கல் குவாரிகளால் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் : புதுக்கோட்டையில் தொடரும் அவலம்| Dinamalar

கல் குவாரிகளால் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் : புதுக்கோட்டையில் தொடரும் அவலம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கல் குவாரிகளால் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் : புதுக்கோட்டையில் தொடரும் அவலம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் குவாரிகளில் வெடிக்கப்படும் வெடி அதிர்வுகளால், புராதன சின்னங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஓவியம் என்றாலே நினைவுக்கு வரும் சித்தன்னவாசல் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், ஏராளமான கற்கால குகைகள், புதைபொருள் தாழிகள், கல்வளைவுகள், நடுகற்கள் எனத் துவங்கி, சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துகளான பிராமி எழுத்துகள், சோழர்களின் கோவில் என, இதன் சிறப்பை உணர்த்தும் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை போன்ற புகழ் பெற்ற இடங்களும் மிகவும் பிரபலம். இத்தகைய புகழ் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், கல் குவாரிகளின் அத்துமீறல்களால், புராதன சின்னங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொல்லியல் சட்டங்கள், தடைகள் போன்றவை நடைமுறையில் இருந்தும், அவற்றை மதிக்காமல், கல் குவாரிகளில் எப்போதும் அதிர வைக்கப்படும் வெடிகளால், கற்கால குகைகள் மற்றும் புராதன சின்னங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டபோது, கல் குவாரி நபர்கள் அரசியல் பக்கபலத்துடன் செயல்படுவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என, கவலையுடன் கூறினர். புதுக்கோட்டை மாவட்டத்தில், கல் குவாரிகளின் அத்துமீறல்களை தடுக்காத பட்சத்தில், புராதன சின்னங்களை புகைப்படங்களில் மட்டுமே காண வேண்டிய பரிதாபமான சூழ்நிலை ஏற்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணன் - Chennai,இந்தியா
14-அக்-201021:25:13 IST Report Abuse
அருணன் இந்த கோவில்கள் மற்றும் குகைகள் தமிழகத்தின் பண்டைய வரலற்றை உலகுக்கு அறிவிக்கும் சின்னங்கள். விலைமதிக்க முடியாத பொக்கிசங்கள். இதை பாதுகாக்க தெரியாத இன்றைய அறிவற்ற தமிழர்கள் பண்டைய தமிழர்களின் பெருமைக்கு அருகதை அற்றவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
ராஜசேகர் - சென்னை,இந்தியா
14-அக்-201017:00:18 IST Report Abuse
ராஜசேகர் யோவ் .... கொஞ்சம் நிறுத்துங்கையா... நான் இன்னும் பாக்கவே இல்ல...
Rate this:
Share this comment
Cancel
Mohan - Chennai,இந்தியா
14-அக்-201016:51:13 IST Report Abuse
Mohan இன்னும் மக்களுக்கு சுற்றுபுறத்தை பற்றி அக்கறை இருக்கிறதா? இதே நிலைமை நீடித்தால் வரும் காலம் இருண்ட காலம் தான்.
Rate this:
Share this comment
Cancel
ரா.sambantham - madurai,இந்தியா
14-அக்-201013:30:44 IST Report Abuse
ரா.sambantham வரலாற்று புராதன சின்னங்களை மறுபடியும் நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் அவைகளை அழிக்க முடியும். பணத்தை மட்டுமே வைத்து வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகள் அதன் பெருமைகளை உணரமுடியாது. சட்டம் என் பையில். பணமும் என் பையில். இதற்க்கு ஒரே வழி அந்த ஏரியாவில் இருக்கும் கல் குவாரிகளை நிரந்தரமாக மூடுவதுதான். கனிம வளத்துறை என்ன செய்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி துறை என்ன செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
சிவா - ஜெட்டாஹ்,சவுதி அரேபியா
14-அக்-201012:06:28 IST Report Abuse
சிவா உலக அதிசயமான தாஜ் மகாலை மாயாவதி இடம் இருந்து காபாற்றுவதர்கே தேசிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டியதாயிற்று. இதில் சித்தன்ன வாசல் எம்மாத்திரம்.
Rate this:
Share this comment
Cancel
Michael - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201010:39:54 IST Report Abuse
Michael புதுகை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள இந்த கல்குவாரிகளால், பூமி தோன்றிய காலம் முதல் பத்து ஆண்டுகளுக்கு முன் வரை அங்கிருந்த பல உயர்ந்த மலைகள் எல்லாம் இப்போது பூமி மட்டத்திற்கு கீழே உற்று நோக்கும் பெரும் பள்ளங்களாக மாறி விட்டன.எந்த கட்டுப்பாடும் இன்றி நாம் அழிவு செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டால் நமக்கு மிகுதியாக தேவைப்படும் போது என்ன செய்வது? இந்த கேள்வியை விட என்னை அதிகம் குடைவது, இந்த குவாரிகளால் அரசோ அல்லது அரசாங்கமோ பலனடையாமல், தனி மனிதர்கள் மட்டுமே பயனடைவதுடன் அவர்கள் பெரும் பலமடைவதுதான். பொதுப் பணத்தில் கயவர்களை உருவாக்குவது எந்த வகையில் நியாயம்? கர்நாடக ரெட்டி சகோதரர்களை கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்கள். இப்படிப்பட்ட கேடுகெட்ட பலசாலிகள் செய்யும் பெருந் தவறுகளை தட்டி கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பது பேராபத்து. சித்தன்ன வாசல் மலை அழிக்கப்பட்டால்!!!, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.... நாம் அழிகிறோம் என்றுதான் அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
பாலமுருகன் - புதுக்கோட்டை,இந்தியா
14-அக்-201010:37:57 IST Report Abuse
பாலமுருகன் ஏற்கெனெவே பாதிக்கு மேலே அழிஞ்சு போயிடிச்சு. எதுவும் முறையாக பாதுகாப்பதில்லை. நான் போன பொது ரொம்பவும் கஷ்டமா இருந்திச்சி. சமணர் படுக்கை ரொம்ப மோசமா இருக்கு. போற வழியில் ஆணுறை எல்லாம் கெடக்கிறது. பாதுகாக்க எந்த முயற்சியும் பண்ற மாதிரி தெரியல.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் - திருச்சி,இந்தியா
14-அக்-201009:49:28 IST Report Abuse
கார்த்திக் அரசியல் பக்க பலத்துடன் செயல்படுவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ......சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Vaidyanathan - Hyderabad,இந்தியா
14-அக்-201005:47:06 IST Report Abuse
Vaidyanathan நானும் 12 வயதில், சித்தன்ன வாசல் குகை படுக்கை, ஓவியங்களை பார்த்து வியந்து மகிழ்ந்து இருக்கிறேன் . இனி வரும் மக்களுக்கு இவை கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.