பொள்ளாச்சி: கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்துக்கு, இந்தாண்டு நிதி ஒதுக்கப் படாததால், பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் துவங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளுக்கு இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொள்ளாச்சி - திண்டுக்கல் - பாலக்காடு - போத்தனூர் வரையிலான ரயில்வே பகுதியில் மிக நீண்ட தூரம் (224 கி.மீ.,) மீட்டர் கேஜ் ரயில்பாதைகள் உள்ளன. இப்பாதைகளை அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும், தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கு அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
தொழில் அமைப்புகள் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தீவிரமாக வலியுறுத்தியது. இதையடுத்து, மத்திய ரயில்வே பட்ஜெட்டில், கடந்த 2007ம் ஆண்டு ரூ. 30 கோடியும், 2008ம் ஆண்டு ரூ. 65 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தற்போது ரூ. 88 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இந்நிதியை, கொண்டே தற்போது திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி - பாலக்காடு - போத்தனூர் வரையிலான பணிகளை பாலக்காடு கோட்டம் சார்பிலும், திண்டுக்கல் - பொள்ளாச்சி வரையிலான பணிகள் மதுரை கோட்டம் சார்பிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - பாலக்காடு வரையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள பாலக்காடு கோட்டத்துக்கு, கடந்த மே மாதம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தும், இதுவரை முழுமையாக நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. துவங்கப்பட்ட பணிகளும் மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி - திண்டுக்கல் வரையிலான பகுதிகளில் விரைவில் திட்டப்பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மார்ச் 1ம் தேதி முதல் இப்பகுதிகளுக்கு இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், தொடர்ந்து இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததாலும், ஒதுக்கிய நிதியை விடுவிக்காததாலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தற்போது, போதியளவு நிதி இல்லாததால், பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், திட்டத்துக்கு போதியளவு நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த ரயில்வே சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இதன் காரணமாக, பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து ரத்து செய்வது குறித்து அறிவிப்புகள் வரும் வரை பொள்ளாச்சி - திண்டுக்கல் பகுதியில் வழக்கம் போல் ரயில்களை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் ரயில்கள் வழக்கம் போல் அதே நேரத்தில் இயக்கப்படும் என, ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
| வாசகர் கருத்து |
Sir, It is very regretable the railway authority still postponed the BG line from Dindugal to Palagat. Pepople from Rameswaram, and Ervadi are find difficulities to access Coimbatore and Palagat. Nearly three years has been lapsed since the service was terminated from Rameswaram. So no more delay should not be allowed for complition of the line. More over there is no time limit was fixed to complete the BG line. Hope, Mr. Lalu and Mr. Velu will look in to the matter very seriously. Thanking you
|
by M Ravindran,Ramanathapuraqm,India 03-03-2009 19:20:25 IST |
Dindigul-Pollachi route is strategically very important route and was neglected many years. It is high time that railways should wake up and take serious developments to make sure these areas comes under Broad Gauge Map.
|
by P GANESH NARAYANAN,Bangalore,India 01-03-2009 18:52:04 IST |
in every meeting railway ministers lalu and velu says that there are abouve 1000 crore profit and it is submitted in central govt. Lalu opens lot of railway routes in Bihar . Velu opens lot of functiones in his Ranipet area. But nobody care about coimbatore area.all the people should like to protest against Lalu and Velu in all the people like area from Dindigul to Palgat and Villuppuram to Velur area peoples . . protest should be very seriously otherweise they says every everymeeting only lies.. stop their lays do order work and allacote fund release immediatly .. other dont enter thi sarea .. by peoples in villuppuram to velur and dindigul to cbe and palghat .
|
by m vijayasekaran,pondy,India 01-03-2009 16:59:52 IST |