Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
காணாமல் போன கணவர்களை தேடி நந்திகிராமில் பெண்கள் துயரம்
நவம்பர் 07,2009,00:00  IST

நந்திகிராம்: மேற்கு வங்கம், நந்திகிராமில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன தன் கணவருக்காக, சுஷ்மா என்ற பெண் காத்துக் கொண்டிருக்கிறார். இதே போன்று இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானபெண்கள், தங்கள் கணவருக்காக, காத்திருக்கும் அவலம் நிலவுகிறது.



மேற்கு வங்கம் நந்திகிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மா மைத்தி (28). இவரது கணவர் பகீரத் மைத்தி. இவர், கோகுல் நகரில் அமைக்கப்பட உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விவசாய நிலங் களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நவம்பர் மாதம் 10ம் தேதி நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அந்த ஊர்வலத்தை ஆயுதம் தாங்கிய சிலர் தாக்கினர். இந்த கலவரத்தில், 12 பேர் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.



இதுகுறித்து சுஷ்மா மைத்தி கூறியதாவது:என் கணவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில், திருமணமான பெண்களின் மங்கள அடையாளமான குங்குமம் மற்றும் சங்கு வளையல்கள் ஆகியவற்றை இன்னமும் அணிந்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நவம்பர் 10ம் தேதி, ஆயுதம் தாங்கிய கும்பல், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்களை பிடித் துச் சென்றனர். மறுநாள், பலர் வீடு திரும்பினர். ஆனால், என் கணவர் இன்னமும் திரும்பி வரவில்லை.இவ்வாறு சுஷ்மா மைத்தி கூறினார்.



சுஷ்மா தன் மகள் மற்றும் மகனுடன், குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் சத்துணவுக் கூடம் ஒன்றில், சமையல் வேலை செய்து வருகிறார். இதே போன்று இந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்களின் கணவர்கள் காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து, சோனாசுரா கிராம ஊராட்சி பிரதிநிதியான ரத்தன் தோலு கூறுகையில்,"வறுமையில் வாடும் இந்த பெண்களுக்கு சமையல் மட்டுமே தெரியும். எனவே, இவர்களுக்கு சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிகளில் சமையல் வேலை அளிக்கிறோம். அவர்களுக்கு இந்திரா அவாஸ் யோஜனா திட்டத் தின் கீழ், கான்கிரீட் விடுகள் அமைத்து கொடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்