Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
மகளை பலத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
நவம்பர் 12,2009,00:00  IST

Important incidents and happenings in and around the world

மூணாறு:மூணாறில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். மூணாறு நியூ காலனியை சேர்ந்த ராமலிங்கம் (45), ஜானகியின் மகள் கல்பனா(19) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). அடிமாலியில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கிறார்.



மூணாறு எஸ்.ஐ., அணில்குமாரிடம், "தன் மகளை மூணாறு மகாத்மா காலனியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி (60), கணவர் ராமலிங்கம் ஆகியோர் பாலத்காரம் செய்ய முயன்றதாக' ஜானகி புகார் செய்தார். இது குறித்து கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்பனா கூறியதாவது:



மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தந்தை ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் முனியாண்டி ஆகியோர், என்னை அக்., 27 ல் திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு லாட்ஜ் அறையில் ராமலிங்கத்தை இருக்க சொல்லிவிட்டு, முனியாண்டி என்னை தம் பானூர் பகுதி லாட் ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலத்காரம் செய்ய முயன்றார். நான் எதிர்ப்பு தெரிவித்ததால், "உன் தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர் சம்மதத்துடன்தான் உன்னை அழைத்து வந்தேன்,' என்று முனியாண்டி கூறினார்.



நான் தொடர்ந்து கூச்சலிட்டதால், அறையை காலி செய்து விட்டு திரும்ப அழைத்து வந்து விட்டார். இது குறித்து என் தந்தையிடம் கேட்டபோது, அவர் மவுனமாக இருந்தார். மேலும், என் தந்தையும் என்னை பலமுறை பலாத்காரம் செய்ய முயன்றார், '' என தெரிவித்தார். அடிமாலி அருகே சாற்றுப்பாறையில் பெண்கள் பாது காப்பு மையத்தில் கல்பனா தங்க வைக்கப்பட்டுள்ளார். ராமலிங்கம், முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
  malayali avanuka kunatha katta than chaivan 
by j jerome,rabig,Saudi Arabia    12-11-2009 19:54:09 IST
 Simply hang / behead this fellow in public like saudi then only these things will stop..... 
by H Althaf,Doha,Qatar    12-11-2009 15:27:35 IST
 இவனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லை. நடு தெருவுல வச்சி கல்லால அடிச்சி கொல்லனும்  
by by பத்மா ,Chennai,India    12-11-2009 12:38:27 IST
 immediately hang those ......rd. 
by AT saravanan,Bahrain,India    12-11-2009 09:59:19 IST
 Simply hang the bastard. I congratulate the girl who gave the complaint against her father...... 
by K Ganesh,Mumbai,India    12-11-2009 08:53:40 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்