Dinamalar - No 1 Tamil News Paper

சம்பவம்
ரூ.7 கோடி பஞ்சலோக சிலைகள்விற்க முயன்ற 5 பேர் கைது
ஜனவரி 13,2010,00:00  IST

பெரிந்தல்மண்ணா:இரு பஞ்சலோக சிலைகளை விற்க முயன்ற, ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டதில், பஞ்சலோகத்தால் ஆன இரு சிலைகளை கடத்தியது தெரிந்தது. சிலையை கடத்திய ஐந்து பேர் கும்பலை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தலைமறைவாகி விட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



இச்சிலை குறித்து திருச்சூர் தொல்லியல் துறை வல்லுனர்கள் கூறியதாவது:நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ்விரு சிலைகளை, தமிழக கோவில்களில் இருந்தோ அல்லது வட கேரள மாநில பகுதிகளில் இருந்தோ கொள்ளையடித்திருக்கலாம். உமாதேவி சிலை 9.5 கிலோவும், நேமிநாத தீர்த்தங்கரா சிலை, நான்கு கிலோவும் உள்ளது. தென்னிந்தியாவில் அபூர்வ வகை சிலைகளில் ஒன்றாக, நேமிநாத தீர்த்தங்கரா சிலை கருதப்படுகிறது. இவை, ஏழுகோடி ரூபாய் மதிப்புள்ளவை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்