E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
65 ஆண்டு காலம் ஆகியும் தீராத அவலம்: தலைமை நீதிபதி தத்து வேதனை
65 ஆண்டு காலம் ஆகியும் தீராத அவலம்: தலைமை நீதிபதி தத்து வேதனை
நவம்பர் 27,2014

7

புதுடில்லி: ஏழைகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம் என் நமது அரசியல் சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது;ஆனால் 65 ஆண்டு ஆகியும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று தலைமை நீதிபதி தத்து வேதனை ...

 • முரளி தியோரா மரணம்:பிரதமர் இரங்கல்

  நவம்பர் 24,2014

  புதுடில்லி : முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முரளி தியோரா உடல்நலக் குறைவு காரணமாக காலமானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், முரளி தியோராவின் குடும்பத்தினருடன் நேற்று தான் நான் பேசி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஆனால் இன்று அவர் காலமான செய்தி மிகுந்த வருத்தம் ...

  மேலும்

 • சகாரா அலுவலக ரெய்டில் ரூ.125 கோடி மீட்பு

  நவம்பர் 24,2014

  புதுடில்லி : நவம்பர் 22ம் தேதி டில்லி மற்றும் ரொய்டாவில் உள்ள சகாரா நிறுவன அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.125 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • சமஸ்கிருதம் கட்டாயமில்லை:ஸ்மிருதி

  3

  நவம்பர் 24,2014

  புதுடில்லி : பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயமில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ...

  மேலும்

 • பண முதலைகள் மீது ரிசர்வ் வங்கி கவர்னர் கோபம்: கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடிக்கும் கண்டனம்

  18

  நவம்பர் 26,2014

  ஆனந்த்: ''நாட்டின் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும், முதலாளிகளும், வங்கிகளில் ...

  மேலும்

 • டிச., 31க்குள் சொத்து விவரம் அவசியம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

  8

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் சொத்து கணக்கை, டிசம்பர் 31ம் தேதிக்குள் அரசிடம் ...

  மேலும்

 • Advertisement
 • மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா வகுப்புகள்

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: டில்லியில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், அடுத்த மாதம் முதல், யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.சமீபத்தில், ஐ.நா.,வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'சர்வதேச அளவில், யோகா தினத்தை அறிவிக்க வேண்டும்' என, உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ...

  மேலும்

 • மோதிக்கொண்ட தமிழக கட்சிகள்: கடிந்து கொண்ட பி.ஜே.குரியன்

  நவம்பர் 26,2014

  தர்மபுரியில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எம்.பி.,க்கள், கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது நடந்த கடும் ரகளைக்கு மத்தியில், ''உங்களது சண்டைகளை, தமிழகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன், கடிந்து கொண்டார்.ராஜ்யசபாவில், ஜீரோ ...

  மேலும்

 • எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்கரை ரோந்து பணி பாதிப்பு

  நவம்பர் 26,2014

  மும்பை: கடந்த 2008ம் ஆண்டு, கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த, 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், 18 பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, மகாராஷ்டிர போலீசார், மாநிலத்தின் 720 கி.மீ., நீளமுள்ள கடற்கரையை தீவிரமாக கண்காணிக்க, 30 கோடி ரூபாய் செலவில், 72 நவீன படகுகளை ...

  மேலும்

 • கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் பீதி: வாத்து, கோழிகளை கொல்லும் பணி துவக்கம்

  நவம்பர் 26,2014

  திருவனந்தபுரம்: கேரளாவில், ஆலப்புழா, கோட்டயம், பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் ...

  மேலும்

 • செயின் பறிப்பு அதிகரிப்பால் அடகு கடைகளுக்கு கெடுபிடி

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: பெண்களை வழி மறித்து, தங்க செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அடகு நகை கடைக்காரர்களுக்கு, புதிய விதிமுறைகளை, போலீசார் விதித்துள்ளனர்.பெங்களூரு போலீஸ் கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன் கூறியதாவது:* அடகு நகைக் கடைகாரர்கள், நகை அடகு வைக்க வருவோர் பற்றிய தகவல்களை, போட்டோவுடன் பதிவு ...

  மேலும்

 • இச்... நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: ''பெங்களூருவில், 'கிஸ் ஆப் லவ்' அமைப்பின், 'முத்தம் கொடுக்கும்' நிகழ்ச்சிக்கு, அனுமதியளிக்க முடியாது,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி திட்டவட்டமாக கூறினார்.300 பேர்: 'கிஸ் ஆப் லவ்' அமைப்பு சார்பில், 'முத்தம் கொடுக்கும்' நிகழ்ச்சி, வரும், 30ம் தேதி, மாலை, 4:00 ...

  மேலும்

 • பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்த டிச., 15ம் தேதி வரை கெடு

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: 'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள், அமல்படுத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடக போக்குவரத்துத் துறை, பள்ளி நிர்வாகங்களை எச்சரித்து உள்ளது.கர்நாடக போக்குவரத்து கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பு ...

  மேலும்

 • மைசூரு - சென்னை அதிவேக ரயில்: ஆய்வுக்காக சீன குழு இன்று வருகை

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: மைசூரு - பெங்களூரு - சென்னை மார்க்கமாக, 'அதிவேக ரயில்' இயக்குவது தொடர்பாக, சீன ரயில்வே குழு, இன்று பெங்களூரு வருகிறது.தென்மேற்கு ரயில்வே தகவல்படி, மைசூரு - பெங்களூரு - சென்னை மார்க்கமாக, 'அதிவேக ரயில்' இயக்குவது தொடர்பாக, 'சீன ரயில்வே எர்யான் இன்ஜினியரிங் குரூப்' (சி.ஆர்.இ.இ.சி.,) ...

  மேலும்

 • ராஜ்யசபாவில் கேள்வி நேரம் மாற்றம்

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை, 11:00 மணியில் இருந்து, 12:00 மணிக்கு மாற்றும் தீர்மானம், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. காலையில் கேள்வி நேரத்துடன் துவங்கும் ராஜ்யசபாவில், உறுப்பினர்கள் ஏற்கனவே சபாநாயகரிடம் அளித்துள்ள கேள்விகள் ...

  மேலும்

 • எபோலா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் ஒருவர் உயிரிழப்பு

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: எபோலா வைரஸ் பாதிப்பின் காரணமாக, நடப்பாண்டில், ஒரே ஒரு இந்தியர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு, தெரிவித்துள்ளது. லைபீரிய நாட்டின் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த முகமது அமிர் என்ற இந்தியர், எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக, கடந்த செப்டம்பர் 7ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து ...

  மேலும்

 • புனித சவேரியார் பேராலய ஆண்டு விழா

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலய ஆண்டு விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெங்களூரு, கிளைவ் லாண்ட் டவுன் புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தில், இன்று காலை, கன்னடம், ஆங்கிலம், தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை, ஜெபமாலை பவனிக்கு பின், அருட் தந்தை அம்ருதராஜ், கொடியேற்றி, ...

  மேலும்

 • டுவிட்டரால் 11 பெண்கள் மீட்பு

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு, 'டுவிட்டர்' மூலம் வந்த தகவலால், விபசாரத்தில் தள்ளப்பட்ட, 11 இளம் பெண்களை, போலீசார் மீட்டனர். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டிக்கு, 'டுவிட்டர்' மூலம், ஈஜிபுராவில் விபசாரம் நடப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், ...

  மேலும்

 • மழையால் காற்று மாசு குறைந்தது

  நவம்பர் 26,2014

  பெங்களூரு: மழையால், பெங்களூரில் காற்று மாசு குறைந்துள்ளதாக, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.பெங்களூரு நகரில், ஜூலை முதல் செப்., வரை, வேதிப்பொருள் கலப்பு, நான்கு முதல், 65 சதவீதம் வரையில் குறைந்து இருந்ததாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. சுவாசிக்கும் காற்றில், ஒரு ...

  மேலும்

 • பெங்களூரு - மைசூரு போக்குவரத்து மாற்றம்

  நவம்பர் 26,2014

  மைசூரு: மைசூரின் புறநகர்ப்பகுதியான, சித்தலிங்கபுராவில், 'சுப்ரமணேஸ்வரா ஸ்வாமி ஸ்ரஸ்தி' நடப்பதால், பெங்களூரு - மைசூரு இடையே, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மைசூரு நகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: சித்தலிங்கபுராவில், 'சுப்ரமணேஸ்வரா ஸ்வாமி ஸ்ரஸ்தி' நடப்பதால், பெங்களூரு - ...

  மேலும்

 • தாஜ்மஹால் யாருக்கும் சொந்தமில்லை

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: ''தாஜ்மஹாலை, முஸ்லிம்களின் சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, சமாஜ்வாதி தலைவர்களில் ஒருவரான, அசம் கான் வலியுறுத்தி வருகிறார். அவரின் கோரிக்கைக்கு, முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கக் கூடாது. தாஜ்மஹால், முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அது, தேசிய ...

  மேலும்

 • ஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்

  நவம்பர் 26,2014

  மும்பை: மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.மதிப்பெண் பட்டியல்: இது குறித்து இப்பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் லீலாதர் பன்சோடு கூறியதாவது: ...

  மேலும்

 • மருந்து விலை 'கிடுகிடு' உயர்வு: எம்.பி.,க்கள் கடும் கண்டனம்

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை, தாறுமாறாக உயர்ந்து விட்டதாக தெரிவித்து, ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் நேற்று கண்டனம் தெரிவித்தனர்.உயர்ந்துள்ள இந்த மருந்துகளின் விலையை, உடனடியாக குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். ...

  மேலும்

 • தீ தடுப்பு நடவடிக்கை ஏன் இல்லை?

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட்டிலும், பார்லிமென்டிலும் போதிய தீ விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாட்டின் மிக முக்கியமான அமைப்புகளாகக் கருதப்படும், சுப்ரீம் கோர்ட்டிலும், பார்லிமென்டிலும், போதிய தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் ...

  மேலும்

 • மீண்டும் டிசம்பரில் மின் உற்பத்தி

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், வரும் டிசம்பர் மாதம் முதல், மீண்டும் மின் உற்பத்தி துவங்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், டர்பைன் செயல்பாட்டில் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணமாக, 1வது அலகிலிருந்து மின் உற்பத்தி செய்வது, முற்றிலும் ...

  மேலும்

 • சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்! மனம் திருந்திய இளைஞர்கள்

  நவம்பர் 26,2014

  மும்பை: மேற்காசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் பல இடங்களை கைப்பற்றி, இஸ்லாமிய பிரதேசமாக அறிவித்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சேர்ந்த, மும்பை முஸ்லிம் இளைஞர்கள் நான்கு பேர், நாடு திரும்ப விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், மும்பையில் உள்ள தங்கள் பெற்றோரை, ...

  மேலும்

 • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் 75 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: இ.பி.எப்.ஓ., என்று சுருக்கமாக அழைக்கப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், நடப்பு நிதியாண்டில், 75 லட்சத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இதில், 97.56 சதவீத கோரிக்கை களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, இ.பி.எப்.ஓ.,வின் செயல் திறன் சிறப்பான ...

  மேலும்

 • சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது எப்.ஐ.ஆர்., போட பூஷன் வலியுறுத்தல்

  நவம்பர் 26,2014

  புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்காவிற்கு எதிராக, டில்லி அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு, முதல் தகவலறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவருமான, பிரஷாந்த் பூஷன் கேட்டு கொண்டுள்ளார்.இதுகுறித்து, அவர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ...

  மேலும்

 • அப்பம் தயாரிப்பில் குறையிருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: நிர்வாக அதிகாரி தகவல்

  நவம்பர் 26,2014

  சபரிமலை: 'அப்பம் தயாரிப்பில் தவறு நிகழ்ந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு வசதியாக 'ஹெல்ப்லைன் போர்டு'கள் அமைக்கப்படும்' என்றும் சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் அப்பம் தயாரிக்க மூன்று ...

  மேலும்

 • சபரிமலை வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம்

  நவம்பர் 26,2014

  சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது.சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான ...

  மேலும்

 • பிரஸ் கவுன்சில் தலைவராக பிரசாத் நியமனம்

  நவம்பர் 27,2014

  புதுடில்லி: இந்தியபிரஸ் கவுன்சில் தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சி.கே. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு இவரை தேர்வு செய்துள்ளது. முன்னதாக பிரஸ் கவுன்சிலின் தலைவராக பதவி வகித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ...

  மேலும்

 • ஜிசாட்-16 செயற்கைகோள் டிச., 5-ல் ஏவ முடிவு

  1

  நவம்பர் 27,2014

  சென்னை: தொலை தொடர்பு செயற்கை கோளான ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டு்ள்ள செய்திகுறி்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் கயானாவிலிருந்து டிசம்பர் 4-ம் தேதி (இந்திய நேரப்படி 5-ம் தேதி) ஏரியன் ராக்கெட் ...

  மேலும்

 • மேகாலயாவில் முதல் ரயில் சேவை : மோடி துவக்கம்

  நவம்பர் 27,2014

  ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தின் முதல் ரயில்சேவையை பிரதமர் மோடி வரும் 29-ம்தேதி துவக்கி வைக்கிறார். இதன்மூலம் மேகலாயா மாநிலம் ரயில்போக்கு வரத்து சேவையில் இடம் பிடித்துள்ளது. மேகாலயா மாநிலத்தின் மென்டிப்பதார் இடத்திலிருந்து அசாம் மாநிலம் துத்னோய் வரையில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு்ள்ளது. ...

  மேலும்

 • இந்திய பங்குசந்தைகளில் சரிவு நிலை

  நவம்பர் 27,2014

  மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கமாக, மந்தமான சூழலில் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.75 புள்ளிகள் உயர்ந்து 28,423.94-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.80 புள்ளிகள் உயர்ந்து 8,488.55-ஆகவும் இருந்தன. ஆனால் சற்றுநேரத்திலேயே ...

  மேலும்

 • ரூபாயின் மதிப்பும் ஏற்ற-இறக்கம்!

  நவம்பர் 27,2014

  மும்பை : இந்திய பங்குசந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.61.80-ஆக இருந்த நிலையில், காலை 10.15 மணியளவில் 2 காசுகள் சரிந்து ரூ.61.86-ஆக இருந்தது. ...

  மேலும்

 • பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பேற்பு

  நவம்பர் 27,2014

  புதுடில்லி: பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த மார்க்கண்டேய கட்ஜுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சி.கே.பிரசாத் நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ...

  மேலும்

டிச., 1 முதல் சகாயம் விசாரணை?
டிச., 1 முதல் சகாயம் விசாரணை?
நவம்பர் 26,2014

9

மதுரை: மதுரை மாவட்ட கனிமவள கொள்ளை குறித்து டிச., முதல் தேதியிலிருந்து சகாயம் விசாரணை மேற்கொள்கிறார். அவருக்கு உதவ மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.மதுரை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் ...

 • தமிழக அரசின் கடன் எவ்வளவு?

  19

  நவம்பர் 26,2014

  மதுரை: தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற கடன் தொகை விபரம் தெரியவந்துள்ளது. தமிழகஅரசு 2013 ஏப்ரல் ...

  மேலும்

 • கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை!

  நவம்பர் 26,2014

  சென்னை: ''தென் கடலோர மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், 28, 29ம் தேதிகளில், மழையை எதிர்பார்க்கலாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ரமணன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: நில நடுக்கோட்டை ஒட்டிய, இந்திய பெருங்கடல் மற்றும், தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகிய, ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • காகித அட்டை பயன்படுத்துங்கள்: கோழி பண்ணையாளர்கள் வேண்டுகோள்

  நவம்பர் 26,2014

  நாமக்கல்: "கேரள மாநிலத்தில், பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் இருந்து கறிக்கோழி மற்றும் முட்டை அனுப்புவதில், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை,'' என, தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர் சம்மேளன துணைத் தலைவர், சுப்ரமணியன் தெரிவித்தார்.கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், ...

  மேலும்

 • கேரளாவில் இருந்து கோழி கொண்டு வர தடை: தமிழக அரசு உத்தரவு

  நவம்பர் 26,2014

  சென்னை: கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட ...

  மேலும்

 • சட்டசபையில் விவாதங்கள் கசப்பின்றி இருந்தால் நல்லது

  நவம்பர் 26,2014

  தமிழக சட்டசபை, டிச., 4ம் தேதி முறையாக கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அதில் பங்கேற்க முடியாது என்பதும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபை நடவடிக்கைகளை இனி முன்னின்று நடத்துவார் என்பதும், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி உள்ள விதி. இதில் எந்தக் கட்சியும், ...

  மேலும்

 • பக்கிங்ஹாம் கால்வாயில் விரைவில் படகு போக்குவரத்து? தூர் வார செயற்கைக்கோள் ஆய்வு

  1

  நவம்பர் 26,2014

  மாமல்லபுரம்: நீர் வழித்தடத்தை மேம்படுத்தும் வகையில், பக்கிங்ஹாம் கால்வாயை, தூர்வாரி ...

  மேலும்

 • பல்நோக்கு மருத்துவமனையில் சிக்கலான சிகிச்சை: 'மாஜி' ராணுவ வீரரை காப்பாற்றிய டாக்டர்கள்

  நவம்பர் 26,2014

  சென்னை: நுண்துளை வழியாக, செயற்கை ரத்த குழாய் பொருத்தி, முன்னாள் ராணுவ வீரரை, அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தி உள்ளனர்.தஞ்சாவூர், மன்னார்குடியைச் சேர்ந்தவர் வீரப்பன், 75; முன்னாள் ராணுவ வீரர். வயிற்று வலி, முதுகு வலியுடன், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்ந்தார். ரத்த ...

  மேலும்

 • ஒரு கை, காலுக்கு சொந்தம் கொண்டாட ஆளில்லை

  நவம்பர் 26,2014

  மவுலிவாக்கம் கட்டட விபத்தில் மீட்கப்பட்ட, ஒரு கை, காலுக்கு சொந்தம் கொண்டாட யாரும் வராததால், ஐந்து மாதங்களுக்கும் மேலாக, பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.சென்னை, மவுலிவாக்கத்தில், தனியார் நிறுவனம் கட்டிய, 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம், ஜூன் மாதத்தில் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் ...

  மேலும்

 • கோவை, ஈரோடு கல்லூரி மாணவர்களால் கல்லூரி கல்வி இயக்ககம் முற்றுகை

  நவம்பர் 26,2014

  சென்னை: கோவை மற்றும் ஈரோட்டில் இயங்கி வரும், அரசு உதவி பெறும் கல்லூரிகளை, அரசே ஏற்று நடத்தக் கோரி, மாணவர்கள், சென்னையில், கல்லூரிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டனர்.கோவை, சி.பி.முத்துச்சாமி செட்டியார் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கராய நாயக்கர் கல்லூரி என, இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் ...

  மேலும்

 • சிறைகளில் கண்காணிப்பு கேமரா: சிறை துறை நடவடிக்கை

  நவம்பர் 26,2014

  சென்னை: மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில், கண்காணிப்பு கேமரா பொருத்த, சிறைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோரின் நடவடிக்கைகளை கண்காணிக்க, சிறை முழுவதும், கண்காணிப்பு கேமரா பொருத்த, அரசு உத்தரவிட்டது. அதன்படி, புழல், வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, ...

  மேலும்

 • நாளை ரயில்கள் சேவையில் மாற்றம்

  நவம்பர் 26,2014

  சென்னை: விழுப்புரம் பணிமனையில் மேற்கொள்ள உள்ள பொறியியல் பணிக்காக, நாளை, ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:* மதுரை - விழுப்புரம் பயணிகள் ரயில்; விருத்தாசலம் - விழுப்புரம் இடையே, திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயில்; செங்கல்பட்டு - ...

  மேலும்

 • மரங்களை வெட்டியவருக்கு அபராதம்

  நவம்பர் 26,2014

  மதுரை: மதுரை பரவை பகுதியில், 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாலையோர மரங்களை வெட்டிய இருவரிடம், ஒன்றரை லட்சம் ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டது. பரவை பகுதியில், மின் வாரிய பணியை, மாத்தூரைச் சேர்ந்த, கான்ட்ராக்டர் திருக்குமரனும். ஊழியர் பாஸ்கரனும் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரத்தில், ...

  மேலும்

 • அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா துவக்கம்

  நவம்பர் 26,2014

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் ...

  மேலும்

 • தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை

  நவம்பர் 26,2014

  மதுரை: ''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர், ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.ரூ.18 கோடி: மதுரையில், அவர் கூறியதாவது: தீயணைப்புத் துறைக்கு, அரசு, 18 கோடி ரூபாய் வழங்கியது. இதைக்கொண்டு நுரை தள்ளும் ...

  மேலும்

 • சிறுமியர் திருமணம்: தடுக்க குழு அமைப்பு

  நவம்பர் 26,2014

  விருதுநகர்: குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த, கிராமங்கள் தோறும், எட்டு பேர் கொண்ட குழு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில், கிராமங்களில், இதுபோன்ற திருமணங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால், இதை தடுக்க, கிராமங்கள் தோறும், எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட ...

  மேலும்

 • மாணவியருக்கான பிரத்யேக 'ஜெயித்துக் காட்டுவோம்'

  நவம்பர் 26,2014

  சென்னை: ''மாணவியருக்கான பிரத்யேக, 'ஜெயித்துக் காட்டுவோம்' உருவாக்க வேண்டிய நிலை ...

  மேலும்

 • 7 மணிக்கு எழுபவன் எருமை; 8 மணிக்கு எழுபவன் காட்டெருமை!

  நவம்பர் 26,2014

  சென்னை: ''ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள்,'' என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.'தினமலர்' நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர் கள் என்ற கருத்தை ...

  மேலும்

 • 'நம்மால் முடியும்; ஜெயித்துக் காட்டுவோம்:' ரமேஷ் பிரபா பேச்சு

  நவம்பர் 26,2014

  சென்னை: 'தினமலர்' டி.வி.ஆர்., அகாடமி வழங்கிய, 'ஜெயித்துக் காட்டுவோம்' காலை நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர், ரமேஷ் பிரபா பேசியதாவது:மாணவர்களே, நீங்கள் (மாநகராட்சி பள்ளி மாணவர்கள்) யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. உங்களால் எல்லாம் முடியும். இந்த நிகழ்ச்சி, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஆனால், இங்கு ...

  மேலும்

 • ஆஸ்திரேலிய தூதர் பாட்ரிக்சக்லிங் முதல்வர் பன்னீருடன் சந்திப்பு

  நவம்பர் 26,2014

  சென்னை: ''சென்னையில், மே மாதம் நடைபெறும், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆஸ்திரேலியா பங்கேற்கும்,'' என, ஆஸ்திரேலிய தூதர் பாட்ரிக்சக்லிங் தெரிவித்தார்.நேற்று, அவர் தலைமைச் செயலகத்தில், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர், தமிழகத்திற்கும், ...

  மேலும்

 • 'அலுவலகத்திற்கு நேரில் வாங்க': அமைச்சருக்கு ஊழியர்கள் அழைப்பு

  நவம்பர் 26,2014

  மின் துறை அமைச்சர் தலைமையில், நாளை நடக்கும், ஆய்வு கூட்டத்தை, மின் வாரிய அலுவலகத்தில், நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில், மின் பிரச்னைக்கு தீர்வு காண, முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, மின் துறை, உள்ளாட்சி துறை அமைச்சர்கள், தலைமை செயலர், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர் ...

  மேலும்

 • ரூ.2,000 கோடியில் கடலில் நிலக்கரி முனையம்: விரைவில் பணிகள் துவக்க மின் வாரியம் முடிவு

  2

  நவம்பர் 26,2014

  தூத்துக்குடி மாவட் டம், உடன்குடியில் அமைய உள்ள, அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய, கடலில், 2,000 கோடி ரூபாய் செலவில், நிலக்கரி முனையம் அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.660 மெகாவாட் திறன்: தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தலா, ...

  மேலும்

 • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷனர் திடீர் அறிவிப்பு

  நவம்பர் 26,2014

  சென்னை: ''புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு, சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, ...

  மேலும்

 • விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்? தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தில் குழப்பம்

  நவம்பர் 26,2014

  புதிய நீர்த்தேக்க திட்டத்திற்காக, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள தகவலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தெலுங்கு கங்கை திட்டம்: தெலுங்கு கங்கை திட்டப்படி, சென்னையின் குடிநீருக்காக, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திரா ...

  மேலும்

 • ஸ்ரீவைகுண்டத்தில் அதிருத்ர யாகம்

  நவம்பர் 26,2014

  தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் உலகநலனுக்காக அதிருத்ர யாகம் டிச., 6 முதல் 12 வரை நடக்கிறது. சிவனடியார் பாலகணேசன் கூறியதாவது: சனிப்பெயர்ச்சியில் தனுசு, விருச்சிகம், துலாம், மேஷம், ரிஷபம், சிம்மராசியினருக்கு பாதிப்புகள் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அதிருத்ர ...

  மேலும்

 • பாம்பன் பாலம் 'டோல்கேட்'டில் வாகனங்களுக்கு பல மடங்கு கட்டணம்: பக்தர்கள் வேதனை

  நவம்பர் 26,2014

  ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வரும் வாகனங்களுக்கு, பாம்பன் பாலம் நுழைவு 'டோல் கேட்'டில் ஏலதாரர்கள் பலமடங்கு கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் சார்பில், 1988ல் ரூ.20 கோடியில் பாம்பன் கடல் மீது 2.5 கி.மீ., தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. பாலத்தில் மின் விளக்கு, ...

  மேலும்

 • நெல்லை மேயருடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'லடாய்': முதல்வரிடம் புகார்

  நவம்பர் 26,2014

  திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் தீர்மானங்களை நிறைவேற்றச்சொல்லி கட்டாயப்படுத்துவது குறித்து மேயர் புவனேஸ்வரி, சென்னையில் முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாநகராட்சி மேயராக அ.தி.மு.க., மகளிர் அணி நிர்வாகியான புவனேஸ்வரி உள்ளார். ஜாதி, பணபலம் ...

  மேலும்

 • சிறுமி திருமணங்களை தடுக்க கிராமங்களில் எட்டு பேர் குழு

  நவம்பர் 26,2014

  விருதுநகர்: குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த கிராமங்கள் தோறும் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் இதுபோன்ற திருமணங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால் அதை தடுப்பதற்கு கிராமங்கள் தோறும் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இதில் பள்ளி ...

  மேலும்

 • 'ரிங் ரோடு' திட்டம் என்ன ஆச்சு? தூசு தட்டுகிறார் நிதின்கட்காரி

  நவம்பர் 26,2014

  மதுரை: மதுரையில் அமைக்க திட்டமிடப்பட்ட புதிய சுற்றுச்சாலை திட்டத்தின் (ரிங் ரோடு) நிலை குறித்து, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி விளக்கம் கேட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக கோப்புகளில் உறங்கிக் கிடந்த திட்டம், 'துளிர் விடும்' என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.மதுரையின் போக்குவரத்து நெரிசலை ...

  மேலும்

 • அந்தரத்தில் தொங்குது மணல் மூடை: 'டம்டம்' பாறை ரோட்டில் அபாயம்

  நவம்பர் 26,2014

  கொடைக்கானல்: கொடைக்கானல் 'டம்டம்' பாறை ரோட்டில் அந்தரத்தில் தொங்கும் மணல் மூடைகள் சரிந்து ...

  மேலும்

 • சென்னை-நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்

  நவம்பர் 26,2014

  மதுரை: பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் நவ., 30 மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில்(06718) மறுநாள் காலை 7.15க்கு சென்னை செல்லும். அங்கிருந்து டிச., 1 இரவு 10.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06717) மறுநாள் மதியம் 12.30மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரயில் ...

  மேலும்

 • அழகப்பா பல்கலை துணைவேந்தர் நியமனம் எப்போது

  நவம்பர் 26,2014

  காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் பணியிடம், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் நியமன தீர்ப்புக்கு பிறகே நிரப்பப்பட வாய்ப்புள்ளது.அழகப்பா பல்கலைக்கு புதிய துணைவேந்தரை பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிந்துரைப்பதற்காக 'தேடல் குழு' பல முறை சென்னையில் கூடி ...

  மேலும்

 • பந்தய குதிரைகளா மாணவர்கள்?

  நவம்பர் 26,2014

  சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும் அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான் ...

  மேலும்

 • 4 வழிச்சாலையில் இனி காத்திருக்க வேண்டாம்! 'டோல் கேட்'களில் 'இ.டி.சி.,' முறை

  நவம்பர் 26,2014

  மதுரை: நான்கு வழிச்சாலை 'டோல் கேட்'களில் எலக்ட்ரானிக் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறையை டிசம்பர் இறுதிக்குள் அமல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நான்கு வழிச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு 'டோல் கேட்'களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி அதற்கு ...

  மேலும்

 • நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் அறிவிப்பு

  நவம்பர் 26,2014

  சென்னை: சென்னை எழும்பூர் - நெல்லை இடையே, அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ...

  மேலும்

 • பிரபஞ்சன் உடல்நலம் பாதிப்பு

  நவம்பர் 26,2014

  சென்னை: 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்தவர், எழுத்தாளர் பிரபஞ்சன், 69. இவர், தஞ்சையில் ஆசிரியராக வாழ்க்கையை துவங்கி, 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 'சாகித்ய அகாடமி' விருது பெற்றவர். இவருக்கு ...

  மேலும்

 • தொலைபேசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

  6

  நவம்பர் 27,2014

  சென்னை: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து தொலை பேசி நிர்வாகத்தினர் கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றிருந்த ...

  மேலும்

 • நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு; பறவை காய்ச்சல் எதிரொலி

  நவம்பர் 27,2014

  உதகமண்டலம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்திலிருந்து நீலகிரி மாவடட்த்திற்கு வரும் பதையில் 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து,அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி அடிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கால்நடை துறையினர் இந்த பணியில் ...

  மேலும்

 • நீலகிரியில் நக்சல் வேட்டை

  நவம்பர் 27,2014

  உதகமண்டலம்: கேரளத்தில் சமீபத்தில் நக்சல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நக்சல்களைத் தேடும் பணி முடுக்கி ...

  மேலும்

 • தங்கம் விலை ரூ.112 குறைந்தது

  நவம்பர் 27,2014

  சென்னை : தங்கம் விலை இன்று(நவ.27ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,484-க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19,872-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து ரூ.26,570-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் ...

  மேலும்

 • காஷ்மீரை வாட்டும் கடும் குளிர்

  நவம்பர் 27,2014

  ஸ்ரீநகர்: காஷ்மீரில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இரவு நேரத்தில் கடும் குளிர் வாட்டுகிறது. சில நேரங்களில் மழை பொழிவும் உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக கடுமையான குளிர்நிலை நேற்று முன்தினம் இரவு நிலவியதாக தகவல்கள் ...

  மேலும்

 • ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்

  நவம்பர் 27,2014

  ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, கடல் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று படகுகள் சேதமாகி உள்ளன. ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement