தர்மசாலா: இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டம் குல்லர் அருகில் உள்ள பானர் ஆற்றில், பஸ் ஒன்று நேற்று கவிழ்ந்தது. இதில், 25 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இமாச்சல பிரதேசம், ஜஸ்பூரில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று, காங்க்ரா மாவட்டம் ஜுவாலமுகி பகுதிக்கு சென்றது.
வழியில், குல்லர் அருகே, வளைவு ஒன்று இருப்பதை கவனிக்காமல் சென்ற போது, டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பஸ் பானர் ஆற்றில் விழுந்தது.இதைத் தொடர்ந்து, சம்பவ பகுதியில் இருந்து ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும், அருகில் உள்ள டாண்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதில் பலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| வாசகர் கருத்து |