Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
புலியை தொடர்ந்து சிறுத்தை: மலையோர கிராம மக்கள் பீதி
நவம்பர் 07,2009,00:00  IST

காலடி: எர்ணாகுளம் அருகே, மலையோர கிராமங்களில், புலி நடமாட்டத்தைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டமும் இருப்பதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி அடுத்து மலையோரங்களில் ரப்பர் பயரிடப்பட்டுள்ளது.



 இங்குள்ள சில கிராமங்களில், சில தினங்களாக, புலிகள் நடமாடுவதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சில கிராமங்களில், புலிகளைப் பார்த்த கிராம மக்கள், கூக்குரலிட்டு அவற்றை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். கடந்த மாதம் 21ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ரப்பர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த புலி, அவரைத் தாக்கியது.



இதையடுத்து, புலிகளை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகள் அமைத்தும், புலி பிடிபடவே இல்லை. நேற்று முன்தினம், அங்குள்ள ரப்பர் பிளான்டேஷன் அருகே, சிறுத்தை நடமாடுவதைப் பார்த்த ஒருவர், அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, ரப்பர் தோட்டத்திற்குள் இருந்தவர்களிடம் கூறினார். அதற்குள், அங்கும் சிறுத்தை தென்படவே, ரப்பர் பால் சேகரித்துக் கொண்டிருந்த தொழிலாளிகள், அவற்றை விட்டு விட்டு அங்கிருந்து அலறி ஓட்டம் பிடித்தனர். பின், கிராம மக்களின் துணையோடு, கூக்குரலிட்டும், கற்களை வீசியும் சிறுத்தையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். புலி நடமாட்டத்தால் பீதியில் இருந்த மக்கள், தற்போது, சிறுத்தையை பார்த்து, மேலும் பீதியில் உள்ளனர்.



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 It''s advisable for those workers to wear the Mask on the back side of their head, while they are working in that kind of situation for safety reason. 
by v christopher,sanaa,Yemen    11/7/2009 11:57:21 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்