Dinamalar - No 1 Tamil News Paper

சம்பவம்
முத்துப்பேட்டையில் மதக் கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு
ஜனவரி 30,2010,00:00  IST

திருவாரூர் : முத்துப்பேட்டையில் இந்து - முஸ்லிம் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்துள்ளது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பதட்டம் தொடர்வதால், ஐ.ஜி., கரண் சிங்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் சிவா (எ) சிவகுமார்(39). பா.ஜ., மாவட்டச் செயலரான இவர், நேற்று முன்தினம் மாலை தனது டாடா சுமோவில் முத்துப்பேட்டை கடைவீதி வழியாக வீட்டிற்கு சென்றார். தெற்கு வீதி சந்திப்பில் அவரது கார் மீது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடி உடைந்தது.
ஆதரவாளர்கள் 50 பேருடன் முத்துப்பேட்டை போலீசில் சிவா புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சிவா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் கூறியதையடுத்து சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம்கள் வசிக்கும் தெற்கு வீதியில் நடந்து சென்ற பேட்டையைச் சேர்ந்த டைலர் தங்கராசு(57), நடராஜன் ஆகியோரை வழி மறித்து, இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். இது குறித்தும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்களால் ஆத்திரமடைந்த பேட்டை பகுதி மக்கள், சிவா தலைமையில் திரண்டனர். பேட்டை பகுதிக்குள் முஸ்லிம்கள் நுழையக்கூடாது என்று தடுத்தனர். இதனால், இந்து - முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மனித நேய பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், புறவழிச் சாலையில் இருந்த இந்துக்களின் கடை, பஸ் நிலையத்தில் உள்ள காய்கறிக் கடை உள்ளிட்ட ஐந்து கடைகளை சூறையாடியதோடு, திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர்; கடைகளை தீ வைத்து எரித்தனர். இதை பார்த்த மக்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதை போலீசார் கட்டுப்படுத்தாமல் அனைவரும் போலீஸ் நிலையத்திலேயே இருந்தனர்.
இந்துக்களின் கடைகளை  தீயிட்டு கொளுத்தியதால் ஆத்திரமடைந்த இந்துக்கள், பேட்டை பகுதியில் முஸ்லிம்கள் நுழைய தடை செய்தனர். இதனால், மீண்டும் நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். சையது அபுதாகீர் உட்பட இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. எஸ்.பி., பிரவீன்குமார் அபிநபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.  நேற்று காலை முதல் நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
ஐ.ஜி., கரண் சிங்கா நேற்று நேரில் வந்து விசாரணை செய்தார். அவரது தலைமையில் எஸ்.பி.,க்கள் திருவாரூர் பிரவீன்குமார் அபிநபு, தஞ்சாவூர் செந்தில்வேலன், நாகை மகேஷ்வர் தயாள், புதுக்கோட்டை மூர்த்தி, அரியலூர் நஜ்மல் கோடா, 20 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததே, மதக் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 கலைஞர் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் வரைக்கும் இந்துக்கள் வாலை ஆட்ட முடியாது. ஆர்.எஸ்.எஸ் நடத்திய குடியரசு தின ஊர்வலத்தை தடை செய்தார். ஆனால், நாங்கள் நடத்தும் ஊர்வலங்களை அவர் தடை செய்யமாட்டார். காபிர்கள் இஸ்லாமை தழுவும் வரைக்கும் திமுக ஆட்சியில் இருக்க அல்லாஹ் அருளுவான். 
by A முத்துஹனீபா,மஸ்கட்,India    08-02-2010 01:08:07 IST
 Don''''t manipulate the word against the history of the incident, people knows everything also this is not the clash between hindus and muslims but the clash between an rss man and an mnp man. 
by G Mohamed,Tiruvarur,India    30-01-2010 13:18:11 IST
 ஹைய்யா மதச்சார்பற்ற அரசு, மதச்சார்பற்ற நாடு. பாவம் மக்கள்.  
by B Annadurai,Theni,India    30-01-2010 10:54:58 IST
 எங்கே நமது வாசகர் பால கணபதி... நேற்றைய செய்தி ஒன்றில், மோடி குஜராத்தில் கலவர கொலைகளை முன் நின்று நடத்தினார் என்றாரே... எங்கே இன்று கருணாநிதி இந்த கலவரத்தை முன் நின்று நடத்துகிறார் என்று சொல்கிறாரா பார்க்கலாம்... 
by H நாராயணன்,Hyderabad,India    30-01-2010 02:01:13 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்