Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
அமைச்சரின் பாஸ்போர்ட் மிஸ்சிங்: நள்ளிரவில் போலீஸ் 'பர பர'
நவம்பர் 04,2009,00:00  IST

புதுச்சேரி: அமைச்சரின் பாஸ்போர்ட்டை தேடி போலீசார் நள்ளிரவில், சாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருப்பவர் வல்சராஜ். இவரது பாஸ்போர்ட்டை கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக நேற்று முன்தினம் மாலை அவரது அலுவலக ஊழியர்கள், நகர மையப்பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு எடுத்துச் சென்றனர்.



 அப்போது, பாஸ்போர்ட் தவறிவிட்டதாக பெரியக் கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதட்டமடைந்த பெரியக் கடை போலீசார் 50க்கும் மேற்பட்டோர் ஜெராக்ஸ் கடைக்கு வந்து, அங்குலம் அங்குலமாக கடையை ஆராய்ந்தனர். கடை அமைந்த தெருவிலும் நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் நேற்று காலை அமைச்சர் அலுவலக ஊழியர்களே பாஸ்போர்ட்டை கண்டுபிடித்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்து பெரியக்கடை போலீசார் கூறுகையில், "அமைச்சரின் "உதவியாளர் வேறொரு காரில் பாஸ்போர்ட்டை வைத்து விட்டு சென்று விட்டார். அமைச்சர் அலுவலக ஊழியர்களே பாஸ்போர்ட்டை கண்டுபிடித்து விட்டனர்' என்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 Mr.Editor,

It''s not xerox copy. it''s a photo copy. Xerox is name of the photo copy machine. Moving forward please mention ''It''s photo copy''


Regards
Suresh 
by S Suresh,UAE,India    11/4/2009 11:32:44 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்