Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
பாலக்காட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு இளம் பெண் பலி
நவம்பர் 07,2009,00:00  IST

பாலக்காடு: பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண், பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானார். பாலக்காடு அருகே படலிக்காட்டைச் சேர்ந்த கண்ணனின் மகள் மஞ்சுஷா (17). இவர் இருமல், தொண்டை வலி, காய்ச்சலுக்காக கடந்த 3ம் தேதி, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



 ரத்தப் பரிசோதனை நடத்தியதில், இவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 4ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மாவட்ட மருத்துவமனை டி.எம்.ஓ., குட்டமணி கூறுகையில், "மஞ்சுஷா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒன்பது பேர், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்