ஆசைநாயகியா, காமக்கிழத்தியா : சுப்ரீம் கோர்ட்டில் திடீர் சர்ச்சை| Dinamalar

ஆசைநாயகியா, காமக்கிழத்தியா : சுப்ரீம் கோர்ட்டில் திடீர் சர்ச்சை

Added : அக் 23, 2010 | கருத்துகள் (5)

புதுடில்லி : திருமணமாகாமல் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்திய பெண், ஜீவனாம்சம் கோரிய வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீர்ப்பில் "ஆசை நாயகி' என்ற வார்த்தையை பயன்படுத்தினர். இதற்கு, அரசின் சீனியர் பெண் வக்கீல் ஒருவர் நேற்று பலத்த ஆட்சேபம் தெரிவித்தார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் தாக்கூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இப்பிரச்னையை எழுப்பிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறியதாவது: ஆசை நாயகி ("கீப்')என்ற வார்த்தையை தீர்ப்பில் பயன்படுத்தியது மிகவும் ஆட்சேபகரமானது. அந்த வார்த்தையை நீக்க வேண்டும். 21ம் நூற்றாண்டில், பெண்ணுக்கு எதிராக இப்படிப்பட்ட வார்த்தையை சுப்ரீம் கோர்ட் எப்படி பயன்படுத்த முடியும். தான் ஒரு ஆணை, ஆசை நாயகனாக வைத்திருப்பதாக ஒரு பெண்ணால் சொல்ல முடியுமா? சர்ச்சைக்குரிய வார்த்தையை நீக்கக் கோரி, இந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன்.

இந்த கோர்ட்டின் முன் ஆஜராக நான் விரும்பில்லை. நான் வாபஸ் பெறுகிறேன். நாட்டின் உயரிய நீதிமன்றம் பெண்களுக்கு எதிராக இப்படிப்பட்ட வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம். இவ்வாறு இந்திரா ஜெய்சிங் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ""கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வேண்டுமானால், இந்த வழக்கில் ஒரு பிரதிவாதியாக சேர்ந்து கொள்ளலாம்,'' என்றார்.

உடன் குறுக்கிட்ட மற்றொரு நீதிபதியான தாக்கூர், ""ஆசை நாயகி என்ற வார்த்தையை விட, "காமக்கிழத்தி' ("கான்குபைன்') என்ற வார்த்தையை பயன்படுத்தினால், சரியாக இருக்குமா?'' என்றார். இதற்கு பதில் அளித்த இந்திரா ஜெய்சிங்,""தீர்ப்பில் ஆசை நாயகி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது என்பதே எனது வாதம்,'' என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X