Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
ஹவாலா மோசடி வழக்கில் கைதாகிறார் மது கோடா
நவம்பர் 06,2009,00:00  IST

ராஞ்சி: வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, ஹவாலா மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.



ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா. இவர் முன்னர் பதவியில் இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. அவரது வீடுகளில் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதும், ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியுள்ளதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 இதற்கிடையே, கடும் வயிற்று வலி காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் மது கோடா அனுமதிக்கப்பட்டார்; தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். வயிற்று வலி சற்று குறைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நேற்று சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் கூறுகையில், "மது கோடாவுக்கு வயிற்று வலி சற்று குறைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப் பட்டார். தற்போது, மிதமான அளவில் தான் அவருக்கு வலி உள்ளது' என்றனர்.



 அதே நேரத்தில், "மருத்துவமனையில் இருந்து மது கோடாவை டிஸ்சார்ஜ் செய்யும் முன், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகத்திடம் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதையடுத்து, மது கோடா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், மது கோடா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை இம்மாதம் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி ஜார்க்கண்ட் ஐகோர்ட், அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 கிருஷ்ணன் அவர்களே, முல்லை பெரியார் பிரச்சனைக்கும் இதுக்கும் டீல் முடிந்து விட்டது. இ.வி.கே.ஸ். இளங்கோவனிடம் கேட்டு பாருங்கள். 
by M அமானுல்லா ,Dubai,United Arab Emirates    11/7/2009 1:38:24 PM IST
 அது சரி, 60000 கோடி ஊழல் என்னசுங்கோ. அத ஊத்தி மூடிட்டாங்களா ??? 
by V R கிருஷ்ணன்,Redmond,United States    11/7/2009 2:36:50 AM IST
 இது போல எத்தனையோ கோடி எத்தனையோ பேர் ஏமாற்றி விட்டார்கள். விசாரணை கமிசன் வச்சு முடிவதற்குள் பத்திரிகைகளும் மறந்துவிடும். நம்மளும் மறந்துருவோம்.
That is India. Jai India.  
by N சக்திவேல்,Tiruppur,India    11/6/2009 4:37:42 PM IST
 மது கோடா (மதி கேடா?)
உங்களுக்கு ஹவாலா வருது சவாலா. வெடிக்க போவுது 1000 waalaa. 
by C Jegan,nagercoil,Singapore    11/6/2009 9:47:12 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்