Advertisement
<<பிப்ரவரி, 2013>>

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
2
3
4
5
6
7
ஞா.தேவநேயப்பாவாணர் (1902 - 1981)::

நெல்லை மாவட்டம் பெரும்புதூரில் பிறந்தார். தமிழ் ஆய்வில் மொழியியல், வரலாறு, இலக்கணம், பண்பாடு, சமயம், உரை போன்ற அனைத்து துறையிலும் முத்திரை பதித்துள்ளார். பாவாணருக்கு 2006ல், நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. 2007ல் மதுரை சாத்தமங்கலத்தில்,மணி மண்டபமும், சிலையும் திறக்கப்பட்டது.

ஞா.தேவநேயப்பாவாணர் (1902 - 1981):

நெல்லை மாவட்டம் பெரும்புதூரில் பிறந்தார். தமிழ் ஆய்வில் மொழியியல், வரலாறு, இலக்கணம், பண்பாடு, சமயம், உரை போன்ற அனைத்து துறையிலும் முத்திரை பதித்துள்ளார். பாவாணருக்கு 2006ல், நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. 2007ல் மதுரை சாத்தமங்கலத்தில்,மணி மண்டபமும், சிலையும் திறக்கப்பட்டது.

8
9
10
11
12
13
சரோஜினி நாயுடு (1879-1949)::

சென்னையிலும், லண்டனிலும் பயின்ற சரோஜினி 1898ல் ஐதராபாத் திரும்பி சீர்திருத்த திருமணம் செய்து கொண்டார். இவரது கவிதைகள் உலகத்தரத்துக்கு இணையாக இருந்தன. எனவே இவர் கவிக்குயில் என்ற பட்டத்தைப் பெற்றார். தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு சிறை சென்றார்.

சரோஜினி நாயுடு (1879-1949):

14
15
கலிலியோ (1564-1642)::

பழைய சமய நூல்களுக்கு மாறாக கருத்து சொன்னால் மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த காலத்தில் வானியல் கோட்பாடுகள் பல தந்தார். சூரியனை பூமி சுற்றுகின்றது என்றும், பிற கோள்களுக்கும் சந்திரன்கள் உண்டு என்றும் இவர் கண்டறிந்தார். "நவீன வானியலின் தந்தை' என இவர் குறிப்பிடப்படுகிறார்.

கலிலியோ (1564-1642):

16
17
18
19
கோகலே (1866-1915)::

மகாத்மாவின் வழிகாட்டியாக போற்றப்படும் கோபால கிருஷ்ண கோகலே மகாராஷ்டிராவில் பிறந்தவர். சமூக சீர்திருத்தவாதி. 1905ல் இந்திய ஊழியர் சங்கம் அமைத்தவர் இவரே. கோகலே பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அதே சமயம் இந்தியாவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டார். முதன் முறையாக சுதந்திரம் பற்றி குரல் கொடுத்தவர் இவரே. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார்.

கோகலே (1866-1915):

20
21
22
அபுல் கலாம் ஆசாத் (1888-1958)::

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் பிறந்தவர் ஆசாத். தனது 15ம் வயதிலேயே திருக்குர்ஆனை மனப்பாடம் செய்து ஒப்புவித்ததால் ஹாபீஸ் என்ற பட்டத்தை பெற்றார். வங்கப் பிரிவினை, பிரிட்டிஷாருக்கு எதிரான விதையை இவர் மனதில் ஊன்றியது. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சுதந்திரத்துக்குப் பின் கல்வி அமைச்சராகி பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவற்றையும் இவர் நிறுவினார்.

அபுல் கலாம் ஆசாத் (1888-1958):

23
24
25
26
சாவர்க்கர் (1883-1966)::

சுதேசி சிந்தனையின் அடையாளமாக சாவர்க்கர் மதிக்கப்படுகிறார். தேச விடுதலைக்கான போராடத்தில் களமிறங்கியதால் இவருக்கு பாரீஸ்டர் பட்டம் வழங்கப்படவில்லை. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இந்துத்துவம் என்ற நூலை எழுதினார். விடுதலை ஆனவுடன் இந்து மகாசபை மாநாட்டைக் கூட்டினார். தேச விடுதலைக்குப் பின் தவறான பிரசாரத்தால் காந்தி கொலை வழக்கில் இவர் சிறையிலடைக்கப் பட்டார். விசாரணைக்குப் பின் சுப்ரீம்கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். சாவர்க்கர் இறுதி வரை பண்பாளராக வாழ்ந்தார்.

சாவர்க்கர் (1883-1966):

27
சந்திரசேகர ஆசாத் (1906-1931)::

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளராக பங்காற்றியவர். பகத்சிங்கின் வழிகாட்டியாக இவர் கருதப்படுகிறார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பல்வேறு சதி வழக்குகள் இவர்மீது சுமத்தப்பட்டன. வெள்ளையர் ஆட்சியில் டில்லி வெடிகுண்டு வழக்கிலும் இவரை போலீசார் தேடினர். அலகாபாத்தில் இவரது கூட்டாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டதால் போலீசாருடன் நேருக்கு நேர் மோதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

சந்திரசேகர ஆசாத் (1906-1931):

28
ராஜேந்திர பிரசாத் (1884-1963)::

இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் பீகாரில் உள்ள ஜெரதாயில் பிறந்தவர். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். உப்பு சத்யாகிரகத்தில் பங்கு கொண்டார். அரசியல் நிர்ணய சபை தலைவராக பொறுப்பு வகித்தார். இரு முறை இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தவர் இவரே. ஜனநாயக உரிமைகளையும், தேச எல்லைகளையும் காப்பதில் அதிக அக்கறை கொண்டவர்.

தேசிய அறிவியல் தினம் : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அந்நதட்டின் அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும் அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் பிப்., 28ல் கொண்டாடப்படுகிறது. 1928ம் ஆண்டு இதே தேதியில் தான், சர் சி.வி. ராமன் தன்னுடைய புகழ்பெற்ற ராமன் விளைவை கண்டுபிடித்தார். அந்த நாளே தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ராஜேந்திர பிரசாத் (1884-1963):

Share  
Bookmark and Share
Advertisement