Dinamalar - No 1 Tamil News Paper

சம்பவம்
ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
டிசம்பர் 15,2009,00:00  IST

சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.


புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.


தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.


செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்," நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்' என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 உலகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது. காப்பற்றுங்கள்! 
by dines தினேஷ் kumar,erode,India    24-12-2009 10:47:26 IST
 மதத்தின் பெயரால்,மத தலைவர்,மத குரு என்ற பெயரால் மோசடி, அடாவடிதனம், பலாத்காரம்,மானபங்கம்,ஈனத்தனம்,பாலியல் வன்முறை போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற ஈனத்தனமானவர்களை அவர்கள் எந்த சமயம்,எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து கடவுள்கள் பெயரால் செய்யப்படும் இந்த கீழ்தர செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். 
by Ibnusalih.,Abudhabi.uae.,India    16-12-2009 00:19:11 IST
 விலங்குகல்கூட இன்னொரு விலங்கால் வரப்போஹும் இன்னல்ஹளை முன்கூட்டிய அறிந்து அதற்கேற்றாற்போல் நடந்துகொல்ஹின்றன. சாமியாரின் அனுஹுமுரையில் வித்யாசம் கண்டவுடனே அவரை காட்டிக்கொடுக்காதது ஏன்?

 
by T Selvamani,chennai,India    15-12-2009 23:32:32 IST
 தவறு இந்த பெண்ணின் மேல் தான். எந்த ஒரு கால கட்டத்திலும் யாரையும் நம்ப கூடாது. பெண்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஜாக்கிரதை.  
by P Ravichandran,Madurai,India    15-12-2009 22:29:22 IST
 இனி ஒரு போதும் கடவுள் என்று ஆசாமிகளை நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையையோ அல்லது பணத்தையோ மட்டுமே குறிவைப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
 
by kadhar badhusha,dubai,United Arab Emirates    15-12-2009 20:50:13 IST
 Dear Indian Ladies, if you want to have a child DO NOT GO AFTER THE SAMIARS OR ANY RELIGIOUS SAINTS. GO to your loving husbands and have many children.  
by rj thamilanban ,mnama,Bahrain    15-12-2009 12:24:26 IST
 கடவுளை மட்டும் கும்பிடுங்கள். கடவுள் என்பவர் கண்ணுக்கு தெரியாதவர். அவரை எந்த ஒரு மனிதன் மூலமாகவும் பார்க்க முடியாது. அதனால் மனிதனையும் கடவுளோடு ஒப்பிடாதீர்கள்.  
by u ganesh,panruti,India    15-12-2009 11:55:56 IST
 இது நிருபிக்கபட்டால் , இச்சாமியாரை தூக்கில் போடவேண்டும். தண்டணை அதிகமானால் தான் தவறுகள் குறையும். 
by A அப்துல்லாஹ்,kuwait,India    15-12-2009 10:10:39 IST
 sameeyar endru sonnaale police should act fast. 
by V Babu,chennai,India    15-12-2009 09:25:26 IST
 பெண்கள் முதலில் சாமியார்களிடம் சென்று குறி கேட்பது, குழந்தை வரம் கேட்பது போன்றவைகளை நிறுத்துங்கள். உங்கள் குறைகளை ஒரு மாறுதலுக்கு கோவிலுக்கு சென்று கடவுளிடம் மனதிற்குள் முறையிடுங்கள் போதும். மற்றபடி கோவில் ஐய்யர் மற்றும் சாமியார்களிடம் உங்கள் குடும்ப பிரச்சனைகளை சொல்லாதீர்கள். அவர்களே நாளை உங்களுக்கு பிரச்னையாகி விடுவார்கள். எனவே அவர்களிடம் வேலைக்கு செல்வதையும் தவிர்த்து விடுங்கள். இந்த ஹேமலதா போல் எத்தனையோ பெண்கள் வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். இனி ஒரு போதும் கடவுள் என்று ஆசாமிகளை நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையையோ அல்லது பணத்தையோ மட்டுமே குறிவைப்பார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.
 
by S. NAVANEETHAKRISHNAN,Tamilnadu,India    15-12-2009 08:13:20 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்