CWG Silver medalist Sreedharan felicitated | வெள்ளி வென்ற ஸ்ரீதருக்கு பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளி வென்ற ஸ்ரீதருக்கு பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் வாழ்த்து

Updated : அக் 09, 2010 | Added : அக் 08, 2010 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தர்மபுரி : காமன்வெல்த் போட்டியில், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர், வில் வித்தை "காம்பவுண்ட்' போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றார். டில்லியில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில், ஆண்களுக்கான வில்வித்தை "காம்பவுண்ட்' பிரிவில் இந்திய அணியின், ஜிக்னேஸ், ரிதுல், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெள்ளிப் பதக்கம் வென்றஇந்திய அணியில் இடம் பெற்ற வீரர் ஸ்ரீதர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி சின்னராஜ் என்பவரின் மூன்றாவது மகன். 27 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜரத்தினம் (35), பாஸ்கர் (30) என்ற அண்ணன்கள் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு, சிறு வயது முதலே, விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. குடும்ப சூழ்நிலை காரணமாக, பத்தாம் வகுப்பு வரை படித்த ஸ்ரீதர், நாசிக்கில் ராணுவத்தில் பணிபுரிகிறார்.சென்னையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் உசைனிடம், பயிற்சி பெற்றார் ஸ்ரீதர்.

விளையாட்டு ஆர்வம் காரணமாக, 2008ம் ஆண்டு சீனியர்நேஷனல் வேர்ல்டு கப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். 2009ம் ஆண்டு, 29வது சீனியர்நேஷனல் கப் போட்டியில், ஐந்து பதக்கங்களை வென்றார்.இதேபோல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியுடன் சேர்த்து, ஸ்ரீதர் பெற்ற 23 பதக்கங்களில், 12 தங்கப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம் ஆகியவை அடங்கும். இந்தோனேஷியா, சீனா, பர்க்கி, குரோஷியா போன்ற நாடுகளில் நடந்த வில்வித்தை போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார்.வில் வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றஸ்ரீதருக்கு, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே.ravi - Coimbatore,இந்தியா
09-அக்-201022:02:17 IST Report Abuse
கே.ravi வெல்டன் ஸ்ரீதர் நீவிர் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வெல்ல நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம் கண்டிப்பாக நீர் வெல்வீர்
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீனி - Tiruthuraipundi,சிங்கப்பூர்
09-அக்-201019:28:45 IST Report Abuse
ஸ்ரீனி வாழ்த்துக்கள் ஸ்ரீதர்..... பெஸ்ட் ஒப் லக்
Rate this:
Share this comment
Cancel
Ilavarasan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-அக்-201018:43:34 IST Report Abuse
Ilavarasan வாழ்த்துக்கள் ஸ்ரீதர்!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X