Monthly Calendar - Dinamalar No.1 Tamil News Paper
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
மாதாந்திர நிகழ்வுகள்
<<    நவம்பர், 2009    >>

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
2
பெர்னாட்ஷா (1856-1950): :

கவித்துவமிக்க இலக்கிய எழுத்துக்காக நோபல் பரிசு பெற்ற இவர் 1856ல் அயர்லாந்தில் பிறந்தார். தந்தை ஒரு குடிகாரர். தாய் பாடகி. இதனால் ஆரம்பகாலத்தில் இவரது எழுத்துக்கள் பெற்றோர்-குழந்தை தொடர்பாக இருந்தன. சோஷலிசம் பேசிய இவரது இலக்கிய விமர்சனங்கள் தனிப்புகழ் பெற்றவை. டெவில் டிசிபிள், டாக்டர்ஸ் டைலமா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். சமூக சிக்கல்களை நகைச்சுவை கலந்து நாடகங்களாக வழங்குவதில் புகழ்பெற்றவர்.

பெர்னாட்ஷா (1856-1950):

3
4
5
சித்தரஞ்சன் தாஸ் (1870-1925): :

அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு ஆதரவாக வாதாடி புகழ் பெற்ற இவர், இளவரசரைப் போல் வாழ்ந்தார். பேரரசர் போல் செலவு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது செல்வச் செழிப்பும், விடுதலை வேட்கையும் ஒருங்கே கொண்ட வெகு சிலரில் சி.ஆர். தாசும் ஒருவர். தேசபந்து என்று அழைக்கப்படும் இவர் ஐ.சி.எஸ்., முடித்தவர். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து "லிபர்ட்டி' என்ற நாளிதழை நடத்தினார். சுயராஜ்ய கட்சியை நிறுவியவரும் கோல்கட்டாவின் முதல் மேயரும் இவரே.

சித்தரஞ்சன் தாஸ் (1870-1925):

6
7
சர்.சி.வி. ராமன் (1888-1970)::

 இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியாக சி.வி. ராமன் திகழ்ந்தார். இவர் தனது 42 வது வயதில் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இதற்காக நோபல் பரிசு பெற்றார். முழுமையாக இந்தியாவில் படித்து நோபல் பரிசு பெற்ற முதல் நபர் இவர். ராமன் விளைவு கண்டறிந்த நாளான பிப்ரவரி 28, இந்திய அறிவியல்தினமாக கொண்டாடப்படுகிறது. இவரது உறவினரான சுப்ரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கண்டுபிடிப்பான ராமன் விளைவு வேதி மூலக்கூறுகள் மற்றும் ஒளித்துகள்கள் சக்தி இழப்பு தொடர்பாக இருந்தது.

சர்.சி.வி. ராமன் (1888-1970):

8
9
10
11
அபுல்கலாம் ஆசாத் (1888-1958)::

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட இவர் இளம் வயதிலேயே "ஆலீம்' பட்டம் பெற்றவர். தனது 15வது வயதில் குர்ஆனை மனப்பாடம் செய்து ஒப்புவித்ததால் "ஹாபீஸ்' என்ற பட்டத்தையும் பெற்றார். வங்கப் பிரிவினை, பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை இவரிடம் தோற்றுவித்தது. சுதந்திரத்துக்குப் பின் கல்வி அமைச்சராகி பள்ளிகள், கல்லூரிகள், மட்டுமல்லாது சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி போன்றவற்றை நிறுவினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டார்.

அபுல்கலாம் ஆசாத் (1888-1958):

12
சன்யாட்சென் (1866-1925): :

நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், சீன புரட்சிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் 1907 ல் ஜப்பானின் டோக்கியோவில் 5 ஆயிரம் மாணவர்களின் கூட்டத்தை கூட்டினார். இதில் தேசியவாதம், ஜனநாயகம் குறித்து பேசினார். 1911ல் நடந்த சீன புரட்சிக்கும் தேசியவாத கட்சிக்கும் இவர் தலைமையேற்றார். இவர் முன்வைத்த "மக்களுக்கான மூன்று கொள்கைகள்' எனும் சித்தாந்தம் சீன அரசியல் தத்துவத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சன்யாட்சென் (1866-1925):

13
14
குழந்தைகள் தினம் : :

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, நல்ல குழந்தைகளாலே நாட்டின் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என நம்பினார். குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவர் மீது குழந்தைகளும் அன்பு வைத்திருந்தனர். அவரது பிறந்ததினம் நம்நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினம் :

15
வினோபா பாவே (1895-1982): :

பூமிதான இயக்கத்தை தொடங்கிய இவர், 1895 செப்.,11ல் மகாராஷ்டிராவில் கோக்லா கிராமத்தில் பிறந்தார். 19ம் வயதில் வாரணாசியில் சமஸ்கிருதம் பயின்றார். காந்தியைச் சந்தித்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். ஒத்துழையாமை, தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் தொடங்கிய பூமிதான இயக்கத்தால் பலரும் தங்களது சொத்துக்களை ஏழைகளின் முன்னேற்றத்துக்காக அளித்தனர். சமூக பணிகளுக்காக மகசேசே விருதுபெற்ற முதல் நபர் இவர்.

வினோபா பாவே (1895-1982):

16
17
லாலா லஜபதிராய் (1865-1928)::

 பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் இவர், பிரிட்டிஷாரை அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்துப் போரிட்டார். ஆரிய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். திலகரின் கொள்கைகளிலும் நாட்டம் கொண்டார். 1928ல் சைமன் கமிஷனை எதிர்த்துப் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். பிரிட்டிஷாரின் தடியடிக்கு உள்ளாகி மரணமடைந்தார். மக்கள் பணியாளர் கழகத்தை நிறுவியவர் இவரே. "பஞ்சாப் நேஷனல் வங்கி'யையும் இவர்தான் நிறுவினார்.

லாலா லஜபதிராய் (1865-1928):

18
வ.உ.சி.,(1872-1936): :

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சி., இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் எழுச்சிக்கு காரணமாக இருந்தார். வக்கீலான இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவராகத் திகழ்ந்தார். விடுதலைக்கு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பேச்சாளர்களாகச் சுப்ரமணிய சிவாவும், வ.உ.சி.,யும் திகழ்ந்தனர். செல்வந்தராக பிறந்த வ.உ.சி., தனது இறுதி நாட்களை வறுமையில் கழித்தார்.

வ.உ.சி.,(1872-1936):

19
20
21
22
23
சாய்பாபா (1926): :

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் இருந்து கருணை மழை பொழியும் சாய்பாபாவுக்கு 137 நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். கடவுளின் அவதாரமாகப் பக்தர்கள் அவரைக் கருதுகின்றனர். இவரும், இவருடைய பக்தர்களும் மக்களுக்கு அரிய தொண்டாற்றி வருகின்றனர். கடவுள் ஒருவர் தான். அவரைப் பல்வேறு பெயர்களில் நாம் தான் அழைக்கிறோம் என்பது இவரது போதனைகளுள் ஒன்று.

சாய்பாபா (1926):

24
25
26
27
28
29
30
ஜே.சி.போஸ் (1858-1937)::

 லண்டன் ராயல் அகாடமியில் உறுப்பினராகும் அரிய தகுதியைப் பெற்ற இவர் வங்கத்தில் பிறந்தார். கேம்பிரிட்ஜில் கல்வி கற்று இந்தியா திரும்பிய ஜே.சி.போஸ் தாவரங்களின் உணர்வுகள் மற்றும் அது தொடர்பான அரிய உண்மைகளைக் கண்டறிந்தார். தாவரவியலில் மட்டுமின்றி இயற்பியல், உயிரியல், தொல்பொருள் ஆய்வு என பல துறைகளில் ஆர்வம் காட்டினார்.

ஜே.சி.போஸ் (1858-1937):