Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
கேரளாவில் மீண்டும் ஒரு படகு விபத்து: தண்ணீரில் மூழ்கி எட்டு மாணவர்கள் பலி
நவம்பர் 05,2009,00:00  IST

Important incidents and happenings in and around the world

மலப்புரம்: கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எட்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். கேரள மாநிலம் ஏரிக்காடு பகுதியிலிருந்து ஊர்கட்டிரி கிராமத்துக்கு செல்வதற்காக, மாணவர்கள் பலர் உட்பட 35 பேர் நேற்று படகு மூலம் சாலையார் ஆற்றில் சென்றனர். ஆற்றின் நடுவில் படகு சென்றபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.



இதில், படகில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் எட்டு பேர் அதே இடத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். மற்றவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். இறந்த மாணவர்கள் எல்லாம் மூர்க்கநாடு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். 16 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள். இறந்த எட்டு பேரில் ஒருவர் மாணவி. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை  பொதுமக்கள் உதவியுடன் போலீசார்  மேற்கொண்டனர். கேரள மாநிலம் தேக்கடியில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில், 45 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அந்தச் சம்பவத்தின் சோகச்சுவடு மறைவதற்குள் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 35 நாட்களுக்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



விபத்து நடந்தது எப்படி?: மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு அடுத்துள்ள மூர்க்கநாடு பகுதியில் உள்ளது எஸ்.எஸ்.மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் படித்து வரும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் வழக்கமாக, அரிக்கோடு செல்லும் சாலையின் குறுக்காக உள்ள சாலியாறு ஆற்றை படகில் கடந்து சென்றுள்ளனர். 35 மாணவ, மாணவிகள் படகில் பயணம் செய்தனர்; படகோட்டி இல்லாதததால் மாணவர்களே படகை செலுத்தியுள்ளனர். படகு சிறிது தூரம் சென்றதும் நிலை தடுமாறிய படகு ஒருபுறமாகச் சாய்ந்துள்ளது. அப்போது படகில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்தனர்; ஒரு சில மாணவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்.



ஆழமான பகுதியில் சிக்கிய மாணவர்கள் சுகைப், முஷரப், செமீர், தொய்பா, சாய்தலி, சவுபீக், சிகாபு, சிராஜ் ஆகிய எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகிலிருந்தவர்கள், ஆற்றில் தவித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளை மீட்டு கள்ளிக்கோட்டை, அரிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.  சம்பவ இடத்தை, கேரள கல்வித்துறை அமைச்சர் பேபி, சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமதி, மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 அந்த குழந்தைகள் சொர்க்கம் செல்ல எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.  
by Mr. சுசில் ,kaliforniya,United States    11/5/2009 2:28:38 PM IST
 இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பேப்பர் ல ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் வரும் அப்புறம் எல்லாரும் அதை பத்தி மறந்துருவாங்க . மொதல்ல இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வு வேணும். இந்த விபத்துக்கு காரணமான அத்தனை நபர்களையும் அதே ஆத்துல புடுச்சி தள்ளி வுடனும். அப்போதான் இது மாதிரி இனிமே நடக்காது . நன்றி  
by E குமார் ,india,India    11/5/2009 1:25:29 PM IST
 ப்ளீஸ் இதை அரசியல் ஆக்க வேண்டாம்  
by m.p meeran,auh ,India    11/5/2009 1:07:42 PM IST
 இறந்த நண்பர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தராமல் புதிய அனை கட்டுவோம் என்று வீம்பு சண்டை போடும் கேரளா அரசுக்கு இயற்கை மற்றும் கடவுள் எழுப்பும் அபாய எச்சரிக்கை மணி தான் இது போன்ற தண்ணீர் சாவு.
விழித்துகொள் கேரளா அரசு.. மாற்றிகொள் உன் அடாவடி போக்கை..இல்லையேல் நம் மானிட பதர்களால் கடவுளுக்கு பதில் சொல்ல முடியாது.
- காசிராமன் 
by S காசிராமன்,Bahrain,Bahrain    11/5/2009 10:56:02 AM IST
 திரு தேவனின் கருத்து மிக சரியானவை. அவரின் வரிகள் சற்று ஆறுதலாக உள்ளது.அந்த சிறு பிஞ்சுகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஈடு செய்ய முடியாவிடிலும், அன்பு சகோதரன் மடயன் அவர்களே ஆறுதல் அல்லது ஆலோசனை சொல்லவும். அரசியல் பண்ண வேண்டாம்  
by Mr. ஹாசிபு,Kumbakonam,India    11/5/2009 10:31:35 AM IST
 படித்த முட்டாள்கள் ஆட்சி செய்யும் கேரளா அரசாங்கம், தவித்த வாய்க்கு
தண்ணீர் தர மறுக்கும் முட்டாள்களே, தமிழர்களின் வயிற்று எரிச்சளால் அனாவசிய உயிர் இழப்புகள் வருகிறது. படித்த முட்டாள்களே அனாவசியமாக ஊர் சாபம் vaangathergal உஷார் உஷார் உஷார்  
by V சங்கர்,SFO,United States    11/5/2009 7:49:30 AM IST
 கேரளாவுக்கு தண்ணில கண்டம், அக்கம் பக்கதுக்கு தண்ணி குடுத்து உதவுங்கையா!இயற்கைக்கே பொருக்க்க மாட்டேன் என்கிறது.
மடயன்,மலப்புரம்,பாலக்காடு.  
by TK மடயன், ,மலப்புரம்,பாலக்காடு. ,India    11/5/2009 3:42:21 AM IST
 கேட்கவே கொடுமையான இந்த சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பள்ளிகளில் நீச்சல் கற்று கொடுப்பதை கட்டாயம் ஆகவேண்டும். நீச்சல் பயிற்சி என்பது முதலுதவி பயிற்சி போன்ற அத்தியாவசியமான ஒன்றே. நீச்சல் கற்கும் வாய்ப்பு பெரும்பான்மையான நகரத்து குழைந்தைகளுக்கு கிடைப்பதில்லை. எல்லோருக்கும் கல்வி என்பதில் இந்தியாவில் முதலிடம் பெற்ற கேரளா இதிலும் தன் முதலடியை பதிக்கட்டும் . கேரளா யானை, படகு விபத்துக்களுக்கு புகழ் பெற ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறது. எத்தனையோ நீர் நிலைகளில் இது போன்ற படகு சவாரிகள் இந்தியா முழுதும் உண்டு . குழந்தைகள் விரும்பும் இது போன்ற விளையாட்டுகளில் எது போன்ற முன்னெச்சரிக்கை தேவை என்பதை அரசு ஆய்ந்து அமல் படுத்த வேண்டும். இந்த விபத்தே கடைசி விபத்தாக இருக்க வேண்டும் . 
by D தேவன் ,Chennai,India    11/5/2009 2:25:08 AM IST
 பாவம்.. அந்த கொழந்தைகளின் பெற்றோர்கள்.. படகுக்காரன் இல்லை என்பதால் அவர்களே படகை ஒட்டினார்கள்.. என்ன ஒரு தவறான முடிவு? பஸ் ஓட்டுனர் இல்லை என்றல் இவர்களே ஒட்டி விடுவார்கள? பெரியார் அணை உடைந்து மக்கள் செத்து விடுவார்கள் என வீண் புரளியை கிளப்பும் கேரளா அரசாங்கம் இந்த மாதிரி சேவையில் கவனம் செலுத்தட்டும்..  
by s ஸ்ரீராம்,chicago,United States    11/5/2009 1:31:19 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்