E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
<<ஜனவரி, 2013>>

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
2
3
4
லூயி பிரெய்லி (1809-1852) ::

பிரான்சை சேர்ந்த லூயி பிரெய்லி சிறந்த கல்வியாளர். மூன்று வயதில் பார்வையை இழந்த லூயி, பின்னர் பார்வையற்றோர் படிப்பதற்கான முறையை கண்டுபிடித்தார். இது பிரெய்லி முறை என்று அழைக்கப்படுகிறது. பார்வையற்றவர் பிரச்னையை பார்வையற்றவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு இவர் சரியான எடுத்துக்காட்டு. தனது 43வது வயதில் காசநோயால் இறந்தார்.

லூயி பிரெய்லி (1809-1852) :

5
6
7
8
9
10
11
திருப்பூர் குமரன் (1904-1932) ::

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவர் 1904ல் சென்னிமலையில் பிறந்தார். வேலைநேரம் போக மற்ற நேரங்களில் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டமறுப்பு போராட்டத்தின் போது, திருப்பூரில் தேச பந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில், தொண்டர் படைக்கு தலைமை ஏற்று அணிவகுத்து சென்றார். அப்போது பிரிட்டிஷ் போலீசார் தடியால் அவரது தலையில் தாக்கினர். அடிபட்ட குமரன் மண்ணில் சாய்ந்த போதும் அவரது கையில் இருந்த தேசியக்கொடி விண்ணை நோக்கியே இருந்தது. இதனால் இவரை கொடி காத்த குமரன் என அன்புடன் அழைக்கின்றனர்.

திருப்பூர் குமரன் (1904-1932) :

12
விவேகானந்தர் (1863-1902) ::

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். காவி உடை அணிந்தார். மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். 1893, செப். 11ல் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என்று விளித்து அவர் பேசியது, இன்றும் உலக மக்களால் மறக்க முடியாதது. இந்தியர்களின் இறைஉணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் பற்றி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவர் பேச்சு அமைந்தது. இதனால் உலகம் போற்றும் உன்னத ஆன்மிக நெறியாளராகவும், இளைஞர்கள் போற்றுபவராகவும் விவேகானந்தர் கருதப்படுகிறார்.

விவேகானந்தர் (1863-1902) :

13
14
15
16
17
எம்.ஜி.ஆர்., (1917-1987) ::

ஏழைகளின் இதயதெய்வம் என எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டார். இவரது ஆட்சியில் பல நலத்திட்டங்கள் இடம்பெற்றதால் மக்கள் தலைவர் என்று கொண்டாடப்பட்டார். இலங்கையிலுள்ள கண்டியில் எம்.ஜி.ஆர்., பிறந்தார். வறுமை காரணமாக தொடக்கப்பள்ளிக்கு மேல் படிக்க முடியாத சூழலில், குடும்பத்தை காப்பாற்ற நாடகக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் திரைப்படத்துறையில் நுழைந்த இவருக்கு, "சதிலீலாவதி' முதல்படம். அபார செல்வாக்கு பெற்றவர். 1953ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்ட பின் இவர் தொடங்கிய அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றியே பெற்றது. 1977 முதல் 1987ல் அவர் மறையும் வரை தொடர்ந்து அவரே முதல்வராக பதவி வகித்தார். மறைவுக்கு பின் 1988ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்., (1917-1987) :

18
19
20
21
22
23
நேதாஜி ::

1897ல் ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த நேதாஜி, காந்தியடிகளுடன் சுதந்திரப்போராட்டத்தில் பங்குகொள்வதற்காக ஐ.சி.எஸ்., பணியை உதறினார். 1938ல் காங்கிரஸ் தலைவரானார். 1943ல் சிங்கப்பூர் சென்ற இவர் ராஷ்பிகாரி போசின் ஐ.என்.ஏ.,வுக்கு தலைமை ஏற்றார். "ஜெய்ஹிந்த்' என்ற இவரது வீரவாசகம், சுதந்திரப்போரில் எழுச்சி ஏற்படுத்தியது. என்றும் அனைவரது நினைப்பில் வாழ்கிறார்.

நேதாஜி :

24
25
26
குடியரசு தினம்::

இந்தியா 1950ம் ஆண்டு ஜன., 26ல் குடியரசு நாடானது. நாட்டின் சமூகநீதி, உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், தனிமனிதர் மற்றும் சமூகத்தின் மேன்மை, தேச ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப் படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகின்றது. இந்த ஆண்டு நாட்டின் 65வது குடியரசு தினம் கொண்டாடப்படுக்கிறது.

குடியரசு தினம்:

27
28
29
30
மகாத்மா காந்தியடிகள் (1869 - 1948) ::

குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்த காந்தியடிகள், பிரிட்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார். அதன்பின் தென்னாப்ரிக்கா சென்றார். அங்கு ஆங்கிலேயர்களின் இனவெறியை எதிர்த்துப் போராடினார். இந்தியா திரும்பி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக நடத்திய உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற இவரது போராட்டங்களின் முடிவில் 1947 ஆக., 15ல் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. சுதந்திரத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தியடிகள் இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படுகிறார்.

மகாத்மா காந்தியடிகள் (1869 - 1948) :

31
Share  
Bookmark and Share
Advertisement