திருவெறும்பூர்: திருச்சி அருகே, கள்ளக்காதலுக்காக, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி, எச்.ஐ.வி., பாதித்தவரின் ரத்தத்தை, அவரது உடலில் செலுத்த முயன்ற வழக்கில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே மேலகுமரேசபுரம் காலனியில் வசிக்கும் ஞானஅருள்ராஜ் மகள் சத்யா (15). பத்தாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பழனிவேல் மகன் குமார மதிஸ்(23). சத்யா மேஜரானவுடன், குமார மதிசுக்கு திருமணம் செய்து விடலாம் என்று இரு குடும்பத்தினரும் பேசி வைத்திருந்தனர். திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜகுமாரி(32)க்கும், குமார மதிசுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
சத்யாவை, குமார மதிஸ் திருமணம் செய்து விட்டால், அவருடனான உறவை தொடர முடியாது என்று எண்ணிய ராஜகுமாரி, தன் வீட்டருகில் வசிக்கும் கண்மணி(27) சரஸ்வதி(40) இருவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, எய்ட்ஸ் நோயாளி ஒருவரிடமிருந்து ரத்தம் எடுத்து, அதை சத்யா உடலில் செலுத்தினால், குமார மதிஸ், சத்யாவை திருமணம் செய்யாமல் ஒதுங்கி விடுவார் என்று ராஜகுமாரி திட்டம் போட்டார்.
கடந்த ஜூன் 24ம் தேதி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட செல்வியிடம் ரத்தம் சேகரித்துக் கொண்டு திருவெறும்பூர் கல்லணை ரோட்டில் காத்திருந்தார். ராஜகுமாரி தோழி கண்மணி, தாலுகா ஆபீஸ் செல்வதாகக் கூறி, சத்யாவை, திருவெறும்பூர் அழைத்து வந்தார். அங்கு தயார் நிலையில் இருந்த காரில், சத்யாவை அழைத்துக் கொண்டு கல்லணை பிரிவு ரோடு வந்தார். அங்கிருந்த ராஜகுமாரி, சரஸ்வதி இருவரும், காரில் ஏறிக்கொண்டனர். திருச்சி - துறையூர் அருகிலுள்ள புளியஞ்சோலை பகுதிக்குச் சென்றனர்.
அங்கு, தாங்கள் கொண்டு வந்த எச்.ஐ.வி., ரத்தத்தை சத்யா உடலில் ஏற்ற முயற்சித்தனர். ரத்தம் உறைந்து விட்டதால், திட்டம் நிறைவேறவில்லை. சத்யாவை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு, அவரது வீட்டருகே விட்டுச் சென்று விட்டனர். சத்யா, மனரீதியாக பாதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன், தாயிடம் விவரம் கூறினார். அவர், திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். கவுன்சிலர் ராஜகுமாரி, சரஸ்வதி இருவரையும் போலீசார் கைது செய்து, திருச்சி ஆறாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான கண்மணியை தேடுகின்றனர்.
| வாசகர் கருத்து |
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இவளுக்கும் ஒரு நல்ல படித்த வக்கீல் வாதாட வருவார் ,,இதுஎப்படி இருக்கு
|
by k mujith,sivakasi,India 11/4/2009 11:40:38 PM IST |
குட் ஸ்டோரி, தமிழ்ல இந்த incidenta பிலிமா எடுக்கலாம்.
|
by B பிரபு,indore,India 11/4/2009 10:32:16 PM IST |
வேணும் என்றே ஜோடித்த கேஸ் போல தெரியுது, போலீஸ் கவனம் தேவை
|
by K Manithan,Aixona,United States 11/4/2009 10:26:03 PM IST |
நீ எல்லாம் ஒரு மனுஷ ஜென்மம்.. ஏண்டி அலையற.... இந்த மாதிரி விலங்குகளை விட கேவலமான ஜென்மத்துக்கு கோர்ட், ஜெயில், அங்க சாப்பாடு எல்லாம் போட்டு மக்களோட வரி பணத்த வீண் பண்ணாதீங்க... அதே திருவெறும்பூர் ஜங்ஷன்ல ஒரு வாரம் பட்டினியோட நிக்க வெச்சு கல்லால அடிச்சு கொல்லுங்க
|
by s ஸ்ரீராம்,chicago,United States 11/4/2009 9:08:11 PM IST |
இந்த மாதிரி பெண்களை சும்மா விடவே கூடாது. நிக்க வச்சி சுடவேண்டும். கவுன்சிலர் பதவி முதலாவது பறிக்கப்பட வேண்டும்.
|
by RL குமார் JAYAKONDAM,qatar,Qatar 11/4/2009 8:12:50 PM IST |
அவளை தூக்கில் தொங்க விட வேண்டும்
|
by k athimoolam,riyadh,saudia arabia,India 11/4/2009 7:45:05 PM IST |
ஆம்பள பயலுகதான் காம கொடூரர்னு இல்ல . . அம்புட்டும் அலையுற கேசுன்னு புரிஞ்சு போச்சா . . இதெல்லாம் கண்டுக்க கவர்மேன்ட்க்கு எங்க டைம் இருக்கு...நமக்கு தமிழ் செம்மொழி ஆனா போதும் அந்த பேர சொல்லி ஒரு மாநாடு நடத்தினா போதும்யா...எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போகும்
|
by s. முத்து ராஜா ,vellore,India 11/4/2009 6:16:51 PM IST |
She should be punished severely... She is not a woman she is worst than an animal what a thinking!!!!!! Almighty may help us from such peoples existance....
|
by H Althaf,Doha,Qatar 11/4/2009 5:59:27 PM IST |
இவளுடைய பதவி மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவளாக அறிவிக்க வேண்டும்.. இவளெல்லாம் மனுஷியே கிடையாது...
|
by M கௌதமன் ,chennai,India 11/4/2009 5:56:48 PM IST |
இவளை போன்ற மோசமான பெண்களுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுப்பானாக !
|
by a மொதமேது ayub,lalpet-608303,India 11/4/2009 5:43:53 PM IST |
injection to her
|
by smile,madurai,India 11/4/2009 4:44:24 PM IST |
இவளுக்கு குடுக்கணும் H I V இரத்தத. இதலாம் உலகத்துல எதுக்கு இருக்கு கொன்ற வேண்டியதுதான்
|
by kavi,palani,India 11/4/2009 4:28:33 PM IST |
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இவளுக்கும் ஒரு நல்ல படித்த வக்கீல் வாதாட வருவார் ,,இதுஎப்படி இருக்கு ??
|
by k சதீஷ் ,cbe,India 11/4/2009 3:36:04 PM IST |
இந்த மாதிரி பொம்பளைய எல்லாம் சும்மா விடக்கூடாது கொலை முயற்சி வழக்குபோட்டு வெளியவே வர முடியாமல் செய்ய வேண்டும்
|
by R mariyammal,Ramnad,India 11/4/2009 3:20:33 PM IST |
என்ன கேவலமான உலகம் இது! இதற்கு காரணம் பள்ளியில் ஒழுக்க கல்வி கற்று தரப்படவில்லை. எல்லா ஆசிரியர்களும் நாட்டின் வருங்கால தூண்களை உருவாக்கிறோம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். சிறு வயது முதல் நல்ல எண்ணங்களை சொல்லி கொடுத்தால் இவை போன்ற கேவலத்தை வரும் காலத்திலாவது தடுக்கலாம் .
|
by J R REX GERALD,LUDHIANA,India 11/4/2009 2:56:21 PM IST |
எய்ட்ஸ் ரத்தத்தை அவள் உடம்பில் ஏற்ற வேண்டும். இதுவே சரியான தண்டனை
|
by D SANTHANAM,CHENNAI,India 11/4/2009 2:16:32 PM IST |
இது போன்ற கொடூர குணம் கொண்ட பெண்களை உயிருடன் வைத்து சில வருடங்கள் சித்ரவதை செய்து பின்னர் உடலில் வெடிகுண்டு கட்டி ஒரு மாதம் வைத்து இருந்து பின்னர் வெடிக்க செய்து கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன். அந்நியன் தஞ்சை அம்மாபேட்டை
|
by si balu,manama,Bahrain 11/4/2009 1:32:55 PM IST |
It is better that, HIV blood should be given to her so that she can enjoy with HIV. Please do it for her. Like that, Indian society will change something.
|
by joe joseph,Italy,India 11/4/2009 1:12:14 PM IST |
செருப்பால அடிக்கணும்....
|
by r சங்கீத பிரியா,chennai,India 11/4/2009 1:08:40 PM IST |
இவளுக்கு எய்ட்சு ஊசி போடணும் ! முஞ்சியா பாறேன்
|
by K. ரகு ,Abudhabi,United Arab Emirates 11/4/2009 12:59:16 PM IST |
ராஜகுமாரி நீங்க பெண் அல்ல பிசாசு .. நியும் ஒரு பெண்தானே ...அவளும் பெண்தான் நி செய்தது நியாயமா .... பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி ...
|
by sdr sundar,trichy,India 11/4/2009 12:44:39 PM IST |
Govt should give severe punishment to her and to her family..
|
by நா ராஜேஷ், சென்னை,India 11/4/2009 12:03:22 PM IST |
No need to put them in the Jail. Just catch them & inject the HIV +ve blood in their body & send them.
|
by v christopher,sanaa,Yemen 11/4/2009 11:37:57 AM IST |
இப்பெண் வாழ தகுதியற்றவள். கொடூர கொலை செய்ய முயன்ற இவளை தூக்கிலிட வேண்டு்ம்.
|
by A அப்துல்லாஹ்,K,Kuwait 11/4/2009 11:13:47 AM IST |
தவறுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்
|
by K Gayathri,Trichy,Iran 11/4/2009 11:00:10 AM IST |
இந்த ராஜகுமாரிக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க வேண்டும். இவர்களை வெளியே நடமாட விடக்கூடாது.
|
by j nataraj,tirupur,India 11/4/2009 10:47:19 AM IST |
தகுதியே இல்லாதவரை தேர்ந்து எடுத்த மக்களின் கதி இதுதான்! எடுத்துகாட்டு ராஜா, இந்த கவுன்சிலர் போல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.
|
by n ஷண்முகம்,Kolkata,India 11/4/2009 10:29:40 AM IST |
இவளையெல்லாம் தூக்குல போடணும்.
|
by k கண்ணன்,bihar,India 11/4/2009 10:21:42 AM IST |
முட்டாள் லேடி
|
by D Karthik,pondicherry,India 11/4/2009 10:10:35 AM IST |
Send her to the gallows. Stone her until her skin is torn.
|
by pr பராங்குசம் ராமசுவாமி,USA,United States 11/4/2009 9:21:30 AM IST |
இந்த மாதிரி பெண்களை சும்மா விடவே கூடாது. நிக்க வச்சி சுடவேண்டும். கவுன்சிலர் பதவி முதலாவது பறிக்கப்பட வேண்டும்.
|
by Mr. Rajesh Joe,Chennai,India 11/4/2009 8:45:02 AM IST |
Why are you living in this world ?
|
by SP KPK,karaikkudi,India 11/4/2009 8:31:30 AM IST |
Govt / court should look into it and see to that people who are trying to transfering aids should put in jail till they die.
|
by G Dinesh,chennai,India 11/4/2009 8:23:10 AM IST |
WORST LADY
|
by VR ரஞ்சித் Rajan,BANGALORE,India 11/4/2009 2:46:16 AM IST |