Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
பிரதமரின் வருகையால் போக்குவரத்து மாற்றம்: சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார் அப்பாவி
நவம்பர் 04,2009,00:00  IST

சண்டிகார்: சண்டிகாரில் பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையை ஒட்டி செய்யப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், சிறுநீரக நோயாளி ஒருவர் சென்ற வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால், உரிய நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காமல் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.



அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் வர்மா. சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, நேற்று சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சண்டிகாரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதற்கிடையில், அதே மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வருகை தந்தார்.



அவரது வருகைக்காக நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டது. தனியார் மருத்துவமனையிலிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர்மாவைக் கொண்டு சென்ற அவர் குடும்பத்தார், வழியில் பிரதமருக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. மருத்துவக் கல்லூரியை நெருங்கிய வேளையில், வர்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.



 பிரதமரின் பாதுகாப்புப் படை வாகனங்களால், சாலையில் பிற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருந்தன. வர்மாவின் குடும்பத்தார், அந்த நெருக்கடியில் இருந்து வெளியே வந்து மருத்துவக் கல்லூரியை அடையும் முன் வர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர் கூறுகையில்,"இந்தச் சம்பவம் துரதிருஷ்ட வசமானது. வருத்தம் தரத்தக்கது. நடந்த சம்பவம் தொடர்பாக முழு விவரம் கேட்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 மறைந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் பதவி ஏற்ற பின் முதன் முறையாக சென்னைக்கு வருகை தந்த போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வழி நெடுக மூங்கில் தடுப்பு போடப்பட்டிருந்தை கண்டு இது எதற்காக எனக் கேட்டார். உங்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக எனக் கூறிய போது, நான் மக்களின் பிரதமர். நான் அவர்களுக்கு பாதுகாப்பு, அவர்கள் எனக்கு பாதுகாப்பு, பிறகு இடையில் ஏன் இந்த தடுப்பு என கேட்டார். மக்களைக் கண்டு பயப்படாதவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை.  
by G Sankaran,Chennai,India    11/4/2009 11:34:37 AM IST
 Very Bad.... The pelitical people can come in Helicraft. At least the trific can control... 
by S லாவண்யா,chennai,India    11/4/2009 11:01:07 AM IST
 No value for common man’s life. Prime Minister is also a human but he needs more security but no security for poor peoples life. Good democracy. 
by K ரமணி,Chennai,India    11/4/2009 9:26:56 AM IST
 விவரம் கேட்டு என்ன உபயோகம் ??உயிரை திருப்ப முடியுமா ???அரசியல் வாதி ஆகட்டும் மந்திரி ஆகட்டும் ,,அவர்களுக்கு எதற்கு இத்தனை பட்டாளம், ஆர்பாட்டாம். இது மாதிரி எத்தனை உயிர்கள் போகின்றன தெரியுமா ??இதற்க்கு என்னதான் முடிவு ???காவல் துறை செய்வது கொஞ்சம் அதிகம் தான் ,,அவர்களும் மனிதர்கள்தானே ??ஆகாயத்தில் இருந்தா வருகிறார்கள் ???ஒட்டு கேட்கும் வரும் பொது இத்தனை பந்தா இல்லையே ??அடுத்தவர் மனதை. செயலை, புரிந்துகொண்டு ஆட்சி செய்வதில்தான் நிம்மதி இருக்கிறது ,,இது போலே எத்தனைபேருக்கு நடக்கிறது தெரியுமா ???இனியாவது கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்தால் எல்லோருக்கும் நல்லது,, செய்வார்களா ???  
by k sathish,cbe,India    11/4/2009 9:20:36 AM IST
 இந்தியாவில் விலை அற்றது சராசரி குடிமகனின் உயிர்தான் ஜெய் ஹிந்

சூர்யா

 
by R Surya,Singapore,Singapore    11/4/2009 8:22:39 AM IST
 பிரதமர் வருகை பாதுகாப்பால் நோயாளி உயிர் இழப்பு.
இது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.
முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூராக இருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் வாழ்கிறார்கள்.
பாதுகாப்பு என்ற பெயரில் நாம் பொது மக்களை வாட்டும் நிலைக்கு அளவே இல்லை.
இதை தவிர்க்க ஒரே வழி.
இவர்கள் வருவதையோ அல்லது செல்வதை யாருக்குமே தெரிவிக்கக்கூடாது.
அதேபோல் தனி விமானபபயணமும் தவிர்க்கப்பட வேண்டும்.
கடைசி நேரத்தில் பயணிகளோடு பயணிகளாக இவர்களும் வரவேண்டும்.
அதே போல் பயணிகள் இறங்கும் முன் இவர்கள் இறங்கி தனி காரில் அழைத்து செல்லப்பட வேண்டும். அந்த கார் முழுவதும் கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்டுஇருக்கவேண்டும் .
பாதுகாப்புக்கு என்று ஒரு காவல் வாகனம் மட்டுமே முன்னும் மற்றும் பின்புறமும் செல்லவேண்டும். யாருக்குமே உள்ளே இருப்பது யார் என்பது தெரியாவண்ணம் அழைத்துச்செல்லப்படவேண்டும். இப்படி செய்தால் யாருக்குமே எந்த தீங்கும் வராது அரசுக்கோ பல கோடி ருபாய் மிச்சம்,
பொது மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டிக்கொள்லாமல் இவர்களும் நன்றாக இருக்கட்டும்.
இந்த முறை பின்பற்றாவிட்டால் வெள்ளைக்காரன் நம்மை ஆண்டதர்க்கும் , நாம் நம்மை ஆள்வதற்கும் என்ன வேறுபாடு?
Lion Dr S Sekar
India
 
by Ln Dr S Sekar,Chennai,India    11/4/2009 7:36:51 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்