Advertisement
லாலு கட்சி வேட்பாளர் தலைமறைவு
ஏப்ரல் 24,2014

பாட்னா: பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மகாராஜ்கஞ்ச் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக லாலுவின், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த பிரபுநாத் சிங் உள்ளார். இந்த தொகுதிக்கு, மே 7ல், ...

 • நக்சல் தாக்குதல்: ஆசிரியர் கொலை

  ஏப்ரல் 24,2014

  ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரமண் சிங் தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி ஒன்றில், ரண்வீர் சலாம், 30, என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சந்தைக்கு, தன் மனைவியுடன் ஆசிரியர் சென்று கொண்டிருந்தபோது, நக்சல் தீவிரவாதிகள் பத்து பேர், ஆசிரியரை துப்பாக்கியால் ...

  மேலும்

 • பெண் போலீசார் மூன்று பேர் விபத்தில் பலி

  ஏப்ரல் 24,2014

  புதுடில்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த பெண் போலீசார் சிலர், நேற்று அதிகாலை, டில்லியில் உள்ள தங்கள் முகாமுக்கு, பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது பஸ் மோதியது. இதில், மூன்று பெண் போலீசாரும் இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • சோம்நாத் பாரதி மீது பா.ஜ.,வினர் கல் வீசி தாக்குதல்

  ஏப்ரல் 24,2014

  வாரணாசி: வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, சோம்நாத் பாரதி மீது பா.ஜ., வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில், மாநில சட்ட அமைச்சராக இருந்தவர், சோம்நாத் ...

  மேலும்

 • பெண் எரித்துக் கொலை?

  ஏப்ரல் 24,2014

  மதுரை: திருமங்கலத்தில், மகேஸ்வரி 45 என்ற பெண்ணும், கணேசன் என்பவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் இருந்து புகை வரவே, பொதுமக்கள் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீ அணைப்பு வீரர்கள் வந்து கேஸ்வரி உடல் முழுதும் எரிந்த நிலையில் காணப்பட்டார். இது ...

  மேலும்

 • Advertisement
'ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்
'ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்
ஏப்ரல் 24,2014

ஈரோடு: ஈரோடு, ஆவின் இயக்குனர் வீட்டில், 51 லட்சம் ரூபாய் மற்றும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்ததாக பிடிபட்டபோது, பணம் வைத்திருந்த பெட்டிகளில், 'ஆம்வே' நிறுவனத்தின், பச்சை நிற ஸ்டிக்கர் ...

 • தேர்தல் அதிகாரி வாகனம் கவிழ்ந்தது: அதிகாரி உட்பட நால்வர் படுகாயம்

  ஏப்ரல் 24,2014

  நாகப்பட்டினம்: நாகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வாகனம் கவிழ்ந்ததில், துணை தாசில்தார் ...

  மேலும்

 • கோர்ட் வளாகத்தில் சுயேச்சை வேட்பாளர் போராட்டம்

  ஏப்ரல் 24,2014

  சேலம்: சுயேச்சை வேட்பாளர், கோர்ட் வளாகத்தில், திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் லோக்சபா தொகுதி, சுயேச்சை வேட்பாளர் ஷாஜஹான். இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் நீதிமன்ற வளாக, நீதி தேவதை சிலை முன், திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடன், மேலும் இருவர் உண்ணாவிரதம் ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • குட்டை நீரை குடித்த 45 ஆடு, மாடுகள் பலி

  ஏப்ரல் 24,2014

  வேலூர்: குட்டையில் தண்ணீர் குடித்த, 15 மாடுகளும், 30 ஆடுகளும் இறந்ததால், வேலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், மேல்பாக்கம் ஊராட்சியில் வசிப்போர், கால்நடைகளை, அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய்ப்பர். அந்த பகுதியில் ஒரு குட்டையில், அவை தண்ணீர் குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, ...

  மேலும்

 • உசிலம்பட்டி பெண் கொடைக்கானலில் கொலை

  ஏப்ரல் 24,2014

  கொடைக்கானல்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்தவர் ஜமுனா, 32. இவரது கணவர் தவமணி இறந்துவிட்டார். ஜமுனாவிற்கு மோகனா 5, ஆனந்த் 3, என்ற குழந்தைகள் உள்ளனர். ஜமுனாவின் அக்காள் மகள் மகாலெட்சுமி, 15. இவர், பள்ளி விடுமுறையில் தனது சித்தி ஜமுனா வீட்டிற்கு வந்துள்ளார்.மகாலெட்சுமியையும், ...

  மேலும்

 • அ.தி.மு.க.,கவுன்சிலர் காரில் இருந்த வாக்காளர் அட்டைகள் பறிமுதல்

  ஏப்ரல் 24,2014

  திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் குறிச்சி பகுதி கவுன்சிலர் குறிச்சி சேகர், இவரது காரை (டிஎன் 67-கியூ 1221) கொக்கிரகுளத்தில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்தவர்கள் இறங்கி ஓடினர். டிரைவர் சங்கரலிங்கம், மற்றொரு நபர் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களது ...

  மேலும்

 • நெல்லை மீனவர்களை தாக்கிய கடற்படையினர் மீது புகார்

  ஏப்ரல் 24,2014

  திருநெல்வேலி: நெல்லை அருகே மீனவர்களை தாக்கி அவமானப்படுத்திய கடலோர பாதுகாப்பு படையினர் மீது நடவடிக்கை கோரி புகார் கொடுத்தனர்.நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 14 பேர், இரண்டு நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். நேற்று பகலில் அவர்கள் திரும்பியபோது, இடிந்தகரையில் ...

  மேலும்

 • ரூ.25 லட்சம் கேட்டு மாணவர் கடத்திக் கொலை: கணவன், மனைவி சிக்கினர்

  ஏப்ரல் 24,2014

  சிதம்பரம்: சிதம்பரத்தில், 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, பள்ளி மாணவரை கொலை செய்து சாக்குபையில் கட்டி வைத்திருந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரின், 16 ...

  மேலும்

 • விமான நிலையத்தில் 18வது முறை 'டமார்'

  ஏப்ரல் 24,2014

  சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று, 18வது முறையாக மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் உள்ள, பழைய உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில், 'பே - 28' பகுதி அருகில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 10 அடி நீளம், நான்கு அடி அகலம் கொண்ட மேற்கூரை, பயங்கர சத்தத்துடன் நொறுங்கி விழுந்தது. ...

  மேலும்

 • வாக்காளர்களுக்கு பணம்: இரு அ.தி.மு.க., வினர் கைது

  ஏப்ரல் 24,2014

  தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த இரு அ.தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்செந்தூர் பறக்கும் படை தாசில்தார் ஆழ்வாருக்கு உடன்குடி பகுதியில் அ.தி.மு.க., வினர் வாக்காளர்களுக்கு ...

  மேலும்

 • போதையில் பணத்தை எடுத்த கணவரை அடித்து கொன்ற மனைவி, மகன் கைது

  ஏப்ரல் 24,2014

  தூத்துக்குடி: போதை கணவரை, மகனுடன் சேர்ந்து கொலை செய்தார் மனைவி. கொலையை மறைத்து இறுதி சடங்குகள் செய்த போது உண்மை வெளிப்பட்டது. தூத்துக்குடி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சேகர், 46. கட்டடத் தொழிலாளி. குடிப்பழக்கத்தால் வேலைக்குச் செல்லாமல், மனைவி லதாவுடன் தகராறு செய்து வந்தார். வீட்டில் வைத்திருந்த, 40,000 ...

  மேலும்

 • வாக்கு இயந்திரம் பழுது

  ஏப்ரல் 24,2014

  காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.கோவில்பட்டி அருகே உள்ள வேம்பூர், குமாரம் ஆகிய பகுதிகளிலும் பழுது ஏற்பட்டது. ...

  மேலும்

 • ஓட்டுப் போட விடாமல் மிரட்டல்

  ஏப்ரல் 24,2014

  காரைக்கால்: காரைக்காலை அருகே உள்ள வீராம்பட்டினத்தில் சுனாமி குடியிருப்பில் உள்ள மக்களை ஒரு கும்பல் ஓட்டுப் போட விடாமல் மிட்டியதால், காலை 9 மணி வரை 5 ஓட்டுச் சாவடிகளில் 16 ஓட்டுகள் மட்டுமே ...

  மேலும்

 • காரைக்காலில் தி.மு.க.,-காங்.,மோதல்:20 பேர் காயம்

  ஏப்ரல் 24,2014

  காரைக்கால்:காரைக்கால் ஓட்டுச்சாவடி அருகே தி.மு.க.,காங் கட்சி தொண்டர்கள் திடீர் மோதல் ஏற்பட்டதில் 20 பேர் காயம். இதில் தி.மு.க.,பிரமுகர் முகாரிக்கும் காங்.,பிரமுகர் உமருக்கும் காயம் ...

  மேலும்

 • மேட்டூரில் இரு இடங்களில் மோதல்; பரபரப்பு

  ஏப்ரல் 24,2014

  மேட்டூர்: தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டசபை தொகுதியில் இரு இடங்களில் நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் சட்டசபை தொகுதி, புதுவேலமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ம.க., மற்றும் அ.தி.மு.க., தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, பஞ்சாயத்து தலைவர் ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement