சென்னை : "வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவர்கள், எங்கள் நிறுவனத்தில் உறுப்பினரானால் வீட்டில் இருந்தபடியே கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என, நூதன முறையில் தங்க காசு மோசடி செய்த நிறுவனத்திற்கு சென்னையில் போலீசார் "சீல்' வைத்தனர். அந்நிறுவனத்தில் இருந்து 71 கிலோ தங்க காசுகள், கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்நிறுவன பெண் நிர்வாக இயக்குனர் உள்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ராமசந்திரன் தெருவில் வசிக்கும் வீரராகவன் என்பவரின் மகன் தினேஷ்குமார் (33); வியாபாரி. போதிய வருமானம் கிடைக்காமல் வாழ்க்கையை நடத்திய தினேஷ்குமாருக்கு, திருவான்மியூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவரின் கஷ்டத்தை பார்த்த ஸ்ரீகாந்த், ""சேத்துபட்டில் "குவெஸ்ட் நெட் (கோல்ட் குவெஸ்ட்) என்ற மல்டி-லெவல் மார்கெட்டிங்' நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் ரூ.31 ஆயிரம் பணத்தை கட்டினால், வீட்டில் படுத்துக் கொண்டே கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம்,'' என்றார். இவரின் பேச்சில் நம்பிக்கையில்லாமல் காலம் தாழ்த்தினார். எனினும், அந்நிறுவனம் நடத்திய வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்து சென்று மூளை சலவை செய்ததில், மயங்கிய தினேஷ்குமார் 2006ம் ஆண்டு ரூ.62 ஆயிரம் கட்டினார். அப்பணத்திற்கு, ஆறு கிராம் தங்க நாணயம் இரண்டு தந்தனர். தான் கட்டிய பணத்திற்கு வெறும் ஆறு கிராம் தங்கமா என அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், பணத்தை திரும்ப கேட்டு மேற்படி நிறுவனத்திற்கு நடையாய் நடந்தார்.
"உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள், இருதினங்களுக்குள் பணம் வீடு தேடி வரும்' என குவெஸ்ட் நெட் நிர்வாக இயக்குனர் புஷ்பம் கூறினார். அன்று மாலை தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த இருவர், "பணத்தை கேட்டு எங்கள் நிறுவனத்திற்கு வந்தால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டிவிட்டு சென்றனர். இதில், மிரண்ட தினேஷ்குமார் நேற்று முன்தினம் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரின் விவரம்: இன்டர்நெட் மூலமாகவும், நேரிலும் சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என ஸ்ரீகாந்த் சொன்னார். அவரின் பேச்சை நம்பி அந்நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் கட்டினேன். அதற்கு ஆறு கிராம் தங்க காசுகள் இரண்டு கொடுத்தனர். எனக்கு நகை வேண்டாம், கட்டிய பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்' என்று தெரிவித்திருந்தார்.இப்புகாரின் பேரில் போலீசார், நேற்று முன்தினம் சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் சாலையிலுள்ள "குவெஸ்ட் நெட்' அலுவலகத்திற்கு சென்றனர். அங்கிருந்த கீழ்ப்பாக் கத்தை சேர்ந்த அப்பளநாயுடு என்பவரின் மகளும் நிர்வாக இயக்குநரான புஷ்பம் (40), மேலாளர்கள் அகஸ்டின் (37), தண்டபாணி (33), சுமேஷ் (28) மற்றும் ஊழியர்கள் ஹரி பிரபாகர் (39), சந்திரசேகர ராவ், வித்யா (30) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல் படும் இந்நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும் 220 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "குவெஸ்ட் நெட்'டிற்கு ஈரோடு, சேலம், மதுரையில் கிளை அலுவலகம் உள்ளது. வரும் 22ம் தேதி 10வது ஆண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கட்டும் பணத்திற்கு தங்க காசு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா, உடற்பயிற்சி சாதனங்கள் என ஐம்பது விதமான பொருட்கள் தரப்படுகின்றன. உதாரணமாக, தங்க காசு திட்டத்தில் சேருபவர்கள் முதலில் ரூ.31 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். அவருக்கு "தலைவர்களின் உருவம்' பதித்த ஆறு கிராம் தங்க நாணயம் கொடுக்கப்படும். அவர் இரண்டு பேரை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அந்த இரண்டு பேரும், ஆளுக்கு இரண்டு பேரை சேர்க்க வேண்டும். இப்படி சங்கிலித் தொடராக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
இப்படி தொடர்ந்து, ஆறு பேர் வாங்கினால் முதலில் சேர்ந்தவருக்கு ரூ.2 ஆயிரத்து 300 முதல் 11 ஆயிரத்து 500 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்.இதில், யாராவது ஒருவர் இரண்டு பேரை சேர்க்க முடியாவிட்டால் கமிஷன் கிடைக்காது; கட்டிய பணமும் திரும்ப வராது. இதுபோல, இவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை கட்டிவிட்டு, "ஆறு கிராம்' தங்கத்துடன் நொந்தவர்கள் பட்டியலில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளி வரை உள்ளனர் என தெரியவந்தது. போலீசார் நேற்று அந்நிறுவனத்திற்கு பூட்டுப் போட்டு "சீல்' வைத்தனர். அங்கிருந்து 71 கிலோ தங்க காசுகள், 12 லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதுகுறித்து, செம் பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக் குப் பதிந்து மேற்படி ஏழு பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கமிஷனர் அலுவலகம் முற்றுகை : "குவெஸ்ட் நெட்' (கோல்ட் குவெஸ்ட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட ஏழு பேரை தங்க காசு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையறிந்து, நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், "நிறுவனத்தின் ஊழியர்களை கைது செய்யக் கூடாது; இந்நிறுவனத்தை நம்பி லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர்' என கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால், கமிஷனர் அலுவலக நுழை வாயில் மூடப்பட்டது. இதையடுத்து, எழும்பூர் உதவி கமிஷனர் அசோக், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் கட்டுக் கடங்காமல் போனது. இக்கூட்டத்தினர், நிறுவனத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கமிஷனர் ராமசுப்பிரமணி மற்றும் போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை எழும்பூர் போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்க காசுகள் மோசடி செய்த "குவெஸ்ட் நெட்' நிறுவனம் இதே போன்ற மோசடி வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு சிக்கியுள்ளது. அப்போது, ஐந்து கிலோ தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வழக்கில், தற்போது சிக்கியுள்ள நிர்வாக இயக்குனர் புஷ்பம் உட்பட பலர் கைதாயினர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்நிறுவனம் பிரச்னையில் சிக்கியுள்ளது. தற்போது, 71 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது; இதன் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய்.
| வாசகர் கருத்து |
This problam owncome if all IR understand and compony therm and condition.This not quickrich compony but you must work hard for that.
|
by kanagalingam,,Malaysia 07-05-2008 17:59:26 IST |
Please think before doing anything. its a binary tree. always the no. of leaves will be greater than the non-leaf nodes. always leaf node will be in big loss (paying 30k for 6 gram of gold). more depth the tree, one will get his money back. obvious root person will get most of it. think leaf node will curse the immediate person like anything. Please avoid it. think of work & earn. not sitting & getting the cheques.
|
by Bals,,India 05-05-2008 13:55:02 IST |
This absolutely MLM this company members try to convince not MLM, then how to get commission increase if more people join under the downline?. Isn`t cheating different way of more professional?????
|
by Kathiravan,,Singapore 05-05-2008 13:24:17 IST |
This business totally brain wash people. Asking yourself deceive by someone then you start to cheat others.
|
by Aravin,,Singapore 05-05-2008 13:02:17 IST |
First of all, let me summarize few things that may clarify whoever reads the issue:-- 'Quest Net enterprises pvt Ltd' provides us a Refferal Marketing business. Definetely this is not a MLM.It is a binary overflow system,a type of Network Marketing. Register yourself,purchase a product,refer your contacts,get commission...this is what everyone of your contacts must do get commission. This business is based on word of mouth, the trust & belief... It is similar to what our indurance agent friend does....what a marketing man does....... BUT SOMEPEOPLE DONT WANT TO WORK,DONT WANT TO PUT EFFORT, BUT EAGER/FRUSTRATED TO GET THE COMMISSIONS.....Not Fair isnt it? It is the people doing Fraud, not the Company. It is the people who couldnot understand the system. It is the people who could not do the business with ethics. The company does not promise anywhere that whoever joins as an Independent Representative(IR memeber), will start to earn commissions every week. Pls dont blame the Company for you not doing your good job!
|
by Amutha,,Singapore 05-05-2008 08:02:17 IST |
Before one joins the MLM companies, they should understand well how it works. No everyone who is in MLM are communicating the process clearly to those who wish to join. There are quite a lot of people all over the world join these MLM network and left in the middle. It is not easy to excute this network. One should have lot of contacts and time to work on this. Time is nothing other than money. Put your time on strengthy... not weeknes..
|
by Prakash,,Singapore 04-05-2008 22:31:37 IST |
Dear Readers,Pls advz your relatives & friends,not to join in multilevel.Better to invest in Post office or Bank, Cheers
|
by RAJANIKANTH - JEDDAH KSA,,Saudi Arabia 04-05-2008 22:12:32 IST |
absolutly frauds are in multi level marketing. i saw lot of peoples are joining the multi level marketing all r loose their money....with out work u decide to earn maney means it is not stay along with u like GOLDQUEST................54 FRDS OF MINE IS LOOSE THE MONEY IN THAT PARTICULAR COMPANY
|
by selva,,India 04-05-2008 21:40:08 IST |
Its not compnay mistake, its totaly misunderstand by the complainer, its not also quick rich scheme, people have to put lot of effort to earn money, the company will quickly come up from this flase report and they will do their business without any problem in future.
|
by raja,,India 04-05-2008 21:38:35 IST |
i also in this business. in this company has joined three million people in this world . 10 years it's turn over the 50 years company. so, i think this is a cheating news and set up program. i and my down line every weak get in good income . so, don't give them a wrong information . it's our future. if any budy don't believe pls send me e-mail i will give u the my checks copy.
|
by kalaiyarasan,,Singapore 04-05-2008 21:22:53 IST |
My dear Police, This practice going on everywhere in chennai for the past 10 years, lakhs of students, unknown people got trap in their hands. Well educated people also cheated including my friends working as colledge lecturer. They invited me many occasion to put into their hole. Any level of common sense people can understand their cheating business. What police department were doing for the past 10 years.??? You cannot blame public simply... Where is investigation report?? Why action not taken against them for such long time? Please wake up. Crush them. Save public. We will salute you. regards, Ravi
|
by Ravi L.K.,,United Arab Emirates 04-05-2008 21:03:21 IST |
Dear All, My name is saravanan. i am very much against this type cheating business. In my family , few pepople are broken because of this businss. I am requesting you all, to join our hands to protect ourself from this type of business Thanks Regards / Saravanan
|
by SARAVANAN PERUMAL,,United Arab Emirates 04-05-2008 20:20:48 IST |
everyone must visit this web site. the leader of fraud combany web site . www.vijayeswaran.com
|
by thambi,,India 04-05-2008 20:14:30 IST |
All Multi Level Marketing are Cheating the Middle class and poor people. The Indian Govt. Should close all MLM Company and make the settlement to the investors.
|
by Swaminathan,,India 04-05-2008 19:52:52 IST |
வணக்கம்.மக்கள் திருந்த வேண்டும்.இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்.
|
by ராஜ் குமார்.,,Saudi Arabia 04-05-2008 18:38:20 IST |
I dont find any fault with frauds. It is the fault of people who got cheated. Even after seeing so many fraud cases everyday on news papers, still our people are going behind the frauds. Simple reason behind it is to make money quickly without any effort. Even after knowing that a guy is cheating, people always think that only other guy got cheated, but not me. But they forget that they are next. Even police people can't do anything with it. When we are bargaining for an hour for buying a bag of tomato from a small vendor, we are easily giving money to these kind of people without even asking anything. It is the people's responsibility to be aware of these frauds and keep away from it.
|
by Thennavan,,United States 04-05-2008 17:10:52 IST |
Don't join multi level marketing totally cheat and lot of confuse in their plans
|
by Parthiban,,India 04-05-2008 16:52:11 IST |
The company's plan and potential is excellent and challenging. This company is established on some very good principles. Do not blame the company for someone's failure. The media and public may be over reacting sensationalizing the issue. This current incident will definitely work in favour of the company. Long Live QI. Lilly Chacko
|
by Lilly,,India 04-05-2008 15:03:25 IST |
When I was in Coimbatore in 2006 Dec, for naturopathy treatments, my doctor brought me for this MLM Company's meeting. I was told to join in the buisness. About 1000 people attended the meeting at that time. Even I was told to recruit people in Singapore. Very fortunately, I Did Not join. Thanks to GOD.
|
by Uthaman,,Singapore 04-05-2008 15:02:36 IST |
Thousands of people are joining and using Questnet's products. The problem is believing that someone can earn money by purchasing a product for Rs 31,000 and earning crores just sleeping at home. Plan and potential is excellent and challenging. Do not blame the company for somebody's failure. Lilly
|
by Chacko,,United Arab Emirates 04-05-2008 14:52:07 IST |
Temptations ruling over the practical reasoning is the main cause for these kind of problems.one should be very careful in analysing the business and the company before investing in it.
|
by Gopinath,,India 04-05-2008 14:38:50 IST |
There is no cheating involved in this case. There is only haste on the part of the police in taking such extreme action there by jeopardising the livlihood of lakhs of honest QuesNet Independant Representatives. The complainants seem to have played into the hands if vested interests. The compensation plan is clear. An individual has to register and buy any one product or service of the company. The company gives a business opportunity. On further referals the commission is paid. The question of refund does not at all arise here. The media also is blowing things out of proportion with wrong information thereby doing only disservice to lakhs of honest Representatives of this Company.
|
by K Maulee,,India 04-05-2008 14:38:08 IST |
Iam also joined this company recently .This Questnet is if understand properly You can achive good.and same time we shoud not give any wrong promeses to any one. If work properly and legaly this MLM is good for future.espeally before join this we have to thing about this we can do or not then strat ok christopher U.A.E
|
by christopher,,United Arab Emirates 04-05-2008 14:30:48 IST |
iam also no this company,iam doing this mistake,so how can get money from this company. pls give me sugestion.
|
by ramachandran.c,,India 04-05-2008 07:09:34 IST |
in the name of multilevel marketing these peoples are cheating the middle class very easily by telling CAN BE RICHEST WITHIN YEAR. govt should take severe action against this thousands of companies in india.
|
by TAMILAN,,Qatar 04-05-2008 01:49:44 IST |
The Gold Quest Co.... Is the No.1 MLM Business company around this world.... But some times...some peoples(IR MEMBER) says wrong promise for the new members.... Thats only matter in this problem.... I m also in this business.... Me & my down lines receiving checks Weekly....Because Me & My friends understand for in this business....
|
by Bharathy,,India 04-05-2008 00:22:20 IST |