்ற முறையில் குரு பெயர்ச்சி காலங்களில் தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்யப்படுகிறது. இவர் பல விதமான கோலங்களை வெளிப்படுத்தும் விதமாகக் காட்சி தருவார். இவர்களில் கால்கள் உடலோடு சேர்த்து யோகப்பட்டையுடன் கூடியவரை "யோக தட்சிணாமூர்த்தி, என்றும், கையில் வீணையுடன் உள்ளவரை "வீணா தட்சிணாமூர்த்தி' என்றும், கையில் ஏடுடன் கூடியவரை "வியாக்யான தட்சிணாமூர்த்தி' என்றும், "உத்குடிகாசனம்' என்ற யோக கோலத்தில் அமர்ந்தவரை, "உத்குடிகாசன தட்சிணாமூர்த்தி' என்றும் அழைப்பதுண்டு. மைசூரு அருகிலுள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில், இந்த நான்கு அமைப்புகளையும் ஒரே மூர்த்தத்தில் (சிலை) உள்ளடக்கிய தட்சிணாமூர்த்தியைக் காணலாம். சுவாமியின் பீடத்தில் கையில் சிவலிங்கம் வைத்தபடி மகரிஷி ஒருவர் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் 13 சீடர்கள் வணங்கியபடி இருக்கின்றனர்.

 

கமண்டல தட்சிணாமூர்த்தி


தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி, கையில் கமண்டலத்துடன் காட்சி தருகிறார்.  மும்மூர்த்திகளும் காட்சி தரும் தலம் இது. இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னதி கோஷ்டத்தில் இருந்தாலும், மூலவராகவே பாவித்து பூஜை செய்கின்றனர். இதற்காக தட்சிணாமூர்த்தியின் முன்புறம் ஒரு மண்டபமும் அமைத்துள்ளனர். இடது காலை குத்திட்டு, யோக பட்டையுடன் அமர்ந்திருக்கும் இந்த தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே கல்லால மரமும், காலுக்கு கீழே முயலகனும் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. இத்தகைய அமைப்பில் தட்சிணா மூர்த்தியை தரிசிப்பது அபூர்வம். ஞானத்தைக் கொடுக்கும் கமண்டலத்துடன் இங்கு தட்சிணாமூர்த்தி காட்சி தருவதால், கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவும், அறியாமை நீங்கவும் இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.

 

குருபகவான் துதி


குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாயே!
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே.

 

தமிழகத்தில் என்ன நடக்கும்


* பருவ மழை தவறிப் பெய்வதால் விவசாயப் பணிகளுக்கு இடைஞ்சல்.
* வீடு கட்டுவோருக்கு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் சிரமம்.
* கம்ப்யூட்டர் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு மதிப்பு குறையலாம்.
* எதிர்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

குருவுக்கு உகந்தவை


* மலர்-முல்லை
* நிறம்-மஞ்சள்
* ராசிக்கல்-புஷ்பராகம்
* நைவேத்யம்-கடலைப்பொடி சாதம்
* பிடித்த நட்சத்திரங்கள்-புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
* நட்பு ராசிகள்-மேஷம், சிம்மம், விருச்சிகம்
* பகை ராசிகள்-ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்
* குருவுக்குரிய ராசிகள்-தனுசு, மீனம்
* வாகனம்-யானை
* தானியம்-கொண்டைக்கடலை
* பலன்-கல்வியில் மேம்பாடு, பதவி, புகழ் தருதல், உழைத்த காசை தக்க வைத்தல், அநியாயமாய் சேர்த்ததை அழித்தல், மகப்பேறு கிடைத்தல்.

 

இந்தியாவில் என்ன நடக்கும்


* குருபகவான் மகர ராசியில் வலுவிழந்து (நீச்சம்) அமர்வதால் நிலம், தங்கத்தின் விலை, பணப்புழக்கம் குறையும்.
* நிதிநிறுவனங்கள், வங்கிகள் கடன்களை வசூலிக்க கஷ்டப்படும். சில வங்கிகள் மூடப்படும்.
* எல்லாத்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
* தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைப்பது சிரமம். புதிய அரசு திட்டங்களை செயல்படுத்த கஷ்டப்படும்.
* தீவிரவாதச் செயல்களால் அரசு திணறிப்போகும். உள்நாட்டு கலவரங்களால் பெரும் பிரச்னைகள் உண்டாகும்.
* சில இடங்களில் கண்டுபிடிக்கப்படும் கனிமப்பொருட்களால் அந்தப்பகுதியில் பொருளாதார நிலை உயரும்.
* வங்கிகளில் சேமிப்புத் தொகை அதிகரிக்கும்.
* ராகு, குரு சேர்க்கையால் ஆன்மிகவாதிகளுக்கு கடும் சோதனை ஏற்படும். வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் சென்று வர அஞ்சும் நிலை உருவாகும்.


உங்கள் ராசிக்கு பொதுபலன்

ராசி இடம் பலன்
மேஷம் பத்து சிரமம்
ரிஷபம் ஒன்பது நன்மை
மிதுனம் எட்டு கஷ்டம்
கடகம் ஏழு லாபம்
சிம்மம் ஆறு பாதிப்பு
கன்னி ஐந்து இன்பம்
துலாம் நான்கு சுமார்
விருச்சிகம் மூன்று கவனம்
தனுசு இரண்டு மகிழ்ச்சி
மகரம் ஒன்று பரவாயில்லை
கும்பம் பன்னிரண்டு கவலை
மீனம் பதினொன்று மேன்மை

குரு பெயர்ச்சி எண் கணித பலன்

 

குரு பெயர்ச்சியை ஒட்டி பிறந்த தேதி அடிப்படையில் பலன் தந்துள்ளார் எண்கலை வித்தகர் காரைக்குடி ஜெ.என்.எஸ். செல்வன்.


1, 10, 19, 28 A, I, J, Q, Y

 

மனிதநேயத்துடன் நடந்து கொள்ளும் நீங்கள், மனம் விரும்பியபடி செயல்களை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உடல் நிலை அவ்வப்போது பாதிக்கப்படும். மனைவிக்கும் உடல் நலக்குறைவு ஏற்படலாம். தொழிலதிபர்கள் வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கப்பெறுவர். புதிதாக துவங்கும் தொழிலால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெற்று மகிழ்வர். பணியாளர்கள் அதிகாரிகளிடம் நல்மதிப்பு பெறுவர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வுகள் கிடைக்கும். பணியாளர்கள், சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிட்டு, பிரச்னைகளை சந்திக்கலாம். பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள், புதிய நிலங்கள் வாங்குவதில் தடை உண்டாகும். மாணவர்களின் கல்வி சிறக்கும்.

2, 11, 20, 29  R, K, B

 

பிறரை மகிழ்விப்பதில் ஆர்வமும், பெரியோர்களிடம் பணிவாக நடந்து கொள்ளும் தன்மையும் கொண்ட நீங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். சிறிய கவனக்குறைவால் பெரிய இழப்பைச் சந்திக்கலாம். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சமுதாயத்தில் மதிப்பு கூடும். எதிரிகள் தாமாக முன்வந்து நட்பாக பழகுவர். பழைய பிரச்னைகளுக்கு எளிய தீர்வு காண்பீர்கள். உடல் நலம் ஆரோக்யமாக இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்பெறும். வியாபாரிகள், புதிய பொருட்களை சந்தைப்படுத்தி லாபம் காண்பர். பணியாளர்கள் பொறுமையாக செயல்பட்டு, மேலிடத்தில்  சலுகைகள் கிடைக்கப்பெறுவர். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கையும், வெளிமாநில பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையிடத்தில் நற்பெயர் பெறுவர். தொண்டர்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகள், கால்நடைகள் வழியில் நல்ல லாபம் காண்பர். சிலர், சகோதர வழியில் பிரச்னைகளைச் சந்திக்கலாம். மாணவர்கள், சக மாணவர்களின் பேச்சை நம்பி செயல்பட்டு ஏமாற்றமடைவர்.

3, 12, 21, 30  C, G, L, S

 

சிக்கலான விஷயத்திற்கும் எளிதில் தீர்வு கண்டு, சிறப்பாக செயல்படும் நீங்கள் எந்த செயலிலும் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். பல வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களின் உதவியால் உயர்ந்த நிலை பெறுவீர்கள். கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்துடனும், மனம் நிம்மதியுடனும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழில் அதிபர்கள் அபரிமிதமான முன்னேற்றம் காண்பர். சிலர், அரசின் ஆதரவால் புதிய தொழில்கள் துவங்குவர். வியாபாரிகளுக்கு நீண்ட நாள் கடன் தொகை வசூலாகும். அதிகாரிகளின் ஆதரவால் பணியாளர்கள் விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் பெறுவர். குழந்தைகள் வழியில் பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். புகுந்த வீட்டில் வீண் வாக்குவாதத்தால் பிரச்னையை சந்திக்கலாம். அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கப்பெறுவர்.

4, 13, 22, 31  D, T, M


திடமான நம்பிக்கையுடன், திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் நீங்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியிலும், அரசு தொடர்பான கணக்கு, வழக்குகளிலும் பிரச்னைகளைச் சந்திக்கலாம். பொருளாதார நிலை உயரும். தொழில் அதிபர்கள் புதிதாக துவங்கிய தொழிலால் நஷ்டத்தைச் சந்திப்பர். வியாபாரிகளுக்கு விற்பனை மந்தமாக இருக்கும். பணியாளர்களுக்கு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்கள், புகுந்த வீட்டில் தேவையில்லாமல் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வர். பதவிக்கு ஆசைப் பட்டு செயல்படும் அரசியல்வாதிகள் ஓரம் கட்டப்படுவர். விவசாயிகள் நிலம் தொடர்பான பிரச்னையை சந்திப்பர். கால்நடைகள் வழியில் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். மாணவர்கள், தீய நண்பர்களின் சகவாசத்தால் பெற்றோருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வர்.

5, 14, 23  E, H, N, X


ஆதரவற்றவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் நீங்கள் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். சமுதாயத்தில் பொறுப்புள்ள பதவி கிடைக்கப் பெறுவீர்கள். அரசு வழியில் ஆதாய வரவுகள் உண்டு. மனதில் தைரியம் அதிகரிக்கும். தொழில் அதிபர்கள் சிறப்பாக செயல்பட்டு பொருளாதார உயர்வு காண்பர். தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்து, அதிக நன்மைகள் கிடைக்கப்பெறுவர். புதிய நண்பர்களின் அறிமுகத்தால், வியாபாரிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். சிலருக்கு வியபார விஷயமாக வெளிநாடு சென்று வரும் யோகம் உள்ளது. பணியாளர்கள், நற்பெயர் பெறுவர். சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன் வழி உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி கிடைக்கப்பெறுவர். புதிய ரக பயிர்களை பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கப்பெறும். மாணவர்கள், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் விதமாக நடந்து கொள்வர்.

6, 15, 24  U, V, W


எந்த விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தும் உங்களின் பொருளாதார நிலை உயரும். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும். தொழிலதிபர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து, அவர்களின் ஆதரவுடன் புதிய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். வெளிநாட்டு ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் கணக்கு, வழக்கு சரியாக வைக்காததால் நெருக்கடிகளை சந்திப்பர். மன உளைச்சல் ஏற்படும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, நிர்வாகத்திடம் சலுகைகள் கிடைக்கப்பெறுவர். பெண்கள், ஆன்மிகத்தலங்களுக்கு யாத்திரை சென்று, மன நிம்மதியுடன் இருப்பர். அரசியல்வாதிகள், மக்கள் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி நற்பெயர் கிடைக்கப்பெறுவர். சகோதர வழியில் பிரச்னைகளைச் சந்தித்த விவசாயிகள் அதற்கு எளிய தீர்வு காண்பர். தொழில் துறை சம்பந்தமான மாணவர்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறுவர்.

7, 16, 25  O, Z


பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையும் கொண்ட உங்களுக்கு நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கப்
பெறும். நீண்ட நாட்கள் தடைபட்ட செயல்களை, மன உறுதியால் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இதனால் மனதில் புத்துணர்வு உண்டாகும். பொருளாதார நிலையை சிறப்பாக வைத்துக்கொள்ளும் செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டு மென விரும்பியவர்களுக்கு, அந்த வாய்ப்பு விரைவில் கைகூடும். சிலருக்கு பூர்வ சொத்து வகையில் பிரச்னை உண்டாகும். மனக்குழப்பங்கள் வந்து நீங்கும். தொழிலதிபர்கள் கடன் பெற்று, அதனால் மன நிம்மதியின்றி தவிப்பர். சந்தையில் புதுமையை புகுத்துவதால் வியாபாரிகள், நல்ல லாபம் கிடைக்கப்பெறுவர். பணியாளர்களுக்கு, பொறுப்புள்ள புதிய பணி கிடைக்கும். பெண்களுக்கு, புகுந்த வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசியல்வாதிகள் தலைமையை விமர்சனம் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வர். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் தங்களது திறமைக் கேற்ப நல்ல பணி கிடைக்கப்பெறுவர்.

8, 17, 26  F, P


பிறர் மீது இரக்கப்பட்டு உதவும் தன்மை கொண்ட நீங்கள் எதையும் ஆழமாக சிந்தித்து அதன்பின்பே செயல்படுவீர்கள். வீண் விவாதங்களால் பிரச்னைகளை சந்திப்பீர்கள். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து திடீர் பணவரவு இருக்கும். உடல் நலம் சுமாராக இருக்கும். தொழிலதிபர்கள், பிரச்னைகளை சமாளித்து தொழிலில் வெற்றி காண்பர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து நற்பெயர் பெறுவர். வியாபாரிகளுக்கு வியாபார விஷயமாக வெளிநாடு செல்லும் யோகமுள்ளது. பணியாளர்கள் முறையற்ற செயல்பாடுகளால் மேலிடத்தின் கண்டிப்பிற்கு ஆளாவர். அரசியல்வாதிகள், பதவிகளுக்கு ஆசைப்பட்டு தலைமையிடத்தில் அவப்பெயர் பெறும் சூழ்நிலை உள்ளது. பெண்கள், கணவரின் பேச்சைக் கேட்காத நிலையால் மனக்குழப்பத்திற்கு ஆளாவர். விவசாயிகளுக்கு கால்நடைகள் வழியில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய வகையில் மதிப்பெண்கள் பெற்று உயர்வர்.

9, 18, 27


சுறுசுறுப்பை விரும்பும் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுப நிகழ்ச்சிகளை மனம் விரும்பியபடி நடத்தி மகிழ்வீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இரவு நேர பயணத்தால் பிரச்னையை சந்திக்கலாம். தொழில் அதிபர்கள் ஓரளவு லாபம் சம்பாதிக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கும் விற்பனையில் மந்தநிலையால் ஓரளவே லாபம் ஈட்ட முடியும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகும். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு திண்டாட்டம் என்றாலும், புத்திரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் பிரச்னை ஏற்படும். விவசாயிகள், நல்ல மகசூலும், லாபமும் காண்பர். மாணவர்கள் படிப்பில் பின்தங்கும் நிலை உள்ளது. கவனம்

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in