Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
சக மாணவர்களை காப்பாற்றி மரணத்தை தழுவிய நண்பர்
நவம்பர் 07,2009,00:00  IST

அரிக்கோடு: படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது.



அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன், பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, இழுத்து வந்து கரையில் சேர்த்தார்.



 சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது தான், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்க நேரிட்டது. தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 this is the real friend ship .........................
there is no limit ..................... 
by s mohamed shaheed,al khobar,Saudi Arabia    11/7/2009 2:43:03 PM IST
 உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழிக்கு உயிர் கொடுத்தவர்.உங்கள் ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். 
by kalai raja,trichy,India    11/7/2009 11:44:10 AM IST
 En Sahotharane...! Unakku en Kodi muththangal.... Inshah Allah Unakku Allah Suvargathai Koduppan. Nare Thakbeer..!!
Allah Akbar...!!!! 
by M ISMAILBIN MOHIDEEN AL JAILANI,DUBAI,United Arab Emirates    11/7/2009 11:27:59 AM IST
 We appriciate that guy,but we feel that Accident 
by V.R. Murugan,Tamil Nadu,Chennai,India    11/7/2009 10:39:22 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்